சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, August 16, 2012

இந்தியாவில் உண்மை பேசும் பெண்ணை தண்டிப்பார்களா?

கடந்த இரு நாட்களாக பரப்பான செய்தியாக இருப்பது நீதித்துறையை விமர்சித்து உண்மையை பேசிய வீரமான மேற்கு வங்க முதல்வரைப் பற்றிய செய்தியாக இருக்கிறது.

“இன்று ஒரு சில தீர்ப்புகள், விலை கொடுத்து வாங்கப்படுகின்றன; பணம் வாங்கிக் கொண்டு, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படுகிறது”. நீதித்துறையை விமர்சிக்கும் வகையிலான, மம்தாவின் இந்தப் பேச்சுக்கு, பல தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மம்தாவின் இந்த உண்மையான வெளிப்படையான வார்த்தைகள் எந்த அளவிற்கு உண்மை என்று பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் உண்மையை ஏற்றுக்கொள்ள மனப்பக்குவம் இல்லாத சிலர் குரல் கொடுத்திருக்கிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 2010ம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியே இந்திய நீதித்துறையைப் பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். மக்கள் நீதித்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று கூறியிருக்கிறார். அதனால் மம்தா கூறியிருப்பது உச்ச நீதிமன்ற நீதிபதியால் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். இதை கல்கத்தா உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக்க முயற்சி செய்வது மம்மதாவின் கூற்று முற்றிலும் உண்மை என்பதை மற்றொரு முறை நிரூபிக்கிறது!
=====

நீதித்துறையை விமர்சித்த மம்தா பானர்ஜி மீது அவதூறு வழக்கு
ஆகஸ்ட் 16,2012 தினமலர்

கோல்கட்டா: "நீதித்துறையை விமர்சித்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது, கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கோரி, கோல்கட்டா ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், "மம்தாவின் பேச்சு தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகள் உண்மையானவையா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என, இரண்டு "டிவி' சேனல்களுக்கும், பத்திரிகைகளுக்கும் உத்தரவிட்டனர்.

மேற்கு வங்க சட்டசபையின் ஆண்டு விழாவையொட்டி, கோல்கட்டாவில், நடந்த விழாவில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "இன்று ஒரு சில தீர்ப்புகள், விலை கொடுத்து வாங்கப்படுகின்றன; பணம் வாங்கிக் கொண்டு, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படுகிறது' என்று தெரிவித்தார். நீதித்துறையை விமர்சிக்கும் வகையிலான, மம்தாவின் இந்தப் பேச்சுக்கு, பல தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

"சிடி' ஒப்படைப்பு: இதையடுத்து, மம்தா மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, மூத்த வழக்கறிஞரான பிகாஷ் பட்டாச்சார்யா என்பவரும் மற்றும் பலரும், கோல்கட்டா ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுவை, நீதிபதிகள் சென்குப்தா மற்றும் மண்டல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நேற்று விசாரித்தது. அப்போது, பிகாஷ் பட்டாச்சார்யா, ""மம்தாவிற்கு எதிராக, கோர்ட் தானாகவே முன்வந்து, அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், மம்தா பேசியுள்ளார்,'' என்றார். அத்துடன், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட மம்தாவின் பேச்சுக்கள் அடங்கிய இரண்டு"சிடி'க்கள் மற்றும் அவரின் பேச்சுக்கள் வெளியான இரண்டு பத்திரிகைகளின் பிரதிகளையும் நீதிபதிகளிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, மம்தாவின் பேச்சை ஒளிபரப்பிய இரண்டு "டிவி' சேனல்களும் மற்றும் அவரின் பேச்சை செய்தியாக வெளியிட்ட இரண்டு ஆங்கில பத்திரிகைகளும், "அந்தப் பேச்சுக்கள் உண்மையானவையா என்பதற்கு, மூன்று வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் பேசிய, மம்தா பானர்ஜி மீது, கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

புகழுக்கு களங்கம்: ஜம்மு - காஷ்மீர் சிறுத்தைகள் கட்சி நிறுவனரும், மூத்த வழக்கறிஞருமான பீம்சிங், இந்த மனுவை தாக்கல் செய்தார். மனுவில், "மம்தாவின் பேச்சு, நீதித்துறை மீது, மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளது. நீதி முறையின் நேர்மை மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது' என தெரிவித்துஇருந்தார்.

"மீடியாக்கள் திரித்து வெளியிட்டு விட்டன': மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகத்தில், நேற்று நிருபர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது: "நீதித்துறை நியாயமுறையில் செயல்பட வேண்டும்' என்ற அர்த்தத்தில், நான் சில கருத்துகளை தெரிவித்தேன். அதை சில மீடியாக்கள் திரித்து வெளியிட்டு விட்டன. நாட்டில் நல்லவர்களும் உள்ளனர்; கெட்டவர்களும் உள்ளனர். அரசியல்வாதிகள் எல்லாரும் ஊழல்வாதிகள் என்பது உண்மையல்ல. அதுபோலத்தான், அனைத்து நீதிபதிகளும் ஊழல்வாதிகள் என, நான் ஒரு போதும் சொல்லவில்லை. நீதித்துறையிலும், அரசியலிலும், நிர்வாகத்திலும், சுதந்திரத்திற்குப் பின், சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப் படவில்லை. அந்த நிலை மாற வேண்டும். இவற்றில் சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்பட வேண்டும். தேர்தலில் போட்டியிடுவோருக்கு அரசே நிதி அளிக்க வேண்டும். நான் சொல்லும் இவை எல்லாம் தவறு எனில், ஆயிரம் முறை மீண்டும், மீண்டும் சொல்வேன். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


