சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, March 22, 2010

அமிலம் ஊற்றி காதல் வளர்க்கும் புதுமைப்பெண்

கள்ளக்காதலில் கற்புநெறிபோற்றி வந்த அப்பாவிப் பெண்கள் இப்போது நேர்வழிக்காதலிலும் ஒரு புதுமுறையை பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். அதுதான் வன்முறைக்காதல்.

இதுவரை இந்த சமுதாயத்தில் ஆண் என்பவன் எப்போதும் முரட்டுக்குணமுடையவன், குற்றம் செய்வதற்கென்றே பிறந்தவன் என்று
பல முட்டாள்கள் தானாக ஒரு கற்பனை செய்துகொண்டு ஒரு பெண் தன்னிடம் வந்து கண்களை கசக்கி நின்றால் உடனே ஐயோ பாவம் அபலைப் பெண்ணுக்கு கொடுமை செய்துவிட்டார்கள் என்று கூப்பாடு போட்டு ஆண்களை சிறையில் தள்ளவேண்டும் என்று புதிய புதிய சட்டங்களை இயற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்தக்காலத்தில் பல புத்திசாலிப்பெண்கள் இந்த முட்டாள்களின் தவறான எண்ணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு எல்லாவகை அட்டூழியங்களையும் செய்து வருகிறார்கள். குறிப்பாக நகரத்து படித்த மேல்தட்டு வர்க்கப் பெண்கள் அப்பாவிப் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு சட்டங்களை போர்வையாக்கிக்கொண்டு எல்லாவித குற்றங்களையும் செய்துவருகிறார்கள். அதனால் இவை வெளியுலகத்திற்கு தெரிவதில்லை. எல்லோரும் எப்போதும் பெண் என்றால் அப்பாவி என்ற தவறான எண்ணத்திலேயே தவறான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சுயநினைவூட்டுவதற்காகத்தான் இந்த செய்தி வந்திருக்கிறது.


===============================================

காதலனை வேறு பெண்கள் ரசிப்பதை விரும்பாமல் ஆசிட் ஊற்றிய காதலி கைது
தினமலர் மார்ச் 23, 2010

சென்னை : காதலனின் அழகை வேறு பெண்கள் பார்க்க விரும்பாத காதலி, அவர் மீது ஆசிட் ஊற்றி அழகை கெடுக்க முயன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

தன்னை காதலிக்காத பெண்ணிற்காக காலமெல்லாம் காத்திருந்த காலம் போய், காதலிக்காத குற்றத்திற்காக அந்த பெண்ணின் மீது ஆசிட் ஊற்றுதல், கொலை செய்தல் என, சமீபத்திய நிகழ்வுகள் இதற்கு சாட்சியாக உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தலை காதலில் பொறியியல் கல்லூரி விரிவுரையாளரை, காதலன் அவரது வீட்டிற்கே சென்று வெட்டி சாய்த்தான். சென்னையில் தன்னை, 'லவ்' பண்ணாத காரணத்திற்காக, ஒரு பெண்ணை முகத்தில் பிளேடால் கிழித்த சம்பவம் நாம் அறிந்ததே. ஆனால், நேற்று சென்னையில் நடந்துள்ள சம்பவமே வேறு. காதலித்து கரம் பிடிக்கும் வேளையில் காதலி, சின்னஞ்சிறு விஷயத்திற்காக ஆத்திரப்பட்டு காதலனின் மேல் ஆசிட்டை ஊற்றி, தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

சென்னை பட்டினப்பாக்கம், நார்ட்டன் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (20). இவர் இரண்டாண்டுகளுக்கு முன், தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக்., ஐ.டி., படித்தார். அப்போது, அவரது வகுப்பில் குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த நிலாய்(20) என்பவரும் சேர்ந்தார். இருவரும் காதலில் இணைய, சந்தோஷமாய் சுற்றித் திரிந்தனர். இது பெண்ணின் வீட்டிற்கு தெரிய வர, கடந்தாண்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிலாயின் தாத்தா இறந்துவிட, திருமணம் ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டது. முதலாண்டு முடித்தவுடன் ஸ்ரீவித்யா, கல்லூரிக்கு செல்வதை நிறுத்தி விட்டார். காதல் தொடர்ந்து வந்த நிலையில், கல்லூரியில் நடக்கும், 'பேஷன் ÷ஷா' ஒன்றில் கலந்து கொள்ள நிலாய் முடிவு செய்திருந்தார். இச்செய்தியை ஸ்ரீவித்யாவிடம் தெரிவித்தார். அதற்கு ஸ்ரீவித்யா, கலந்து கொள்ளக்கூடாது என தடுத்தார். இதுகுறித்து பேச வேண்டும் என நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு நிலாயை வரவழைத்தார். காதலியின் அழைப்பை ஏற்று வந்த நிலாய், மீண்டும் தான் இந்த பேஷன் ஷோவில் கலந்து கொள்ளப் போவதாக தெரிவித்தார். தான் பார்க்க வேண்டிய உடலை மற்ற பெண்கள் பார்க்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் ஸ்ரீவித்யா. காதலன் மீண்டும் வற்புறுத்தவே ஆத்திரமடைந்த ஸ்ரீவித்யா, வீட்டில் கழிவறை சுத்தப்படுத்த வைத்திருந்த, 'ஆசிட்'டை எடுத்து, காதலன் நிலாய் மீது ஊற்றினார்.

இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் நிலாய் அனுமதிக்கப்பட்டார். கழிவறை சுத்தம் செய்யும், 'ஆசிட்' என்பதால், ஆழமான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. காதலியை ஒன்றும் செய்ய வேண்டாம் என நிலாய் கேட்டுக் கொண்டதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று ஸ்ரீவித்யா மீது வழக்கு பதிந்த போலீசார், அவரை கைது செய்தனர். சின்னஞ்சிறு விஷயத்திற்காக ஆத்திரப்பட்டு, விரைவில் கைப்பிடிக்க இருக்கும் காதலன் மீது ஆசிட் ஊற்றிய பெண், தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

==========================================

மென்மையான பெண்மையும், பரிவான தாய்மையும் குணத்தில் இருக்கும் ஒரு பண்பு. இந்த குணம் ஆண், பெண் என்ற இருபாலருக்கும் இருக்கலாம். ஆண் பெண் என்ற வித்தியாசம் இந்த குணங்களால் வரவேண்டிய விஷயம்.

உடலமைப்பில் காணப்படும் வித்தியாசங்கள் வெறும் பாலினத்தை வேறுபடுத்திக் காட்டும் ஒரு அடையாளமே. பெண்பாலின அமைப்பில் இருக்கும் ஒரு உயிரி குணத்தில் பெண்ணாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது கொடிய கயமை மனம் படைத்ததாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு, தான் நினைத்ததை அடைய வேண்டும் என்பதற்காக கணவனின் ஒட்டுமொத்தக்குடும்பத்தையும் பொய் வரதட்சணை வழக்கில் சிறையில் தள்ளி சந்தோஷப்படும் குணம் பெண்மைக்குரிய குணம் கிடையாது. ஆனால் இந்த உயிரிகளுக்காக பல சட்டங்களை இயற்றியிருக்கிறார்கள் முட்டாள்கள்.

பரிவான தாய்மைக்குணம் ஒரு ஆண் பாலின உயிரினத்திற்குள்ளும் இருக்கலாம்.
ஆனால் இவர்கள் படும் இன்னல்களை செவிகொடுத்துக்கேட்பதற்குக்கூட யாரும் முன்வருவதில்லை. காரணம் இந்த சமுதாயம் பார்ப்பது வெறும் உடலமைப்பில் இருக்கும் பாலின வேறுபாட்டைத்தான். உண்மையான பெண்மைக்கும், தாய்மைக்கும் மரியாதை கொடுப்பதில்லை.

இந்த உண்மையை அறியாமல் சட்ட மூடர்களும், அரசியல் முட்டாள்களும் உடலமைப்பில் வித்தியாசமாக இருக்கும் பாலினத்திற்காக பல தவறான சட்டங்களை இயற்றி கயமை மனம் உள்ள பல பெண்பாலின உயிரினங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

மனிதனைப் படைத்த கடவுளுக்கு தாயுள்ளமும், தந்தையுள்ளமும் இருக்கும்போது கடவுள் படைத்த மனிதருக்குள்ளும் இந்த இரண்டு குணங்களும் இருக்காதா? ஆண் என்றால் தாயுள்ளம் இல்லாத கொடியவர் என்றும் பெண் என்றால் தாயுள்ளம் கொண்டவர் என்றும் சூழ்ச்சி செய்து மனிதமனங்களை உடலமைப்பால் பிரித்து சூழ்ச்சி செய்தது யார்? சட்டம் எழுதும் சதிகாரர்களா? அல்லது இதைப்பயன்படுத்தி ‘பெண்ணுரிமை’ என்றபெயரில் பணம் சம்பாதிக்கும் கூட்டங்களா?


இந்த உண்மையை மனித இனம்
என்று உணர்ந்துகொள்ளுமோ?
No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.