இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, August 04, 2011

இந்தியாவில் நடக்கும் நிரந்தரமான பெண்கொடுமை

பெண்களை பாதுகாக்கிறோம் என்று கேள்வி முறையில்லாமல் எல்லாவற்றிற்கும் சட்டம் போட்டு கையில் கிடைக்கும் அப்பாவிகளை தண்டித்துக்கொண்டிருக்கும் கூட்டத்திற்கு தினந்தோறும் நடக்கும் பெண்கொடுமை பற்றி தெரியுமா?

வாழ்வின் அடிப்படை வசதியான குடிநீரைக் கூட கொடுக்காததால் இப்படி தினந்தோறும் எல்லா இந்தியப் பெண்களும் துன்பத்திற்கு ஆளாகிறார்களே. இந்தத் துன்பத்திற்கு யார் காரணம்? இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இத்தனை ஆண்டுகளாகியும் இந்த துன்பத்திலிருந்து பெண்களுக்கு விமோசனம் கிடைக்க வழி செய்யாத குற்றவாளிகளை தண்டிக்க என்ன சட்டம் இருக்கிறது இந்த நாட்டில்?

வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டி வைக்காதீர்கள் என்று பாரதி அன்று பாடியது இதற்குத்தான் போலிருக்கிறது. எதிர்காலத்தில் இப்படி குடிநீருக்காக சாலையில் அமர்ந்து போராடவேண்டிய இழிநிலையில் பெண்களை தள்ளிவிடுவார்கள். அப்போது வீதிக்கு வந்து போராடவேண்டும் என்பதற்காகத்தான் பாரதி அப்படி முன்கூட்டியே பாடியிருப்பார் போலிருக்கிறது! எப்படியோ, பாரதி கண்ட கனவை கடைசியில் நனவாக்கி விட்டார்கள் இந்தியத் தலைவர்கள்.

தண்ணீர் கொடு....ஓசூர் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை பெண்கள் கண்டித்து காலி குடங்களுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. (தினமலல் செய்திப் படம் 5-8-11)


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.