சமூக நலத்துறை என்று ஒன்று நாட்டில் இருக்கிறது. அதன் பல பணிகளில் ஒன்று என்னவென்றால் திருமணங்களில் வரதட்சணை பரிவர்த்தனை நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும். அதுபோல வரதட்சணைப் புகார்கள் மனைவியரால் கொடுக்கப்படும்போது அதனை நன்கு விசாரணை செய்து காவல்துறைக்கு பரிந்துரை செய்வதா அல்லது வேண்டாமா என்று முடிவுசெய்யவேண்டும்.
1960களில் வரதட்சணைத் தடுப்புச்சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் இன்றுவரை அந்தக் கொடுமை இருப்பதாகப் பல புள்ளிவிபரங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்றது. ஆனால் சமூக நலத்துறை இன்றுவரை இந்த விஷயத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறது என்று புரியாத புதிராகவே இருக்கிறது.
அதுபோல பெண்குழந்தைகளுக்கு அரசாங்கம் சலுகைகள் அறிவித்தாலும் அதனை செயல்படுத்துவதும் சமூக நலத்துறைதான். ஆனால் அதிலும் லஞ்சம் ஊழல் என்று அநீதி தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது.
கீழுள்ள செய்தியைப் பாருங்கள் சிறு பெண் குழந்தைகளுக்கு நிதியுதவி கேட்ட தந்தையிடம் லஞ்சம் கேட்டிருப்பது ஒரு பெண் அதிகாரி! இப்படி பெண்களுக்கு எதிரியாக பெண்களே இருக்கும்போது வெறும் கண்துடைப்பிற்காக அரசாங்கம் பல தவறான பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை இயற்றி அப்பாவி ஆண்களை பலியிட்டு வெளியுலகிற்கு பெண்களுக்கு நன்மை செய்வது போல வேஷம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறது.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக அநீதியை இழைக்கும் கூட்டணியில் பங்கு வகிக்கும் அமைப்புகள் எவை தெரியுமா?
- மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம்
- தேசிய மகளிர் நல வாரியம்
- சமூக நலத்துறை
- காவல் நிலையங்கள் - குறிப்பாக மகளிர் காவல் நிலையங்கள்
- ஒருதலை பட்சமாக செயல்படும் நீதிமன்றங்கள்
- இவை எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் உள்துறை அமைச்சம், நீதித்துறை அமைச்சகம்.
சற்று கூர்ந்து கவனித்தால் இந்தக் கூட்டணி முழுவதும் ஒரு நெட்வொர்க் போல “பெண்கள் மேம்பாட்டு நிதி” என்ற நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டிருப்பது தெரியும். அந்த “நிதியைக்” கருத்தில் கொண்டு இந்த நெட்வொர்க் அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பல ஒருதலைபட்சமான சட்டங்களை உருவாக்கி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இதை உறுதி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டவைதான் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்ற பெயரில் உருவான பல சட்டங்கள்.
- வரதட்சணை தடுப்புச் சட்டம் (1961) - இதில் இதுவரை வரதட்சணை கொடுத்த எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட்டதில்லை.
- IPC498A (1984) - இந்த சட்டப்படி மனைவி சொல்வது மட்டும்தான் உண்மை. மனைவி பொய்யாகப் புகார் கொடுத்தால் தண்டிக்க எந்தவித பிரிவுகளும் கிடையாது.
- குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (2005) - இந்த சட்டப்படி பெண் என்பவள் எந்த வன்முறையும் செய்யத் தெரியாதவள். ஆண்தான் எப்போதும் குற்றவாளியாகக் கருதப்படுவான்.
- கள்ளக் காதல் உறவு (IPC497) - இந்த சட்டப்படி பெண்ணின் கள்ள உறவு என்பது புனிதமானது. இந்த தவறான உறவில் ஈடுபடும் பெண் தானே விரும்பி தவறு செய்தாலும் எந்த தண்டணையும் கிடையாது. ஆனால், ஆணுக்கு தண்டனை உண்டு.
பெண்கள் எந்தவிதமான, எல்லாவிதமான குற்றங்களும் செய்வார்கள். அதே சமயம் “பெண்” என்ற பெயரைப் பயன்படுத்தி பல கூட்டங்களும் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்தியாவில் “பெண்” என்பது ஒரு சாதாரணமான விஷயம் கிடையாது. அது ஒரு வியாபாரப் பொருள். பல குற்றங்களையும் கூசாமல் செய்வதற்கு அரசு அங்கீகாரம் கொடுத்துள்ள ஒரு இனம். அரசியல் வியாபாரிகளுக்கு ஒரு பகடைக்காய்.
