சண்டிகார்: ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பெண் அதிகாரி ஒருவருக்கு, மோசடி வழக்கு ஒன்றில் ஓராண்டு சிறை தண்டனை வழங்குவதோடு, அவரின் பணிச் சலுகைகளை திரும்ப பெற வேண்டும்' என, ராணுவ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற
பெண் அதிகாரி மேஜர் டிம்பிள் சிங்லா(37). இவர், ராணுவத்தின் சட்டப் பிரிவில் பணியாற்றினார்.கடந்த 2006ம் ஆண்டு, டேராடூனில், ராணுவ வீரரான ஹவில்தார் சந்திரன் என்பவருக்கு எதிரான வழக்கு ஒன்றில், ராணுவ கோர்ட்டின் நடவடிக்கைகள் அவருக்கு சாதகமாக இருக்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், அவர் சந்திரனுக்கு ஒரு வக்கீலின் பெயரை பரிந்துரை செய்ததோடு, அவருக்கு ஆதரவான அதிகாரியான கேப்டன் கமுத் மெய்னி என்பவரை சந்தித்துள்ளார். இது, ராணுவ சட்டப் பிரிவு 52 மற்றும் 63ன் கீழ் குற்றமாக கருதப்படுகிறது.எனவே, வழக்கில் பாரபட்சம் காட்டியதாக டிம்பிள் சிங்லா மீது குற் றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை, ராணுவத்தின் மேற்கு பிரிவைச் சேர்ந்த கர்னல் சஞ்சீவ் ஜோஸ் என்பவர் விசாரித்தார்.இவ்வழக்கில், டிம்பிள் சிங்லா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஓராண்டு காலம் கடும் சிறை தண்டனை மற்றும் அவரின் பணிச்சலுகைகளை திரும்ப பெற, கர்னல் சஞ்சீவ் ஜோஸ் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment