இக்கால நல்லதங்காளுக்கு ஜாமீன்:ஐகோர்ட் கிளை உத்தரவு
Dinamalar News: July 29, 2009
மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வறுமையினால் இரு குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு மதுரை ஐகோர்ட் கிளை ஜாமீன் வழங்கியது.பரமக்குடியை சேர்ந்த சரவணன் மனைவி மல்லிகா(25). இவர்களுக்கு சசிகலா(5), வினோதினி(3) ஆகிய குழந்தைகள் இருந்தனர். சரவணன் லோடுமேன் வேலை செய்து வருகிறார். குடும்ப செலவுக்கு கூட போதிய வருமானம் இல்லை. மேலும் மல்லிகா அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதியுற்றார். குழந்தைகளை வளர்க்க வாங்கிய கடனும் அதிகரித்தது.
இதனால் மனமுடைந்த மல்லிகா, இரு குழந்தைகளுடன் திருப்புவனம் மடப்பும் கோயிலுக்கு வந்தார். அங்கு கோயிலுக்கு பின்புறத்திலுள்ள கிணற்றில் குழந்தைகளை தள்ளி விட்டு தானும் விழுந்தார். இதில் இரு குழந்தைகளும் இறந்தனர். மல்லிகாவை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். மல்லிகா மீது கொலை, தற்கொலை முயற்சி பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மல்லிகா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் சிவ.ஐயப்பன் வாதிடுகையில், "வறுமையினால் இச்சம்பவம் நடந்துள்ளது. மேலும் விசாரணை ஒரளவு முடிந்து விட்டது,'' என்றார். முடிவில் மல்லிகாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.-------------------------------------------------------------------------------------------------
இது போன்ற வறுமையில் வாடும் அப்பாவிப் பெண்களையும், ஒரு பாவமும் அறியாத குழந்தைகளையும் காப்பாற்றுவது யார்? பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சகமா? இல்லை அவர்களுக்கு அதை விட மேலான பல காரியங்கள் இருக்கின்றது. அது என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் .
No comments:
Post a Comment