இந்திய அரசியல் சந்தையில் "Woman is a Multipurpose Commodity". இடஒதுக்கீடு வியாபாரத்திற்கு பயன்படுத்தலாம், சிறப்புச் சட்டங்கள் என்ற பெயரில் சட்டங்கள் இயற்றி நிதி ஒதுக்கிக் கொள்ளலாம், “பெண்ணுரிமை” (Women Empowerment) வளர்ச்சி நிதி என்ற பெயரில் வெளிநாடுகளிலும், ஐ.நா. விடமும் பல கோடி நிதியுதவி பெறலாம், பெண்கள் வளர்ச்சி சிறப்புத்திட்டங்கள் என்ற பெயரில் பல “தொண்டு நிறுவனங்களுக்கு” நிதி ஒதுக்கலாம், வெளிநாட்டு வாழ் இந்தியப் பெண்கள்நல நிதி என்று தனி நிதி ஒதுக்கிக் கொள்ளலாம். இன்னும் பல சிறப்பான வியாபாரங்கள் இருக்கின்றன. இந்த எல்லாவிதமான வியாபாரத்திற்கும் கொடுக்கப்படும் விலை தவறான சட்டங்கள் மூலம் சிதைக்கப்படும் அப்பாவிக் கணவர்களின் வாழ்க்கையும், பல அப்பாவி குழந்தைகளின் எதிர்காலமும்.
தினமலர் 3 ஜூன் 2010
வெம்பக்கோட்டை : சிவகாசி அருகே, அரசு நிதி உதவியை வழங்க, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் கமலாதேவியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, எதிர்கோட்டையைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருக்கு இரு பெண் குழந்தைகள் இருப்பதால், அரசு வழங்கும் நிதி உதவியை பெறுவதற்காக, வெம்பக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் மே 5ம் தேதி விண்ணப்பித்தார்.
விண்ணப்பத்தை ஆய்வு செய்த சமூக நல விரிவாக்க அலுவலர் கமலாதேவி(55), "500 ரூபாய் கொடுத்தால் தான் மனுவை பரிந்துரைப்பேன்' எனக் கூறினார். லஞ்சம் வழங்காததால் மனுவை கிடப்பில் போட்டார். மீண்டும் ஜூன் 1ம் தேதி ஒன்றிய அலுவலகத்திலிருந்த கமலாதேவியை சந்தித்த சந்திரசேகரன், "எனக்கு பின்னால் கொடுத்த மனுக்களை பரிந்துரைத்து விட்டீர்கள். லஞ்சமாக 500 ரூபாய் கொடுக்க என்னிடம் வசதியில்லை. என் மனுவை பரிந்துரைத்து உதவ வேண்டும்' என கெஞ்சினார். ஆனால், "பணமில்லாமல் காரியமாகாது' என கமலாதேவி, கறாராக கூறிவிட்டார்.
இதையடுத்து சந்திரசேகரன், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். ரசாயன பவுடர் தடவி போலீசார் கொடுத்த ஐந்து 100 ரூபாய் நோட்டுகளை, அலுவலகத்தில் இருந்த கமலாதேவியிடம், நேற்று மதியம் 2.30 மணிக்கு வழங்கினார். பணத்தை வாங்கிய கமலாதேவியை டி.எஸ்.பி., சியமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், கணேஷ்தாஸ் ஆகியோர் சுற்றி வளைத்து, லஞ்ச பணத்தை பறிமுதல் செய்ய முயன்றனர். அதற்குள் கமலாதேவி, ரூபாய் நோட்டுகளை கிழித்து வாயில் போட்டு விழுங்க முயற்சித்தார். சுதாரித்துக் கொண்ட போலீசார், அவரது கைகளை தட்டி விட்டு கிழிந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர். பின்னர் கமலாதேவியை கைது செய்தனர்.
கமலாதேவியை கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்ற போது, தனக்கு நெஞ்சுவலிப்பதாக அவர் தெரிவித்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் வந்த ஆம்புலன்சில் அவரை ஏற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் கமலாதேவியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்க, போலீசார் காரில் அழைத்து சென்றனர்.
இந்த செய்தியில் இந்தப் பெண் ஆணை விட எந்தவிதத்தில் குறைவாக தவறு செய்திருக்கிறார்? ஆனால் சட்டங்கள் மட்டும் ஒருதலைபட்சமாக இருப்பது ஏன்?
No comments:
Post a Comment