சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, August 25, 2011

எங்கு பாவமன்னிப்பு கிடைக்கும்?

மக்களின் வாழ்க்கைத்தரத்தை இந்த இளவிற்கு இழிநிலையில் வைத்திருக்கும் கூட்டத்திற்கு எங்கு பாவமன்னிப்பு கிடைக்கும்?

உங்கள் வீட்டுப் பெண்களும் தினமும் இதுபோன்ற வேதனைகளை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பெண்ணுரிமை பேசும் போலிக்கூட்டங்கள் என்ன செய்திருக்கிறது இதுவரை?

நகரத்தில் பலகாசு பார்த்துவிட்டு போதையில் தடுமாறும் பெண்களுக்கு “குடியுரிமை” வாங்கித்தர பெண்ணுரிமை என்ற பெயரில் கூப்பாடு போடும் கூட்டம் அப்பாவிப் பெண்களின் குடிநீருக்கு என்ன செய்தார்கள்?

தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்
தினமலர் 26 ஆகஸ்ட் 2011


நரிக்குடி: நரிக்குடி பகுதியில் குளங்களில் தேங்கியுள்ள, சுத்திகரிக்கப்படாத மழைநீரை மக்கள் குடிக்க பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. நரிக்குடி ஒன்றியம் ஆண்டியேந்தல் ஊராட்சியை சேர்ந்த சாத்திசேரி, எஸ்.வல்லக்குளம், கிழாக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வி.புதூரிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்தத் தண்ணீர் உவர்ப்பு தன்மையாக இருந்தாலும் மக்கள் வேறு வழியின்றி அதையே குடித்து வருகின்றனர்.

இந்நிலையில், மோட்டார் பழுதடைந்ததால் அந்த உப்பு நீரையும் ஒரு வாரமாக வழங்கவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் கூறியும், நடவடிக்கை இல்லை. மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எஸ்.வல்லக்குளம் கிராம மக்கள் 2 கி.மீ., தூரம் நடந்து கிளவிகுளம் விலக்கிற்கு வந்து, மோட்டார் அறை அருகே சிந்துகின்ற தண்ணீரை குடிக்க எடுத்து செல்கின்றனர். சாத்திசேரி மக்கள் 2 கி.மீ., தூரம் காட்டுக்குள் நடந்து, அருகே உள்ள உப்பள ஓடை தண்ணீர் எடுத்து வருகின்றனர். தற்சமயம் மழை பெய்ததால், ரோட்டின் அருகே தேங்கியிருந்த மழைநீரையும் எடுக்கின்றனர்.

கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் இப்பகுதி மக்கள், மழை பெய்யும்போது வீட்டின் ஓடுகளில் இருந்து வழிகின்ற தண்ணீரை குடங்களில் சேமித்து குடிக்கின்றனர். ""எங்களுக்கு கண்மாய் தண்ணீர் கூட கிடைக்கவில்லை,'' என ஆண்டியேந்தல் மக்கள் புலம்புகின்றனர். இவ்வூர் மக்களுக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.