சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, June 05, 2010

நெறியற்ற சட்டங்களால் சிதறும் குடும்பங்கள்

சமீபத்தில் செய்தித்தாளில் வந்த பரபரப்பான செய்தி, 2 வயதுக் குழந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன். செய்தித்தாளில் இந்த செய்திக்கு பல விதமான கருத்துக்கள் எழுதப்பட்டிருந்தது. செய்திச் சுருக்கத்தை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்:


விருதுநகர்: விருதுநகர் அருகே தாயாருடன் கள்ள தொடர்பு வைத்திருந்தவரின் இரண்டு வயது குழந்தையை கொலை செய்து, சாக்கில் கட்டி கழிப்பறை குழியில் புதைத்த, சிறுவன் சந்திவீரனை போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலம்: போலீசாரிடம் ஒப்புதல் வாக்கு மூலத்தில் சந்தவீரன் கூறியிருப்பதாவது: என் தாயார் ராமலட்சுமிக்கும், கணேசனுக்கும் தொடர்பு இருந்ததை கண்ணால் பார்த்து விட்டேன். கணேசனின் மனைவி அழகம்மாளிடம் கூறி கணவரை கண்டிக்குமாறு கூறியும், அவர் கண்டு கொள்ளவில்லை. அதனால் கணேசனை கொலை செய்யத் திட்டமிட்டேன். மே 25ம் தேதி அரளி விதை சாறு, தயார் செய்து ஒரு பாட்டிலில் எடுத்துக் கொண்டு கணேசன் வீட்டிற்கு சென்றேன். அங்கு கணேசனுக்கு சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு அழகம்மாள் வெளியே சென்றார். நான் சைக்கிளில் காற்று அடிக்க பம்பு எடுக்கும் சாக்கில், கணேசனின் வீட்டிற்குள் சென்று அவருக்காக வைத்திருந்த சாப்பாட்டில் அரளி விதை சாறை ஊற்றிவிட்டு ஓடி வந்து விட்டேன். பின்னர் கணேசனுக்கும், அழகம்மாளுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டதில் கணேசன் கோபத்தில் சாப்பிடாமல் வெளியே சென்றுவிட்டதால் எனது திட்டம் நிறைவேறவில்லை. இதில் இருந்தே கணேசனை பழி வாங்குவதற்காக அவரது மகனை கொலை செய்யத் திட்டம் தீட்டினேன். அப்போது தான் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு அழகம்மாள் கூறியதையடுத்து கொலையை அன்றே செய்ய முடிவு செய்தேன். எனது வீட்டு "செப்டிக் டேங்க்' இருந்த இடத்தில் குழியை ஆழப்படுத்தினேன். ஒரு கடையில் வெள்ளைத்தாள் வாங்கி, முதலில் மிரட்டல் கடிதம் எழுதினேன். இது திருப்தி அளிக்காததால் மீண்டும், எழுதிய கடிதத்திலேயே குழந்தை வேண்டுமென்றால், 30 லட்ச ரூபாயை திருமங்கலத்தில் வந்து கொடுத்து விட்டு குழந்தையை கன்னியாகுமரியில் பெற்றுக்கொள்ளவும் எனக் குறிப்பிட்டு அவரது வீட்டுப் படியில் கடிதத்தை போட்டேன். பின்னர் விளையாடிக் கொண்டிருந்த ஜோதி சங்கரனின் கழுத்தை இறுக்கி கொலை செய்து, பிணத்தை உரச்சாக்கில் போட்டேன். சாக்குடன் குழந்தையை, எனது வீட்டு "செப்டிக் டேங்க்' குழியில் போட்டு மூடினேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதற்குக் காரணம் வன்முறையைத் தூண்டும் திரைப்படங்கள் என்று சிலரும், அந்த சிறுவன் அரக்க குணம் கொண்டவனா என்று சிலரும், அந்த சிறுவனின் தாய் தான் காரணம் என்று பலரும் பலவாறு தங்களது மனதுக்குத் தோன்றியதை எல்லாம் Key Board மூலம் அடித்துத் தள்ளியிருந்தார்கள்.

இவர்களுக்குப் பெயர்தான் சராசரி அப்பாவி இந்தியர்கள். இந்த அப்பாவி இந்தியர்கள்தான் அரசாங்கத்தின் வியாபாரத்திற்கு சரியான இலக்கு. இவர்களைக் கருத்தில்கொண்டுதான் IPC498A, Domestic Violence, Dowry Prohibition Act போன்ற பல தவறான சட்டங்கள் நாட்டில் வியாபாரப்புழக்கத்தில் இருந்துகொண்டிருக்கிறது.

மேற்கண்ட செய்தியில் ஒரு சராசரி சிறுவனுக்கு தாயிடமிருந்து கிடைக்கவேண்டிய நற்குணங்களும் வழிகாட்டுதலும் கிடைக்கவில்லை.

அந்தப் பெண்ணின் உடற்பசிக்கு முறைப்படி திருமணம் செய்து மகனுக்கு அந்த உறவைப் பற்றி நேர்மையான வழியில் புரியவைத்திருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. ஆனால் அந்தப் பெண்ணிற்கு இருந்ததோ ஏற்கனவே திருமணமான ஆணுடன் கள்ளத்தொடர்பு. ஏனென்றால் இந்திய சட்டங்கள் பெண்களைத் தவறு செய்யத் தூண்டும் விதமாக இயற்றப்பட்டிருக்கிறது.

இந்திய சட்டங்கள் என்ன சொல்கிறது என்றால் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண் எந்தவிதத்திலும் குற்றவாளி இல்லை. ஆனால் கள்ளத் தொடர்பில் இருக்கும் ஆண் மட்டுமே குற்றவாளியாகக் கருதப்படுவான்.

