இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, December 26, 2011

திருமண வரதட்சணைக்கு இன்சூரன்ஸ் உண்டா?


புதுடில்லி : திருமண விருந்தின் போது உணவு விஷமாகி, உறவினர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டால் கூட, இழப்பீடு கோரும் வகையில், இன்சூரன்ஸ் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என கூறப்பட்டாலும், இதற்காக, சாமானிய மக்களும், பல லட்ச ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. பல்வேறு சிரமங்களுக்கிடையே கூடி வரும் திருமணம், கடைசி நேரத்தில் ஒரு சில காரணங்களால் தடைபட்டு, ஏராளமான பணம் வீணாக நேரிடுகிறது. இந்த சிரமத்தை போக்க, "ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்ட்' நிறுவனமும், "பஜாஜ் அலையன்ஸ்' நிறுவனமும், திருமண இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

நான்கு வகை பிரிவுகளில், இன்சூரன்ஸ் செய்வோருக்கு, இரண்டு லட்சம், நான்கு லட்சம், ஆறு லட்சம் மற்றும் எட்டு லட்ச ரூபாய் வரை, இழப்பீடு அளிக்கப்படுகிறது. இதற்காக, 4 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை, பிரீமியம் செலுத்த வேண்டும்.

தீ விபத்து மற்றும் வேறு வகையான விபத்துகள், கொள்ளை, திருட்டு ஆகிய காரணங்களால், திருமணம் தடைபட்டால், இந்த இழப்பீடு வழங்கப்படும். திருமண விருந்தின் போது, உணவு விஷமாகி விருந்தினர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் கூட, இழப்பீடு பெற இந்த இன்சூரன்ஸ் திட்டங்கள் வழி செய்கின்றன.

சில மரணங்களாலோ, மணமக்கள் காயம் பட்டு, அதனால் திருமணம் தடை பட்டாலோ அல்லது தள்ளி வைக்கப்பட்டாலோ, இழப்பீடு பெற முடியும். ஆனால், மணமக்களுக்கிடையே ஏற்படும் தனிப்பட்ட முறையிலான கருத்து வேறுபாட்டால் திருமணம் தடைபட்டால், இந்த இழப்பீடு பொருந்தாது.



1 comment:

Anonymous said...

well said.

http://498aponnu.blogspot.com

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.