இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, July 30, 2009

சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானே?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானே?

இது போன்ற தம்பதிகளுக்கும் வரதட்சணை தடுப்புச்சட்டம், IPC498A, மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் போன்றவை பொருந்துமா?


Dinamalar News: July 31, 2009
திருமணத்தை பதிவு செய்யக்கோரி விண்ணப்பித்துள்ள லெஸ்பியன்கள்

லக்னோ:வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்ட இளம் பெண்கள், தங்கள் திருமணத்தை பதிவு செய்யக்கோரி கோர்ட்டில் விண்ணப்பித் துள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம், முசாபர் நகரில் உள்ள ஷாம்லி நகரை சேர்ந்த இரண்டு பெண்கள் தையல் வகுப் பில் பயிற்சி பெறும் போது நண் பர்களானார்கள்.

இதில், ஒரு பெண் ஏற்கனவே அரியானாவை சேர்ந்த நபரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டவர். ஆனால், அவரிடம் வாழ பிடிக்காமல் பெண் நண்பருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு கணவரை பிரிந்து வந்து விட்டார்.இந்த பெண்களின் உறவை பற்றி அறிந்த குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். "பெற்றோருடன் வசித் தால் நாம் ஒன்று சேர்ந்து வாழ முடியாது' என நினைத்த இந்த பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி ஹரித்துவார் சென்று அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

ஷாம்லி நகருக்கு திரும்பிய போது ரயில் நிலையத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணை அவரது உறவினர்கள் வலுக் கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து சென்றனர். தனது ஜோடி யை பிரிந்த மற்றொரு பெண், இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை டில்லி ஐகோர்ட் ஆதரித்துள்ளதை சுட்டிக்காட்டி பேசிய இந்த பெண்கள், தங்கள் திருமணத்தை பதிவு செய்ய வேண் டும், எனக் கோரி, மாவட்ட கோர்ட்டில் விண்ணப்பித்துள்ளனர். போலீசார் தலையிட்டு, இந்த ஜோடி சேர்ந்து வாழ, நடவடிக்கை எடுத்துள்ளனர்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.