சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, March 14, 2010

சாதிகள் இல்லையடி பாப்பா!

இது திருமணச் சந்தையில் நடக்கும் சாதிய வியாபாரம்


அரசியல் மேடைகளில் புரட்சி முழக்கமிடும் தலைவர்களால் உண்மையாகவே சாதியை ஒழிக்க முடியுமா? இளம் வயதிலேயே பிஞ்சு மனங்களில் சாதியை விதைக்கும் மையங்களாக இருக்கும் பள்ளிகளில் கூட
சாதியை இன்னும் ஒழிக்க முடியவில்லை. சாதி இல்லாமல் அரசியல் தான் நடத்த முடியுமா? இருக்கின்ற சாதிகள் போதாது என்று இப்போது அரசியல் லாபத்திற்காக இடஒதுக்கீடு என்ற பெயரில் "பெண்” என்ற புதிய சாதியை உருவாக்கும் முயற்சியில் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் முழுமூச்சுடன் இறங்கியிருக்கிறார்கள். தற்போது அரசியல் சந்தையில் “பெண்” என்ற சாதிய வியாபாரம் தான் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

இதுவரை சாதியின் பெயரால் மக்களைப் பிரித்து தொழில் நடத்திவந்த அரசியல்வாதிகள் கடைசியில் மனிதஇனத்திற்குள்ளேயே ஒரு தனி சாதியை உருவாக்கும் வழியைக் கண்டுபிடித்து பெண்களையே ஒரு தாழ்த்தப்பட்ட சாதியாக்கி லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதன் பின்னணியில் இருக்கும் கொடிய உண்மையை புரிந்துகொள்பவர்கள் எத்தனை பேர்?

தினமலர் மார்ச் 14,2010

ராஜ்ய சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதும், பத்திரிகையாளர்கள் 10, ஜன்பத் சாலையிலுள்ள சோனியாவின் வீட்டிற்கு படையெடுத்தனர். இந்த மசோதா நிறைவேறுவதற்கு, காரணகர்த்தாவான சோனியாவை, பேட்டி எடுக்க முயன்றனர். பிரபல ஆங்கில "டிவி' சேனல்களுக்கு பேட்டியளித்தார் சோனியா. இந்த சேனல்களின் நிருபர்கள் அனைவருமே பெண்கள். ஒரு ஆண் நிருபர், சோனியாவை பேட்டி காண விரும்பினார். "இது மகளிர் மசோதா எனவே, பெண்களுக்குத்தான் முன்னுரிமை, உங்களுக்குப் பேட்டி கிடையாது...' என்று சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டார் சோனியா. நொந்து போன அந்த நிருபர், "பார்லிமென்டில்தானே இட ஒதுக்கீடு... பேட்டி கொடுப்பதற்குமா?' என்று கேட்க. சோனியா பதிலே சொல்லாமல் சிரித்து மழுப்பி விட்டார்.

எம்.பி.,க்களுக்கு எஸ்.எம்.எஸ்.,சில் உத்தரவு: பார்லிமென்டில் எந்த ஒரு விஷயத்தின் மீது ஓட்டளிப்பு நடந்தாலும், அதில் எப்படி ஓட்டளிக்க வேண்டும் என்பது குறித்து கட்சிகள், தங்கள் எம்.பி.,க்களுக்கு, "விப்' எனப்படும் உத்தரவை அனுப்பும். இதை மீறினால், எம்.பி., பதவி பறிபோகும். வழக்கமாக பேப்பர் மூலமாக அனைத்து எம்.பி.,க்களுக்கும், இந்த, "விப்' போகும். ஆதரவாக ஓட்டளியுங்கள் அல்லது எதிர்த்து ஓட்டளியுங்கள் என்று, மூன்று வரியில் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும், மொபைல் என்பதால் நிலைமை மாறிவிட்டது. எம்.பி.,க்களுக்கு எஸ்.எம்.எஸ்.,சில் "விப்' அனுப்பப்படுகிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஓட்டளிக்க காங்கிரசும், பா.ஜ.,வும், பேப்பரில், "விப்' அனுப்பாமல், எஸ்.எம்.எஸ்., அனுப்பியது. சட்டப்படி எஸ்.எம்.எஸ்., விப் செல்லாது. ஆனாலும், சுலபமாக எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம் என்பதால், கட்சிகள் இந்த முறையை மேற்கொள்கின்றன. மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில், தி.மு.க.,வும் எஸ்.எம்.எஸ்., முறையை பின்பற்றியது. "வழக்கம் போல பேப்பர் முறையை பயன்படுத்த வேண்டும்; எதற்கு எஸ்.எம்.எஸ்.,' என, சில தி.மு.க., எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர்.

மகளிர் மசோதாவால் இனி காங்கிரசுக்கு பிரச்னை: மகளிர் மசோதா, இனிமேல் காங்கிரசுக்கு பெரும் தலைவலியை தரப்போகிறது என்பதுதான் டில்லி வட்டாரங்களில் பேச்சு. மகளிர் தினத்தன்று கொண்டு வந்த இந்த மசோதா, அடிதடியில் முடிந்தது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சீனியர் காங்கிரசாரும், பிரதமரும் சொல்ல, சோனியா பிடிவாதமாக இருந்தார். "எப்படியும் இந்த மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றியே ஆக வேண்டும். என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்' என்று, கட்சியினருக்கு கட்டளையே போட்டுவிட்டார். முலாயம் சிங் யாதவ், லாலு போன்றோர், பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ், பா.ஜ.,வினர், ஆதரவாக ஓட்டளித்தாலும், உள்ளுக்குள் நிறைய எம்.பி.,க்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பாக இருந்தனர். ராஜ்ய சபாவில் மசோதா நிறைவேறினாலும், மகளிர் மசோதா லோக்சபாவுக்கு வரும் போது, பெரும் பிரச்னை ஏற்படும் என்று கூறப்படுகிறது. பட்ஜெட்டை நிறைவேற்றிய பின், இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கலாம். சோனியா அவசரப்பட்டு விட்டார் என்று காங்கிரசுக்குள்ளாகவே பேசப்படுகிறது. மேலும், ராஜ்யசபாவில் காங்கிரசுக்கு மெஜாரிடி கிடையாது. எந்த ஒரு விஷயமானாலும், எதிர்க்கட்சிகள் தயவு தேவை. இனிமேல் முக்கிய மசோதாக்களை, மத்திய அரசு கொண்டு வந்தால் லாலு, முலாயம் கட்சிகள் எதிர்க்கும். அத்தோடு, பா.ஜ.,வும், தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும். வரும் நாட்களில் பார்லிமென்டில், காங்கிரஸ் பெரும் பிரச்னைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். "மகளிர் மசோதா, மத்திய அரசை வீக் ஆக்கிவிட்டது' என்று சீனியர் காங்கிரஸ் அமைச்சர்கள் புலம்புகின்றனர். இன்னொரு பக்கம், திடீரென மம்தா பல்டி அடித்துவிட்டார். மகளிர் மசோதாவை ஆதரிப்பதாக சொல்லிவிட்டு, கடைசியில் தன் வேலையைக் காட்டிவிட்டார். காரணம், அடுத்த வருடம் நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டசபை தேர்தல்தான். முஸ்லிம் மகளிருக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்பது, இவரது கோரிக்கை. முஸ்லிம் வாக்காளர்களை, தன் பக்கம் இழுக்கவே இப்படி.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.