DM News: August 1,2009
புதுடில்லி: நம் நாட்டில் உள்ள சட்டங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழைமையானவை. இவற்றில் பெரும் பாலானவை கடந்த 60 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக சமீபத்தில் டில்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை அடுத்து, இந் திய சட்டங்கள் பற்றியும், அதன் பழைமை பற்றியும் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. பெரும்பாலான நாடுகளில் உள்ள கிரிமினல் மற் றும் சிவில் சட்டங்கள் நூறு மற்றும் 150 ஆண்டு பழைமை வாய்ந்த, பிரிட்டிஷ் சட்டங்களை பின்பற்றி அமல்படுத்தப்பட்டவை.
பெரும்பாலான நாடுகள், காலத்திற்கு ஏற்றபடி புதிய சட்டங்களை கொண்டு வந்தன. ஆனால், இந்தியாவில் அதுபோன்ற நடவடிக்கை எதுவும் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக, ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டம் கடந்த 1860ல் பிரிட்டிஷ் அரசால் கொண்டு வரப்பட்டது. கடந்த 1967ல் பிரிட்டன் அரசு இதை ரத்து செய்தது.
ஆனால், இந்தியாவில் ஓரினச் சேர்க்கையை தடை செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவு தொடர்ந்து அமலில் உள்ளது. கடந்த 159 ஆண்டுகளாக இந்த சட்ட விதிகளில் இந்தியாவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது தான், இந்த சட்டம் செல்லாது என, டில்லி ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள சட்டங்களில் பெரும்பாலானவை, கடந்த 60 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுவது இல்லை. பொருத்தமற்ற சட்டங்களை ரத்து செய்யும்படியும், முக்கியமான சட்டங்களை காலத்திற்கேற்ப இயற்றும்படியும் இந்திய சட்ட ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இருந்தாலும், இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுகுறித்து, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், "இந்த விஷயத்தில் மிக விரிவான விவாதம் நடத்தி, மிகவும் கவனமாக செயல் பட வேண்டும். அதன் அடிப்படையில் சட்டங் களை ரத்து செய்வது, மாற்றம் செய்வது குறித்து முடிவு எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
பிரபல சட்ட நிபுணரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான கிருஷ்ண அய்யர் கூறுகையில், "மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்ட நடைமுறைகளில், போதிய சீர்திருத்தம் மேற் கொள்ளாதவரை, இதுபோன்ற உபயோகமில்லாத சட்டங்கள், தொடர்ந்து அமலில் இருப் பதை தவிர்க்க முடியாது' என்றார்.
--------------------------------------------------------------------------------------------
வெள்ளைக்காரன் காலத்து உபயோகமற்ற சட்டங்களுடன் புதியதாக உருவாக்கப்பட்ட தவறான சட்டங்களும் திருத்தப்பட வேண்டும். நாட்டில் இதுவரை தேசப்பற்று மிக்க எந்த சட்ட மேதைகளும் இவைகளைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
No comments:
Post a Comment