சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, August 13, 2011

பிச்சைக்காரர்களுடன் சேர்ந்துவிட்ட IPS அதிகாரி

பின்வரும் செய்தியில் பாருங்கள் மனைவியால் ஏற்பட்ட பிரச்சனையால் ஒரு அதிகாரி பிச்சைக்காரர் போல் மாறிவிட்டார். ஆனால் இந்த மோசமான நிலையில்கூட அவரைத் தேடி அலைவது அவரது தாயார் மட்டுமே.

நல்ல நிலையில் இருப்பவனை மனைவியால் மட்டுமே அழிக்க முடியும். அதேசமயம் எந்த நிலையில் இருந்தாலும் அன்பு செலுத்த அன்னையால் மட்டுமே முடியும்.

இதுதான் மனைவிக்கும் தாய்க்கும் உள்ள வேறுபாடு. ஆனால் இந்திய சட்டங்கள் மருமகள்களுக்கு மட்டுமே பாதுகாப்பு தருகின்றன. புனிதமான தாயுள்ளம் படைத்த பெண்களை சட்டங்கள் எப்போதும் இழிவுபடுத்தி பொய்வழக்குகள் மூலம் துன்புறுத்தி வருகின்றன.

தினமலர் 13 ஆகஸ்ட் 2011


புதுச்சேரி:பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி பீச் ரோட்டிலுள்ள தீயைணப்புத்துறை அலுவலகத்திற்கு எதிரில், பிச்சைக்காரர்கள் படுத்திருக்கும் பிளாட்பாரத்தில், டீசன்ட்டாக, ஆங்கிலத்தில் பேசும் ஒருவர், கடந்த 4 நாட்களாக தங்கியிருந்தார். இவரை பற்றி விசாரித்தபோது, பிளாட்பாரத்தில் படுத்திருப்பவர், பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி என்பது தெரிய வந்தது.

பிளாட்பாரத்தில் படுத்திருந்தவர், கல்கத்தாவைச் சேர்ந்த சக்கரவர்த்தி. ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வான பின், ஐதராபாத்திலுள்ள போலீஸ் அகடமியில் பயிற்சி முடித்தவர். பயிற்சிக்குப் பின், கடந்த 1983ம் ஆண்டு புதுச்சேரி போலீசில் பணியாற்றினார். பின், அருணாச்சல பிரதேசத்திற்கு மாற்றலாகி சென்று விட்டார்.

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த 1989ம் ஆண்டு பணியை ராஜினாமா செய்தார். போதை பழக்கத்திற்கு அடிமையான அவர், 5 நாட்களுக்கு முன் புதுச்சேரிக்கு வந்துள்ளார். சக்கரவர்த்தி ஏற்கனவே புதுச்சேரி போலீசில் பணியாற்றியிருந்ததால், அவரை அடையாளம் கண்டு கொண்ட போலீசார் சிலர், போலீஸ் தலைமையகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக அவர் படுத்திருக்கும் இடத்திலேயே, போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், சக்கரவர்த்தியின் தாயார் அர்ச்சனா, அவரை பல இடங்களில் தேடிவிட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன், புதுச்சேரி கோரிமேட்டிலுள்ள லாட்ஜில் தங்கி, தனது மகனை தேடும் பணியில் ஈடுபட்டார். பிளாட்பாரத்தில் சக்கரவர்த்தி படுத்திருக்கும் தகவல் தெரிந்தது. நேற்று காலை, அர்ச்சனா, மகன் இருந்த பிளாட்பாரத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு அவரை காணவில்லை. அவருடன் படுத்திருந்த மற்ற பிச்சைக்காரர்களிடம் போலீஸ் துணையுடன் விசாரித்த போது, அவர் எங்கேயாவது சுற்றிவிட்டு இரவு நேரத்தில் வந்து படுத்துவிடுவார் என்று தெரிவித்தனர்.

இதுபற்றி, வடக்கு எஸ்.பி.,சிவதாசனிடம் கேட்டபோது "பணியிலிருந்து ஓய்வு பெற்ற சக்கரவர்த்தியிடம் போலீஸ் தரப்பில் பேசி பார்த்த போது, அவர் தனது சொந்த ஊருக்குச் செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். தொடர்ந்து அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவரது தாயாருடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்' என்று தெரிவித்தார்.

====

இந்தியாவில் மனைவியர் போடும் பொய் வழக்குகளால் இதுபோல நல்ல உயர் தகுதியில் இருக்கும் பல அப்பாவிக் கணவர்கள் வாழ்வை இழந்திருக்கிறார்கள். அவர்களில் இந்த IPS-ம் ஒன்று. அவ்வளவுதான். இது செய்தியாக வந்திருக்கிறது. பலர் முகவரிகூட இல்லாமல் சீரழிந்துகொண்டிருக்கிறார்கள். இதுதான் ஒழுங்குமுறையற்ற இந்திய திருமண சட்டங்கள் சமுதாயத்திற்கு கொடுத்திருக்கும் பரிசு!1 comment:

காந்தி பனங்கூர் said...

கண்டிப்பாக ஆண்களை பாதுகாக்கவும் சட்டம் தேவை. பெண்களுக்கு சாதகமாக சட்டம் இருப்பதனாலேயே ஆண்களை மிரட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.