இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, October 08, 2009

புதிய திட்டம்

அக்டோபர் 09,2009

ராமநாதபுரம்: கணவன், மனைவியிடையே ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் புதிய திட்டம் அரசு சார்பில், தமிழகத்தில் முதன் முறையாக ராமநாதபுரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

குடும்ப பிரச்னைகளால் ஏற்படும் வன்முறை, தற்கொலை, மனவேதனை, பிரிவு போன்றவற்றை தடுக்கும் ஆலோசனை மையம் பெங்களூரில் உள்ளது. இங்கு பல்வேறு குடும்ப பிரச்னைகள் தீர்க்கப்பட்டு தம்பதியரிடையே சமரசம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் குடும்ப வன்முறை செயல்களை தவிர்க்கும் விதமாக இது போன்ற மையம் துவக்க அரசு முடிவு செய்து, ராமநாதபுரத்தில் மாவட்ட மனநலத்திட்டம் சார்பில், தமிழகத்தில் முதல் முறையாக இத்திட்டம் செயல்படுத்தபட உள்ளது. "

மனநலம்' என்ற பெயர் வருவதால், பலரும் இதில் பங்கேற்க தயங்கலாம் என்பதால், இத்திட்டத்துக்கு "குடும்ப நல ஆலோசனை மையம்' என பெயரிடப்பட்டுள்ளது. கணவன்-மனைவி இடையேயான அனைத்து பிரச்னைக்கும் இங்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும். ஆலோசனையின் போது குடும்ப நபர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். பிரச்னை என்ன, அதனால் வரும் பாதிப்பு, பாதிப்பானது யாரை சார்ந்திருக்கும், இதற்காக யாருடைய தன்மையை மாற்ற வேண்டும் என்ற கோணத்தில், இதில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
விரும்பும் பட்சத்தில் கணவன், மனைவி மட்டுமின்றி அப்பா - மகன், அண்ணன் - தங்கை என மற்ற உறவுகள் இடையேயான பிரச்னைகளுக்கும், இங்கு கவுன்சிலிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மனநல டாக்டர் பெரியார் லெனின் கூறுகையில், ""இன்று குடும்பத்தில் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளால் தான் வன்முறை அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு இந்த ஆலோசனை மையம் அக்.,10 முதல் ஆரம்பமாகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இதற்காக பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரை தொடர்ந்து தமிழகத்தில் முதன்முறையாக இங்கு தான் தொடங்கப்படுகிறது,'' என்றார். மனநல ஆலோசகர் அசரப்அலி உடன் இருந்தார்.

============================

போலிசும், கோர்ட்டும், தவறான சட்டங்களும் தலையிடாதவரை எல்லா குடும்பமும் நன்றாகவே இருக்கும்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.