இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, June 14, 2010

குடும்பங்களைக் கலைத்தால் என்ன நடக்கும்?

எல்லா பொய் வரதட்சணை வழக்குகளிலும் எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் புகாரை பதிவு செய்து அப்பாவிகளை கைது செய்வது. பிறகு விசாரணை எதுவுமே செய்யாமல் கடனே என்று விசாரணை அறிக்கை என்ற பெயரில் முதல் தகவல் அறிக்கையில் இருக்கும் விஷயத்தை அப்படியே காப்பி செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி அப்பாவிகளை அலைக்கழிப்பது போன்ற செயல்களை செய்தால் என்ன நடக்கும்? அடுத்தவர் குடும்பத்திலும் அப்பாவிக் கணவன், குழந்தை, வயதான பெற்றோர் என்று எல்லோரும் இருக்கிறார்கள் என்று அவ்வப்போது நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.


குடும்பச் சண்டை காரணமாக சென்னையில் பெண் போலீஸ்காரர் தீக்குளித்துத் தற்கொலை

Thats Tamil ஜூன் 14, 2010

சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீசில் முதல் நிலை காவலராக வேலை பார்த்தவர் சங்கீதா. இவரது கணவர் முத்து கிருஷ்ணன் எழும்பூர் போலீசில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

இருவருக்கும் திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. ராஜா அண்ணாமலைபுரம் வல்லீஸ்வரர் கார்டன் பகுதியில் வசித்து வந்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் சண்டை நடந்து வந்தது.

நேற்று முன்தினம் காலையும், கணவன் மனைவிக்கு இடையே சண்டை மூண்டது. மனைவியை திட்டி விட்டு முத்துக்கிருஷ்ணன் வெளியே போனார்.

கணவருடன் ஏற்பட்ட சண்டையால் மனம் உடைந்த சங்கீதா வீ்ட்டில் தீக்குளித்து விட்டார். உடல் கருகிய நிலையில் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குசிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் சங்கீதா.

சங்கீதாவின் வீட்டிலிருந்து ஒரு கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், எனது கணவர் என்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார் சங்கீதா.

இதுகுறித்து அபிராமபுரம் போலீஸாரும், ஆர்.டி.ஓ.வும் விசாரித்து வருகின்றனர்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.