சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, October 01, 2009

பெண்கள் நலத்துறை

கள்ளக்காதலி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு தூண்டிய காதலன் கைது
அக்டோபர் 02,2009

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கள்ளக்காதலி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு தூண்டிய காதலன் கைது செய்யப்பட்டார். பெருமாள்சேரியை சேர்ந்த ராக்கப்பன்(35) மனைவி பழனியம்மாள்(25). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வாழ்ந்து வந்தபோது ஆலத்தூர் பேச்சியப்பனுடன் தொடர்பு ஏற்பட்டது.

சிறிது காலத்திற்கு பின் அவருடைய தொடர்பை துண்டித்த பழனியம்மாளுக்கு ஸ்ரீவி., மல்லபுரம் தெருவை சேர்ந்த மாரிகுரு(29)வுடன் தொடர்பு ஏற்பட்டது. இவர்களது மகன் ஹரி கிருஷ்ணன் (1). தற்போது பழனியம்மாள் ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் மாரிகுரு தனது அக்கா மகள் தாமரை செல்வி(22)யை திருமணம் செய்ததால், பழனியம்மாளுடன் தொடர்பை துண்டித்தார்.

இதனால் பழனியம்மாள் சாப்பாட்டிற்கு வழியின்றி கஷ்டபட்டு வந்தார். நேற்று முன்தினம் காலை மாரிகுரு வீட்டிற்கு சென்ற பழனியம்மாள் சாப்பாட்டு செலவுக்கு பணம் தருமாறு கேட்டார். ஆத்திரமடைந்த மாரிகுரு, பழனியம்மாள் மீது மண்ணெண்ணெயை ஊற்றினார். வெறுப்படைந்த பழனியம்மாள் தன் உடல் மீது தீ வைத்து கொண்டார். ஆஸ்பத்திரியில் பழனியம்மாள் சேர்க்கப்பட்டார். டவுன் இன்ஸ்பெக்டர் சிவலிங்க சேகர், மாரிகுருவை கைது செய்தார்.

============

இந்தப் பெண் ஒவ்வொருமுறையும் ஆளை மாற்றும்போதும் நீதிமன்றத்தில் முறையாக விவாகரத்துப் பெற்று இந்திய சட்டங்களை மதித்து தனது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறாரா? இது போன்ற பெண்களுக்கு பெண்கள் நலத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.