சமுதாயத்திற்குப் புறம்பான இந்த உறவைப்பற்றி புகார் கொடுக்கவேண்டுமானால் இரண்டு வழிகள் மட்டும்தான் இந்திய சட்டத்தில் உள்ளன.

1. கள்ள உறவில் ஈடுபடும் பெண்ணின் கணவன் புகார் கொடுக்கலாம். அப்படியே புகார் கொடுத்தாலும் தன் மனைவியுடன் கள்ள உறவில் ஈடுபடும் ஆணின் மீது மட்டும்தான் புகார் கொடுக்க முடியும். மனைவி தானாக விரும்பி தவறு செய்தாலும் அந்தப் பெண்ணை இந்திய சட்டங்கள் தட்டிக்கொடுத்து ஆதரிக்கும்.

அந்த சிறப்புச் சட்டம்தான் 1860ல் எழுதப்பட்ட தேய்ந்துபோன IPC497. இந்த பழம் பஞ்சாங்கத்தைத்தான் இன்றும் நம்ம நாட்டு புத்திசாலிகள் பின்பற்றிவருகிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதையே நாம் ஏன் பின்பற்றவேண்டும் என்று யாராவது ஒரு அரசியல்வாதியாவது இன்றுவரை யோசித்தார்களா என்று தெரியவில்லை. யோசிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை இதுதான் “பெண் சுதந்திரம்” என்று இப்போது கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள் பல பெண்ணியவாதிகள்!497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man (எந்த கேனைப் பயலாவது தனது மனைவி அடுத்தவனுடன் சல்லாபம் செய்ய அனுமதி தருவானா? என்ன ஒரு விந்தையான சட்டம் ராமன் வாழ்ந்த நாட்டில்!), such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

சில படிக்காத கிராமத்துப்புற பெண்கள் இந்த கள்ள உறவோடு இருந்துவிடுகிறார்கள். ஆனால் சில நகரத்துப் படித்தப் பெண்கள் வேலை முடிந்ததும் கற்பழிப்பு வழக்குப் போட்டுவிட்டு போகிற போக்கில் கொஞ்சம் பணத்தையும் சம்பாதித்துக்கொண்டு செல்கிறார்கள். இதற்குப் பெயர்தான் “கலியுக பெண்ணுரிமை!”.

2. இரண்டாவது வழி கள்ள உறவில் ஈடுபடும் ஆணின் மனைவி தனது கணவனுக்கு எதிராக எல்லாவித சட்டங்களையும் பயன்படுத்தலாம். பலதார மணம், வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை, பெண் கொடுமை என பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் மீண்டும் இவையனைத்தும் அந்த ஆணை மட்டும்தான் தண்டிக்கும். கள்ள உறவில் ஈடுபடும் பெண்ணிற்கு இந்திய சட்டங்கள் எல்லாவித தண்டனைகளிலிருந்தும் விலக்கு அளித்திருக்கிறது. ஏனென்றால் கள்ளக்காதல் என்பது இந்தியாவில் ஒரு புனிதமான உறவு!

மேலுள்ள இரண்டு வழிமுறைகளையும் பார்த்தால் இந்த சிறுவன் எடுத்த முடிவு சரியானதா என்று யோசிக்க வழி கிடைக்கும்.

நாட்டில் நடக்கும் இதுபோன்ற காமக் களியாட்டங்களில் தனது குழந்தைகளின் நலனைக் கூட கருதாமல் இருக்கும் பெண்களை தண்டிக்காமல் இதுபோன்ற பல தவறான பெண்களை ஊக்குவிக்கும் விதமாக 1860லிருந்து இன்றுவரை இருக்கும் இந்திய சட்டங்களும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசியல்வாதிகளும் குற்றவாளிகளா? அல்லது

பெண் எப்போதும் நல்லவள் என்று கூறி ஆண்கள் மட்டுமே எப்போதும் குற்றவாளிகள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி அதற்கு உதவியாகப் பல ஒருதலை பட்சமான சட்டங்களை உருவாக்கி அப்பாவிகளின் அறியாமையில் குளிர்காய்ந்துகொண்டிருக்கும் சுயநலம் பிடித்த நாடாளுபவர்கள் குற்றவாளிகளா?

தனக்கு நடக்கும் அநீதியைக் கண்டு மனம் வெதும்பிய சிறுவனால் மேற்கண்ட இரண்டு சட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தி தனது தாயைத் திருத்த முடியுமா? அதனால் அவனுக்குத் தெரிந்த அளவில் தனக்குத்தானே ஒரு வழியைத் தேடி நீதியைத் தேடிக்கொண்டது குற்றமா? அல்லது

திரைப்படங்களில் வரும் வன்முறைதான் காரணமா?

கடைசியில் அந்த சிறுவன் மட்டும்தான் கைதுசெய்யப்பட்டிருக்கிறான். கள்ள உறவில் ஈடுபட்ட யாரும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதாக செய்தி இல்லை.

இனிவரும் காலங்களில் “தாய்மை” என்ற பண்பில்லாத வெறும் சக்கைகளாகத்தான் பெண்கள் நடமாடுவார்கள். இதுபோன்ற பெண்களை உருவாக்குவதற்கு தலைவர்களும், சட்ட வல்லுனர்களும், பெண்கள் நல அமைப்புகளும் “Women Empowerment Industry” என்ற தொழிற்சாலையை உருவாக்கி பல தவறான சட்டங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவாகப் பல குடும்பங்களும், அப்பாவிக் குழந்தைகளும் நாசகமாகப்போவது உறுதி.

சிந்தியுங்கள்.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.