சென்னை: சென்னை ஜுடிசியல் அகடமியில் ‘சமரசம் மற்றும் மத்தியஸ்தம் ஆகியவற்றின் அடுத்த கட்டம்’ என்ற கருத்தரங்கம் நேற்று நடந்தது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் தலைமை வகித்தார். இதில், உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் பேசியதாவது:

சமரசம் மற்றும் மத்தியஸ்தம் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பந்தங்களில் பேசி விட்டோம். இந்த நடைமுறைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் தற்போதைய தேவையாக உள்ளது. இதற்காக நீதிபதிகள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். உரிமை யியல் நடைமுறைச் சட்டம் (சிவில் சட்டம்) மக்களுக்கு எவ்வளவு தூரம் பயன் தருகிறது என்பதை பார்க்க வேண்டும்.

பொதுமக்களுக்கு நீதித்துறை மீது பல தவறான எண்ணங்கள் ஏற்பட்டுள்ளன. வழக்கு விசாரணையில் தாமதம், வளைந்து கொடுக்க முடியாத நிலை, எதிர்பாராத தீர்வு, அதிகமான வழக்குச் செலவு, உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம், அசாதாரணமான சூழ்நிலை இவைகள் தான் நீதித்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை குறைத்து வருகிறது.
குற்ற வழக்குகளில் மேல்முறையீடு விசாரணை முடிவதற்கு அதிக காலதாமதமாகிறது. ஒரு மேல்முறையீட்டு வழக்கு முடிவதற்கு அலகாபாத்தில் 20 முதல் 22 ஆண்டுகளும், பஞ்சாப்பில் 18 ஆண்டுகளும் ஆகின்றன. ஒரு வழக்கு வெற்றி பெற்றால்கூட அதற்கு தடைபெறும் நிலை உள் ளது.

இதுபோன்ற நிலை இருந்தால், மக்களுக்கு நீதிமன்றங்களின் மேல் எப்படி நம்பிக்கை ஏற்படும். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் பல பிரச்னைகள். வழக்கு தொடர்ந்தவர் வக்கீல்களிடமும், அவர்களின் குமாஸ்தாக்களிடமும் சிக்கி தவிக்கிறார். நட்பு ரீதியான அணுகுமுறை நீதிபதிகளிடமும் இல்லை; வக்கீல்களிடமும் இல்லை.

குற்றவியல் வக்கீலிடம் சிவில் வழக்கு சென்றால். அந்த வழக்கு எப்படியாவது குற்ற வழக்காக மாற்றப்படும் நிலை உள்ளது. தேர்தல் வழக்கு கள், மோசடி, நிர்வாக சீரழிவு மற்றும் கொடிய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை மட்டுமே நீதிமன்றத்தில் விசாரிக்கலாம். இதர வழக்குகளுக்கு மாற்று முறை தீர்வையே நாட வேண்டும்.

மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்), சமரசம் மற்றும் மத்தியஸ்த மையங்களை அணுகலாம். குடும்பநல வழக்குகள், செக் மோசடி வழக்குகள், கடன் உறுதி பத்திரம் வழக்குகள் ஆகிய வழக்குகளை நீதிபதிகள் விசாரிக்கக் கூடாது. நீதிபதிகள் அறுவைச் சிகிச்சை தெரிந்தவர்களை போன்றவர் கள். அவர்கள் அறுவைச் சிகிச்சைதான் செய்ய வேண்டுமே தவிர, மருந்து சீட்டு எழுதித் தரும் வேலையை செய்யக் கூடாது.

தற்போது, உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் 95 சதவீத வழக்குகள், முன்சீப் நீதிமன்றங்களில் கூட விசாரிக்க லாயக்கற்றவை. அதேபோல், உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் பெரும்பாலான வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கக்கூட லாயக்கில்லாத வழக்குகளாக உள்ளன. எதை நாம் செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். மக்கள் தொகை பெருகி வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் பிரச்னைகளும் அதிகரி த்து வருகின்றன. அடித்தட்டில் உள்ள மக்களெல் லாம் தற்போது அதிகாரம் பெற்று வருகிறார்கள். உரிமைகளுக்காக போராடுகிறார்கள். இதனால், நீதிமன்றங்களுக்கு மேலும் சுமை ஏற்படுகிறது. அதனால், தேவையற்ற வழக்குகளை விசாரிப்பதை தவிர்த்துவிட்டு, தரமான வழக்கு களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இவ்வாறு நீதிபதி ரவீந்திரன் பேசினார். இந்த கருத்தரங்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, நீதிபதி நாகப்பன் வரவேற்றார். முடிவில், நீதிபதி தனபாலன் நன்றி கூறினார்.

======

மம்மதா பானர்ஜியின் கூற்று எவ்வளவு உண்மை என்று தெரிந்துகொள்ள இந்த இணைப்பிலுள்ள செய்தியை படித்துப்பாருங்கள் : நீதித்துறையின் பிடியில் சிக்கித்தவிக்கும் அப்பாவி குடிமக்கள்No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.