கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்
திண்டுக்கல் : கள்ளக்காதலனுடன் பத்து மாதங்களுக்கு முன்பு ஓடிப்போன தாயை கோர்ட்டில் பார்த்ததும், அவரது இரண்டு ஆண் குழந்தைகளும் கதறி அழுது தங்களுடன் வருமாறு அழைத்தனர். திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிமந்தையம் செரியன்நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவருக்கும் உஷா (27) என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சாம்பிரசன்னா (5), சுதன் (3) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நர்ஸ் வேலை பார்த்த உஷா தான் படிக்கும் போதே காதலித்த பிரகாஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் ஓடிப்போனார். இது குறித்து சாமுவேல் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
சாமுவேல் தனது நண்பர்கள், உறவினர்களுடன் சென்று திருவாரூரில் காதலனுடன் தங்கியிருந்த உஷாவை அழைத்து வந்து கள்ளிமந்தையம் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் நேற்று உஷாவை திண்டுக்கல் ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில், கணவனுடன் செல்ல மறுத்த உஷா, தன் தாய் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார். கோர்ட் முடிந்து வாசலுக்கு வந்த தாயைப் பார்த்ததும், இரு குழந்தைகளும் கதறி அழுதன. "அம்மா நம்ம வீட்டுக்கு வாம்மா, அப்பாவுடன் சேர்ந்து நாலு பேரும் ஒன்றாக இருக்கலாம்'' என அழைத்தனர். இதனை கேட்டு கோர்ட் ஊழியர்களும், அங்கிருந்தவர்களும் கண் கலங்கினர். ஆனாலும் உஷா தன் கணவனுடன் செல்ல மறுத்து விட்டார். உஷா காதலனுடன் செல்வதற்காகவே என்னுடன் வர மறுக்கிறார். அவரை அழைத்து வந்த காதலன் பிரகாஷ் கோர்ட்டிற்கு வந்திருப்பதாக சாமுவேல் தெரிவித்தார்.
உஷாவிடம் கேட்ட போது, ""என் கணவர் என்னிடம் பணம் கேட்டு அடித்து தகராறு செய்ததால் நான் வெறுத்துப்போய் தாய் வீட்டிற்கு செல்கிறேன். எனக்கு படிக்கும் காலத்தில் இருந்தே காதலன் இருப்பது என் குடும்பத்தாருக்கும்,கணவன் குடும்பத்தாருக்கும் தெரியும்.தற்போது காதலன் வேறு பெண்ணை மணந்து அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், அவருடன் செல்ல வாய்ப்பு இல்லை. நான் என் தாய் வீட்டில் தங்கப்போகிறேன்,'' என்றார்.
=======================
வரும் காலங்களில் தாய்மை என்பதற்கு அர்த்தமே அகராதியில் கூட இல்லாமல் போகப்போகிறது. அதற்கான அறிகுறிகள் நாடு முழுவதும் இப்போது தென்படுகிறது. அதற்கான வளர்ச்சியை துரிதப்படுத்த பல துறைகள் IPC498A, DV, Dowry Prohibition Act போன்ற உரங்களைப்போட்டு வளர்த்துக்கொண்டிருக்கின்றன.
4 comments:
தாங்கள் யார் என அறிய ஆவலாக உள்ளேன். இது போன்ற சிறப்பான வடிவமைப்பு, செய்திகள் அருமையாக உள்ளன. என் முகவரிக்கு (nalanselvan@hotmail.com)உங்களை பற்றிய விபரம் தயவு செய்து அனுப்புங்கள் .
அன்புடன்
கலை செல்வன்.
நண்பரே, உங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி!
தங்கள் பெயர் கூற முடியுமா? தொடர்பு எண் தெரிவிக்க முடியுமா? நண்பரே !
அன்புடன்
கலை செல்வன்
இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம்
உங்களின் ஈமெயிலுக்கு செய்தி அனுப்பியிருக்கிறேன்.
Post a Comment