இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, June 12, 2010

பொய் சொல்லலாம் வாங்க (இளம் மனைவியருக்கு மட்டும்)

இந்தியாவில் எல்லாமே பெண்களுக்கு ஆதரவாக இருப்பதால் எதுவேண்டுமானாலும் செய்யலாம், எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை இப்போது நவநாகரீக பெண்களிடையே வளர்ந்து வருகிறது. கீழுள்ள செய்தியில் பாருங்கள் விவாகரத்து வேண்டும் என்பதற்காக ஒரு பெண் பச்சையாக பொய் பேசியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன் குழந்தையின் மனதிலும் தந்தைக்கு எதிராக நஞ்சை விதைத்திருக்கிறார்.

இதுபோல நடப்பதற்கு முழுக் காரணம் இந்திய அரசாங்கத்தின் தவறான சட்டங்கள் ஆகும். பெண்கள் எது சொன்னாலும் அதை தலையில் தாங்கிக்கொண்டு உடனடியாக கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சிறையில் அடைக்கும் விதமாக இயற்றப்பட்டுள்ள வரதட்சணை தடுப்புச் சட்டங்களும். பிறகு அந்தப் பெண் பொய் கூறி கணவனின் குடும்பத்தை சிறையில் அடைப்பதற்காகவே சட்டத்தைப் பயன்படுத்தினார் என்று தெரிந்தாலும் அந்தப் பெண்ணை தண்டிக்காமல் தட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பதும்தான் இதுபோன்ற பொய் சொல்லும் பெண்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

இந்திய நாட்டு சட்டங்கள் தந்தையை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இந்திய நாட்டு சட்டங்களைப் பொறுத்தவரை தந்தை என்பவன் ஒரு "Sperm Donor" மட்டுமே. குழந்தைகளின் நலனில் அவனுக்கு எந்தவித உரிமையையும் இந்திய சட்டங்கள் கொடுப்பதில்லை. காவல், நீதிமன்றங்களில் கூட ஒரு பெண் குழந்தையைக் காட்டி கண்ணீர் விட்டால் ஐயோ பாவம் குழந்தையை எடுத்துக்கொள் என்று கூறி தந்தை என்பவன் அவனது குழந்தையைப் பொறுத்தவரை “ஒரு விருந்தாளி” (Visitation only) என்று தீர்ப்பளித்துவிடுகிறார்கள்.

கடைசியில் பொய் சொல்லி தான் பெற்ற குழந்தைகளின் வாழ்வை அழிக்கும் சதிகாரர்களாகத்தான் பெண்களை இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

பச்சைப் பொய் சொல்லும் மனைவி

தினமலர் 12 ஜூலை 2010

மும்பை : குழந்தைகள் "டிவி' பார்ப்பதற்கு தந்தை தடை விதித்ததில் தவறு இல்லை என்று மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.புனேயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மனைவி விவாகரத்து கேட்டு, மும்பை குடும்ப நல கோர்ட்டில் 2003 ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். மேலும், தனக்கு ஜீவனாம்ச தொகையாக 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும், தனது குழந்தைகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்றும் கோரினார்.

இதுதொடர்பாக தொழிலதிபரின் மனைவி, தனது மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு மும்பையில் கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி திருமணம் நடந்தது. ஆணும், பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, என் கணவர் வேறுபட்ட குணங்களைக் கொண்டவர் என்று தெரிய வந்தது.அவருக்கு சந்தேக குணமும் இருந்தது. என்னை உறவினர்களுடன் பேசக் கூட அனுமதிக்கமாட்டார். பிறந்த வீட்டுக்கும் அனுப்ப மாட்டார். எதிலும் லேசில் திருப்தி அடையமாட்டார்.

வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும், அதிலும் ஏதாவது குறை கண்டுபிடிப்பார். குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்வார். அவர்களை "டிவி' பார்க்கவே அனுமதிக்க மாட்டார். அப்படியே அனுமதித்தாலும் இந்தி நிகழ்ச்சிகளை மட்டும் சிறிது நேரம் பார்க்க விடுவார். பின்னர், முன்னதாகவே அவர்களை படுக்கைக்கு அனுப்பி விடுவார்.பொம்மைகளை வைத்து, மற்ற குழந்தைகளுடன் விளையாடவும் அனுமதிக்க மாட்டார். பொம்மைகளை எடுத்து மறைத்து வைத்து விடுவார். குழந்தைகளுக்கும், எனக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் அள வுக்கு அவரது நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

தனது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்காக, அவர் தனது 12 வயது மகளை கோர்ட்டில் ஆஜர் படுத்தினார். அந்த சிறுமியும், தாய்க்கு ஆதரவாக சாட்சியமளித்தாள். ஆனால், குறுக்கு விசாரணையின்போது அந்த சிறுமியின் பதிலில் அந்தத் தந்தை, அந்த குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருப்பது தெரிய வந்தது.எனினும், அந்த சிறுமி மைனர் என்பதால் அவளது சாட்சியத்தை கோர்ட் ஏற்கவில்லை. அந்த பெண்ணின் விவாகரத்து மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக கோர்ட் தனது தீர்ப்பில் கூறியதாவது:அந்த தந்தை குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும் தந்தையாகவும் இருந்துள்ளார். தனது குழந்தைகளை ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் வளர்க்க முனைந்துள்ளார்."டிவி' பார்ப்பதற்கும், எலக்ட்ரானிக் பொம்மைகளை பயன்படுத்துவற்கும் தடை விதித்ததில் எந்தவிதமான தவறும் இல்லை. குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டே, அவரது நடவடிக்கைள் இருந்துள்ளன. இதில் மன உளைச்சல் ஏற்படுவதற்கான முகாந்திரம் ஏதுமில்லை. மேலும் இந்தப் பெண் குற்றச் சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் கொடுக்கத் தவறிவிட்டார். துரதிஷ்டவசமாக, அந்த பெண் தனக்கு விவாகரத்து வேண்டும் என்பதற்காக தனது 12 வயது மகளை, தனக்கு ஆதரவாக கட்டாயப்படுத்தி பேச வைத்துள்ளார். அவரின் இந்த செயல் கண்டிக்கத் தக்கது.இவ்வாறு மும்பை ஐகோர்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.


விவாகரத்திற்காக சொல்லிய பொய்யை இந்தப் பெண் அப்படியே ஒரு புகாராக எழுதி காவல் நிலையத்தில் கொடுத்திருந்தால் இந்நேரம் IPC498A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்தக் கணவர் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருப்பார். அந்தப் புகார் உண்மையில்லை பொய் என்று சொல்வதற்கு நீதிமன்றத்திற்கு 5-6 ஆண்டுகள் ஆகியிருக்கும். அதற்குள் கணவன் ஒரு வழி ஆகியிருப்பான். ஆனால் கடைசியில் இதே தீர்ப்பைத்தான் சொல்லுவார்கள். பொய் சொன்ன பெண்ணை கண்டிக்கிறோம் என்று சொல்லிவிட்டு பத்திரமாக அந்தப் பெண்ணை வழியனுப்பி வைப்பார்கள். இதுதான் இந்திய நாட்டு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள். பொம்பள பொய் சொன்னால் தப்பு இல்லை என்று உறுதியாக நம்பும் ஒரே நாடு இந்தியா!

இப்படித்தான் இந்தியாவில் வரதட்சணை வழக்குகள் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற பிரிவுகளில் பதிவுசெய்யப்படுகின்றன.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.