இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, August 06, 2011

நாம் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொள்ள ஆசையா?

இந்திய மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கு ஒரு நல்ல அருமையான சந்தர்ப்பம். நல்ல வசதிபடைத்தவர்கள், நம்மை ஆள்பவர்கள் தங்களுக்குத் தேவை என்றால் வெளிநாடுகளில் நல்ல மருத்துவத்தை நாடுகிறாகள். ஆனால், ஆளப்படும் வர்க்கம் தங்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்குமா என்றுகூட யோசிக்க முடியாமல் மருத்துவத்திற்குச் செல்லும் இடத்தில் தங்க வசதியில்லாமல் கழிவறையில் தங்கியிருக்கிறார்கள்.

எல்லா வளங்களும் உள்ள இந்திய நாட்டில் ஏன் நமது இந்திய சகோதர சகோதரிகள் இப்படி துன்பப்படுகிறார்கள் என்று கூட யோசிக்க மறுக்கும் மக்கள் கூட்டம் தங்களை ஆள்பவர்களின் நலனுக்காக உயிரையும் தியாகம் செய்யத்தயாராக இருக்கிறார்கள். நாம் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொண்டீர்களா? பின்வரும் மூன்று செய்திகளையும் பாருங்கள்.

தினமலர் செய்தி 7/8/11

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர், நியூயார்க்கில் புற்றுநோய் ...


மருத்துவமனையில் உள்ள காங்., தலைவர் சோனியா விரைந்து குணமடைய வேண்டி, நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்கள்,பிரார்த்தனையில் இறங்கியுள்ளனர். கர்நாடகமாநிலம் மங்களூரில் உள்ள கோகர்னேஸ்வரர் கோவிலில் நேற்று, தொண்டர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர். (தினமலர் செய்திப்படம்)

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அவலம்: கழிவறையில் வசிக்கும் நோயாளிகள்

புதன்கிழமை, ஆகஸ்ட் 03, 2011 மாலைமலர்

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அவலம்: கழிவறையில் வசிக்கும் நோயாளிகள்


புதுடெல்லி, ஆக.3-
நாட்டிலேயே மிகப்பெரிய ஆஸ்பத்திரியான எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இடவசதி இல்லாததால் நோயாளிகளும், நோயாளிகளின் உதவியாளர்களும் கழிப்பறையில் தங்கும் அவலநிலை உள்ளது.

ஆஸ்பத்திரியில் வசதிகள் இல்லாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் புலம்புகின்றனர்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம்ரதி (வயது 45) என்ற பெண் இதய வாழ்வு மாற்று ஆபரேசனுக்காக காத்திருக்கிறார். இவரும், குடும்பத்தினரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அருகே உள்ள ஆண்களுக்கான கழிவறையில் வசிக்கின்றனர்.

அதேபோல ரத்த புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ள ஹெம் குமாரி (25) மற்றும் அவரது
குடும்பத்தினரும் கழிவறையில்தான் வசித்து வருகின்றனர்.

இதுபற்றி குமாரி கூறுகையில், மரத்துக்கு அடியில் வசிப்பதை விட இங்கு இருப்பது வசதியாக உள்ளது. எங்களை சுற்றி நான்கு சுவர்களாவது மறைத்து இருக்கிறது அல்லவா? என்று ஆதங்கப்பட்டார்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.