சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, July 03, 2009

கணவரை எரித்து கொல்ல முயன்ற மனைவி

கணவரை எரித்து கொல்ல முயன்ற மனைவிக்கு ஐகோர்ட் ஜாமீன்
Dinamalar: ஜூலை 04,2009

மதுரை: "தஞ்சை கபிஸ்தலம் அருகே கணவரை எரித்து கொல்ல முயன்ற மனைவிக்கு,' மதுரை ஐகோர்ட் கிளை ஜாமீன் வழங்கியது. தஞ்சை கபிஸ்தலத்தை சேர்ந்தவர் ரங்கசாமி.

இவர் அங்குள்ள சர்க்கரை ஆலையில் இன்ஜினியராக உள்ளார். இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று ரங்கசாமி, வீட்டில் "டிவி' பார்த்து கொண்டிருந்தபோது, அருள்மொழி அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த காயமற்ற ரங்கசாமி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அருள்மொழியை போலீசார் கைது செய்தனர். அவரது ஜாமீன் மனு, நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி முன் விசாரணைக்கு வந்தது. அருள்மொழியை ஜாமீனில் விட அரசு வக்கீல் சிவ.ஐயப்பன் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் அருள்மொழியை ஜாமீனில் விட நீதிபதி உத்தரவிட்டார்.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.