இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, August 29, 2012

இவர் நேர்மையான பெண்ணா?

குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக காதலிக்கும் இளம் பெண்கள் பொதுவாக திருமணம் வரை வாயை பொத்திக்கொண்டு இருந்து விட்டு பிறகு திருமணம் ஆனவுடன் கணவனிடமிருந்து சற்று தள்ளியே இருப்பார்கள். தக்க சமயம் பார்த்து கணவன் மற்றும் அவனது குடும்பத்தார் மீது பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்து விட்டு பழைய காதலை புதுப்பிக்க ஆரம்பித்து விடுவார்கள். இது நகரத்தில் படித்த பெண்கள் கையாளும் தந்திரம்.

இதற்கு அடுத்த நிலையில் இருக்கும் பெண்கள் காதலனுடன் சேர்ந்துகொண்டு கூலிப்படை அமைத்து கணவனை கொலை செய்து விட்டு அப்பாவி போல பழைய காதலை சந்தோஷமாக வளர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். உதாரணத்திற்கு இன்று வந்துள்ள செய்தி இது: தங்கச்சி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து புருஷன் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி! (One India Tamil 30/08/2012)

இதுதான் இந்தியாவின் தேசிய நடைமுறை. இதற்கு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள், வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் பல ஆண்டுகளாக உதவி வருகின்றன என்று இப்போது எல்லா இளம் பெண்களுக்கும் தெரிந்திருக்கிறது.

இன்றைய செய்தியில் காதலனை கைப்பிடிக்க நினைத்த மணப்பெண் திருமணத்தன்று மாலையை வீசியெறிந்து காவல் நிலையத்தில் பஞ்சாயத்திற்கு சென்றிருக்கிறார். கணவன் வீட்டாருக்கு திருமண செலவை திருப்பித் தருவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இவரை நேர்மையானவர் என்று சொல்லலாமா?

திருமணத்தன்று காவல் நிலையத்திற்கு சென்ற பெண் திருமணத்திற்கு முன்பே சென்று தனது காதலை வளர்த்திருந்தால் அனாவசியமாக ஒரு அப்பாவி ஆண் மணமேடையில் அவமானப்பட்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் இந்திய சட்டங்களின்படி இளம் பெண்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இதே சம்பவத்தை ஒரு மணமகன் செய்திருந்தால் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும். இதுதான் இந்திய திருமண நடைமுறை.

தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் ஓட்டம்: காதலரை கை பிடிப்பதில் உறுதி
ஆகஸ்ட் 30,2012 தினமலர்



பெரியகுளம்: தேனி பெரியகுளத்தில், காதலித்தவரை திருமணம் செய்ய முடியாததால், மணமேடை வரை வந்த பட்டதாரி பெண், மாலையை வீசி விட்டு ஓட்டம் பிடித்தார்.

பெரியகுளம் அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகன், 39; பி.காம்., பட்டதாரி. இவருக்கும், மதுரை கே.புதூர், பாரதியார் நகரைச் சேர்ந்த பாண்டிமீனாவுக்கும், 28, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. (பாண்டிமீனாவின் தந்தை கார்த்திகேயன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்). பெரியகுளத்தில் நேற்று காலை 6 மணிக்கு திருமணம் நடப்பதாக இருந்தது.

மணமக்கள் மணமேடையில் அமர்ந்திருந்த நிலையில் தாலி கொண்டுவரப்பட்டது. ஆவேசமாக எழுந்த பாண்டிமீனா, மாலையை கழற்றி வீசி, "எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை' என்றார். உறவினர்கள், பாண்டிமீனாவுடன், பேசியும் பலன் இல்லை. பின், தாய் கவுசல்யாராணியுடன், மண்டபத்தில் இருந்து, தென்கரை போலீஸ் ஸ்டேஷன் சென்று, இன்ஸ்பெக்டர் இளங்கோவிடம், "தனக்கு திருமணம் பிடிக்கவில்லை,' என்றார்.

மணமகனின் தந்தை நாகராஜன், "பாண்டிமீனா ஏமாற்றிவிட்டார்' என, போலீசில் புகார் அளித்தார். போலீசார், மணமகளிடம் பேச்சு நடத்தினர்.

பாண்டிமீனா போலீசாரிடம் எழுதிக்கொடுத்த விளக்கம்: மதுரையைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன். இது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தேன். எனது பேச்சை கேட்காமல், திருமணம் பேசி முடித்தனர். மணமகன் வீட்டார், வரதட்சணை பெறவில்லை. "மண்டபச்செலவு உட்பட ஒரு லட்சம் ரூபாய் வேண்டும்,' என, மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர். எனது பெரியம்மா வத்சலகுமாரி, 2013 ஜூனில் பணி ஓய்வு பெறுகிறார். அதில் இருந்து 30 நாட்களில், மணமகன் வீட்டாருக்கு பணம் கொடுத்துவிடுகிறோம், என தெரிவித்து உள்ளார்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.