தடைக்கல்லை படிக்கல்லாக மாற்றுவது, தடையைத் தாண்டிச் செல்வது போன்ற செயல்கள் எல்லாம் இப்போது பழைய ஸ்டைல். தடைக்கல்லை தகர்த்தெறிந்துவிட்டு செல்வதுதான் இப்போதைய புதிய ஸ்டைலாக கள்ளக்காதலில் நடைபெற்றுவரும் புரட்சி.
பெரம்பலூர் : கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தையடுத்த அத்தியூர் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ (40). இவரது மனைவி பெரியம்மாள் (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராஜூ வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பெரியம்மாளுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்குமிடையே கள்ளக்காதல் உருவானது. சமீபத்தில் ஊர் திரும்பிய ராஜூ, இதையறிந்து பெரியம்மாளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்தரமடைந்த பெரியம்மாள், ஏற்கனவே திட்டமிட்டபடி, கணவரை அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த சுரேஷ் மற்றும் பெரியம்மாள் இணைந்து இரும்பு கம்பியால் ராஜூவை அடித்து கொன்று, அருகிலிருந்த குப்பை மேட்டில் வீசிவிட்டு சென்றுள்ளனர். ராஜூ காணாமல் போனதையறிந்த உறவினர்கள் அவரை தேட, பிணமாக ராஜூ மீட்கப்பட்டார். மங்கலமேடு போலீசார் நடத்திய விசாரணையில், பெரியம்மாள் சுரேஷூடன் இணைந்து ராஜூவை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து பெரியம்மாளை போலீசார் கைது செய்தனர்.
கணவன் என்பவன மனைவியைப் பேணிக்காக்கவேண்டும் என்று இந்திய சட்டமும், தர்ம சாத்திரங்களும் சொல்கின்றன. மனைவி என்பவள் கணவனின் அன்பிற்கு அடிமையாக இருக்கவேண்டும் என்று சாத்திரங்கள் சொல்கிறது. ஆனால் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்று இந்திய சட்டங்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அதனால்தான் என்னவோ இந்த மனைவி இந்திய சட்டங்களை மதித்து சட்டத்தில் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை என்பதால் கள்ளக்காதலில் உல்லாசம் அனுபவித்திருக்கிறார்.
சட்டத்தையும் சாத்திரங்களையும் மதித்து மனைவியையும் குடும்பத்தையும் காப்பாற்றக் கணவன் வெளிநாட்டில் சம்பாதிக்கச் சென்றுள்ளார். மனைவி இந்திய சட்டத்தில் கள்ளக்காதலுக்கு தடைசொல்லவில்லை என்பதால் தனது வேலையை ஆரம்பித்திருக்கிறார். கணவனும் மனைவியும் இந்திய சட்டங்களை பின்பற்றி நடந்திருக்கிறார்கள். ஆனால், கடைசியில் கொல்லப்பட்டது அப்பாவிக்கணவன். இது தான் இந்தியா.
இந்தியாவில் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணுக்கு எந்த தண்டனையும் கிடையாது. இந்த அப்பாவிக் கணவனின் மரணத்திற்குக் காரணம் பெண்களை தவறு செய்யத்தூண்டும் விதமாக இருக்கும் இந்திய அரசின் தவறான சட்டங்கள்.
THE INDIAN PENAL CODE, 1860
Act Name : THE INDIAN PENAL CODE, 1860
Enactment date : [6th October, 1860.]
Download full act
IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man (எந்த கேனைப் பயலாவது தனது மனைவி அடுத்தவனுடன் சல்லாபம் செய்ய அனுமதி தருவானா? என்ன ஒரு விந்தையான சட்டம் ராமன் வாழ்ந்த நாட்டில்!), such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.
No comments:
Post a Comment