இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, June 30, 2010

கலியுக கண்ணகி: (கள்ளக்)கணவனுக்காக தீக்குளிக்க முயற்சி!

மென்யான மனம் படைத்தவர்கள் இந்த செய்தியை தயவு செய்து படிக்கவேண்டாம். படித்தால் உங்களுக்கு தலைசுற்றல் ஏற்படும்!


கலியுக கண்ணகி:
பெண் தீக்குளிக்க முயற்சி: திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு
ஜூலை 01,2010 தினமலர்

திருப்பூர்: திருப்பூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று விசாரணைக்கு வந்த பெண், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்; இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் வீரபாண்டி, ஜே.ஜே., நகரைச் சேர்ந்தவர் ஜீவா; பனியன் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகனும், மகளும் உள்ளனர்; இதே பகுதியில் பக்கத்து வீட்டில் வசிப்பவர் கண்ணையன்; பனியன் தொழிலாளி. இவரது மனைவி கலா (30). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பக்கத்து வீடுகளில் வசித்த ஜீவாவுக்கும், கலாவுக்கும் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ள உறவாக மாறியது. ஜீவா மனைவி சித்ராவுக்கு, தன் கணவர் மீதும், கலா மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்த சித்ரா சத்தம் போட்டுள்ளார்; கலாவுக்கும் சித்ராவுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 3ம் தேதி ஜீவாவும், கலாவும் காணாமல் போய்விட்டனர். சித்ராவின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டறிய முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு, மேட்டுப்பாளையத்தில் இருந்த இருவரையும், சித்ராவின் உறவினர்கள் திருப்பூருக்கு அழைத்து வந்துள்ளனர். தன் கணவர் ஜீவாவை மீட்டுத்தருமாறு, அவரது மனைவி சித்ரா திருப்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, கலா மற்றும் ஜீவா இருவரையும் அழைத்து வந்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று விசாரித்தனர். அப்போது, தனது நான்கு பிள்ளைகளுக்காக, கலாவை தன்னுடன் வந்து சேர்ந்து வாழுமாறு கண்ணையன் அழைத்தார். இதற்கு மறுத்த கலா, சித்ராவின் கணவர் ஜீவாவுடன் வாழ விரும்புவதாகவும், தனது நான்கு குழந்தைகளையும் அவர் காப்பாற்ற சம்மதித்து உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், மீண்டும் கண்ணையனுடன் சேர்ந்து வாழ்ந்தால், ஊர் கேவலமாக பேசும். சித்ராவும் அவரது உறவினர்களும் என்னை தகாத வார்த்தைகள் பேசி தாக்கவும் செய்வர் என்று கலா கூறியுள்ளார். இப்புகாரை விசாரித்த மகளிர் போலீசார், கலாவை அவரது கணவர் கண்ணையனுடன் சேர்ந்து வாழவும், ஜீவாவை, சித்ராவுடனும் சேர்ந்து வாழவும் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கலா, ஸ்டேஷனுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தார். ஸ்டேஷன் முன்பகுதியில் நின்று கொண்டு, வீட்டில் இருந்து பாட்டிலில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மகளிர் போலீசார், கலாவை தடுத்து, மண்ணெண்ணெய் பாட்டிலை கைபற்றினர். மீண்டும் ஸ்டேஷனுக்குள் அழைத்துச் சென்று பேச்சு நடத்தினர். டி.எஸ்.பி., ராஜா ஸ்டேஷனுக்கு வந்து விசாரணை நடத்தினார். தற்கொலைக்கு முயன்ற கலா மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு வந்த பெண், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம், திருப்பூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

===================

நல்ல வேளை. இந்திய வரதட்சணைப் பெண் தெய்வங்கள் (IPC498A, Domestic Violence Act, Dowry Prohibition Act) உள்ளே புகுந்து குழந்தைகளின் நலனுக்காக ஓடிப்போன மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பிய அந்த அப்பாவிக் கணவனை பொய்வழக்கு மூலம் தண்டிக்கவில்லை. அதுவரை சந்தோஷம்தான்.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.