இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, August 29, 2011

ஊழலுக்கு எதிரான போராட்டம் தோற்றுவிட்டது!

பல ஆயிரக்கணக்கான தியாகிகள் இன்னுயிர் ஈந்து வாங்கிக்கொடுத்த சுதந்திரத்தையே ஊழல்வாதிகள் சிதைத்துவிட்டார்கள் . இப்போது ஊழலுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தையா வெற்றிபெறச் செய்துவிடுவார்கள்?

இப்போதுதான் சுடச்சுட ஊழலுக்கு எதிராக நாடு முழுதும் உண்ணாவிரதப் போராட்டமும் அமைதி வழிப்போராட்டமும் நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால், ஊழல்வாதிகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்களது வேலையை தவறாமல் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் விதமாக இரண்டு செய்திகள் வந்திருக்கின்றன.

ரூ.5,000 லஞ்சம்: பெண் எஸ்.ஐ., கைது
ஆகஸ்ட் 30,2011 தினமலர்


கிருஷ்ணகிரி : வரதட்சணை கொடுமை குறித்து மனைவி அளித்த புகாரில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தை கைது செய்யாமல் இருக்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, பர்கூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சரவணன், 35; இவரது மனைவி வசந்தி, 28. மூன்றாண்டுக்கு முன் திருமணமான இவர்களுக்கு, குழந்தை இல்லை. தம்பதியர் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குடும்பத் தகராறில் சரவணன், வசந்தியை அடித்துள்ளார். ஆத்திரமடைந்த வசந்தி, சரவணன் மற்றும் அவரது குடும்பத்தார், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, கடந்த 10ம் தேதி, பர்கூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.

இரு தரப்பினரையும் அழைத்து எஸ்.ஐ., சித்ரா, 32, விசாரித்தார். "வரதட்சணை கொடுமை வழக்கில், குடும்பத்தில் உள்ள அனைவரையும் கைது செய்தால், ஜாமின் எடுக்க ஒரு லட்ச ரூபாய் செலவாகும். எனக்கு, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தால், வழக்கு போடாமல் இருக்கிறேன்' என, சரவணன் குடும்பத்தாரிடம், எஸ்.ஐ., சித்ரா கூறினார். கடந்த 22ம் தேதி, விசாரணைக்கு பர்கூருக்கு வந்த சரவணன், 3,000 ரூபாயை சித்ராவிடம் கொடுத்து, "50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வசதியில்லை' எனக் கூறினார்.

அடுத்த நாள் கொண்டம்பட்டிக்கு நேரடியாகச் சென்ற எஸ்.ஐ., சித்ரா, "நான் ஊத்தங்கரை அடுத்த வெள்ளைகுட்டை கிராமத்தைச் சேர்ந்தவள்; பக்கத்து ஊர்காரர் என்பதால், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தால் போதும்' என, கூறியுள்ளார். இதுகுறித்து சரவணன், நேற்று காலை, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவிய 5,000 ரூபாயை, நேற்று மதியம், பர்கூர் ஸ்டேஷனில் இருந்த எஸ்.ஐ., சித்ராவிடம் லஞ்சமாக சரவணன் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடியாக ஸ்டேஷனுக்குள் நுழைந்து, லஞ்சம் வாங்கிய சித்ராவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மும்பை: தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாக வரி விதிப்பு நிர்ணயம் செய்வதற்காக ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவானவரித்துறை கமிஷனரை சி.பி.ஐ. போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மும்பை [...]


====

ஊழலை ஒழிக்க ஏற்கனவே பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை இதுவரை ஒழுங்காகச் செயல்படுத்தாததால்தான் நாடு இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறது. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.

புதுப்புது சட்டங்கள் வேண்டும் என்று கேட்டால் மட்டும் என்ன நடக்கப் போகிறது. சட்டப் புத்தகத்தில் புதிதாக ஒரு காகிதம் சேர்க்கப்படுமே தவிர இந்த சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுமா என்பது சந்தேகமே. ஏனென்றால் எத்தனை சட்டங்கள் வந்தாலும் அவற்றை செயல்படுத்தும் அதிகாரிகள் நேர்மையற்றவர்களாக இருந்தால் கடவுளால்கூட இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியாது. அதுவரை இந்திய ஊழல் ஒழிப்புச் சட்டங்கள் என்பவை “பாலுக்கு பூனையைக் காவல் வைத்த” கதையைப்போல்தான் இருக்கும்.

இந்தியாவில் மக்கள் பணியில் ஈடுபடும் அரசாங்க அலுவலர், மற்றும் அரசியல்வாதி இவர்கள் ஊழலில் ஈடுபட்டால் தூக்குதண்டனை என்று சட்டம் வராத வரை இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியாது. நேர்மையான தலைவர்களால் மட்டுமே இதுபோன்ற ஒரு சட்டத்தை இயற்ற முடியும். அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா?



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.