சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, October 06, 2009

மோசடி வழக்கறிஞர்

சட்டப் படிப்பு முடிக்காமல் வழக்கு நடத்தி மோசடி

Dinamalar: அக்டோபர் 07,2009

Important incidents and happenings in and around the world மதுரை: சட்டப் படிப்பு முடிக்காமல் நான்காண்டுகளாக மதுரை கோர்ட்டில் வழக்கு நடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கிருஷ்ணமூர்த்தி(41) போலீசில் ஒப்படைக்கப்பட்டார். மதுரை வளர்நகரைச் சேர்ந்த இவர், பி.இ., எம்.ஏ., பி.எல்., படித்ததாகக் கூறி ஐகோர்ட் கிளை, மாவட்ட கோர்ட்டில் நான்கு ஆண்டாக வக்கீலாக இருந்தார்.

யாரிடமும் ஜூனியராக இல்லாமல் அவரே வழக்குகளை நடத்தினார். சந்தேகமடைந்த வக்கீல் சங்க நிர்வாகிகள், மதுரை சட்ட கல்லூரியில் விசாரித்தனர். கடந்த 23ம் தேதி தான் சட்டக் கல்வியை முடித்ததும், வரும் 21ம் தேதி நடக்கவுள்ள, "பார் கவுன்சில்' உறுப்பினர் பதிவுக்கு விண்ணப்பித்ததும் தெரிந்தது. "பெங்களூரில் எல்.எல்.பி., முடித்து வக்கீலாக உள்ளதாகவும், கூடுதல் தகுதியாக பி.எல்., படிப்பதாகவும்' சக மாணவர்களிடம் கூறியுள்ளார். இவர் மீது ஐகோர்ட் பதிவாளர் அமீர்ஜானிடம் வக்கீல்கள் முத்துகுமார், அருண்குமார் ஆகியோர் ஜூலை 30ம் தேதி புகார் செய்தனர்.

மனு சி.பி.சி.ஐ.டி.,க்கு அனுப்பப்பட்டு விசாரணை நடக்கிறது. இதுதெரிந்த கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாக இருந்தார். வக்கீல் சங்கத்தினர் கண்காணித்த நிலையில், நேற்று இவர் கோர்ட்டில் ஸ்டாம்ப் வாங்கிய போது பிடித்தனர். விளக்க கடிதம் பெற்றுக் கொண்டு, சங்க பொதுக்குழுவில் விவாதித்தனர். மூத்த வக்கீல்கள் பேசுகையில், ""பார் கவுன்சிலில் இவர் பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். இதுபோன்று பலர் உள்ளனர். அவர்களையும் களை எடுக்க வேண்டும்,'' என்றனர். செயலர் ஏ.கே.ராமசாமி கூறுகையில்,"வக்கீல்கள் போராட்டத்தின் போது போலீசாரை தாக்கும் செயல்களில் இவர் ஈடுபட்டதால், சந்தேகத்தின்படி விசாரித்தோம். ஐகோர்ட் கிளை வக்கீல் சங்க துணை செயலர் எனக் கூறியும், போலி பதிவு எண் கொடுத்தும் மோசடி செய்துள்ளார். இவர் மீது பார் கவுன்சில் தலைவர், போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ய உள்ளோம். இவரது பி.இ., எம்.ஏ., சான்றுகளையும் பரிசீலிக்க வேண்டும்,'' என்றார். சங்க தலைவர் தர்மராஜ், செயலர் முன்னிலையில் அண்ணாநகர் போலீசில் கிருஷ்ணமூர்த்தி ஒப்படைக்கப்பட்டார்.
==========================================
ஆயிரக்கணக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு ரசீது, வருமான வரி போன்ற எந்த கணக்கும் இல்லாமல் செய்யக்கூடிய ஒரே தொழில் இது தான். சட்டம் படிக்காமலே அல்லது படித்த சட்டங்கள் மறந்து போனாலும் வீட்டிலிருந்தபடியே பொய் 498A-டெம்ப்ளேட் (Template) கேசுகளை எழுதித்தந்து ஒரு டெம்ப்ளேட் புகார் எழுத இவ்வளவு என்று பிஃக்சுடு ரேட் (Fixed Rate) நிர்ணயித்து குடிசைத்தொழில் போல செய்யக் கூடிய தொழிலும் இது தான். மேலும் 498A போன்ற கேசுகளில் அப்பாவிகள் சிக்கும் போது பெயில் (Bail) வாங்குவதற்கு இவ்வளவு என்று பணயக்கைதியிடம் பிணைத்தொகை போல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பட்டப்பகலில் எந்த வித பயமும் இன்றி பணம் சம்பாதிக்கக்கூடிய தொழிலும் இது தான். அப்படியிருக்க இந்த தொழில் செய்ய போலிகள் ஆசைப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. நான்கு ஆண்டுகள் ஒரு போலியான ஆசாமி நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆஜரானது கூட தெரியாத நீதிமன்றத்தின் நிலை எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.