சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, October 11, 2009

உங்களுக்குப் புரியுமா?

இந்த வார வாரமலரில் வந்துள்ள கேள்வி பதில்.

அடுத்தடுத்து பிரசுரமாகியுள்ள இந்த கேள்வி பதில்களைப் பாருங்கள். எவ்வளவு முரண்பாடுகள். இல்லாத விஷயத்திற்கு சந்தேகப்படும் மனைவியிடம் கணவன் அடங்கி நடக்க வேண்டுமாம். ஆனால் அதே சமயம் விவாகரத்துக்கள் அதிகமாவதற்குக் காரணம் பெண்கள் பொறுமையின் எல்லையையும் தாண்டி கொடுமை அனுபவிக்கின்றனராம்!
======================
ஆர்.ஜெயராம், பழனி: எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் மனைவியை அனுசரித்துப் போவது எப்படி?

சிறந்த நடிகனாகிவிட வேண்டும் என்கிறார் லென்ஸ் மாமா... இல்லாதது குறித்தெல்லாம் சந்தேகம் கொள்ளும் மனைவியிடம், "சரண்டர்' நாடகம் தான் போட வேண்டும் என்று மேலும் கூறுகிறார் அவர்... அன்றேல், குடும்ப நிம்மதி கெட்டு விடுமாம்!
* * *
எம்.பத்மநாபன், சென்னை: அயல்நாடுகளுக்கு நிகராக நம் நாட்டிலும் பெருகி வரும் விவாகரத்துக்கள், நம் பெண்களின் சுதந்திரத் தன்மையைக் காட்டுகிறதா, அடக்கமின்மையை வெளிப்படுத்துகிறதா?

இரண்டுமே இல்லை! சகிப்புத் தன்மையின் சிகரங்கள் நம் இந்தியப் பெண்கள்... அவர்களே விவாகரத்துக்கு துணிந்து விடுகின்றனர் என்றால், பொறுமையின் எல்லையை தொட்டு விட்டனர் என்றே கொள்ள வேண்டும்!
* * *
==============================

இந்த செய்திகளில் உள்ள அப்பட்டமான உண்மை எத்தனை பேருக்குப் புரியும்? கேட்பவர்கள்_ இருக்கும் வரை இது போன்ற செய்திகளும் வந்து கொண்டே தான் இருக்கும். பல அப்பாவி கணவர்களும் அவர்களது குடும்பங்களும் சிறையில் தள்ளப்பட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.

இப்படித்தான் நாட்டில் பல பெண்ணடிமைவாதிகள் (= பெண்களுக்கு அடிமையான போலியான பெண்ணுரிமைவாதிகள்) பெண்ணுரிமை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.