இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, August 06, 2009

பொய் 498A கேசுகளை தடுக்க புது தடுப்பு முறை?

பண்டமாற்று முறையில் திருமணம்: பெண்களை பந்தாடும் அவலம்
DM News: Aug 7,09

சண்டிகார்: வயதுக்கு வந்த பெண்ணோ, வராத பெண்ணோ, பெண்ணுக்கு பதில் மற்றொரு பெண் கொடுத்தால் தான் திருமணம்.

இந்த அதிர்ச்சி தரும் நிபந்தனை ஏதோ ஒரு ஆப்ரிக்க நாட்டில் நடைபெறுவதல்ல, அரியானா மாநிலத்தில்தான் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரியானா மாநிலத்தின், பதேஹாபாத் மாவட்டத்தில் உள்ளது ஜான்திலி கலான் கிராமம். இங்கு கீதா என்ற 15 வயது பெண்ணுக்கும், நாது ராம் என்பவருக்கும் திருமணம் நடக்கவிருந்தது. சில காரணங்களால் இத்திருமணத்தில் விருப்பமில்லாத பெண்ணின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் திருமணத்தை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கீதாவின் தாய் மாமனுக்கு நாதுராமின் சகோதரியை மணமுடிப்பதாக நிச்சயிக்கப்பட்டது. நாதுராமின் சகோதரியை மணமுடிக்க வேண்டுமானால், நாதுராமுக்கு கீதாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டார் நாதுராமின் தந்தை.

வேறு வழியில்லாமல் கீதாவின் தந்தை முதலில் ஒப்புக்கொண்டாலும், பெண்ணின் வாழ்க்கை கருதி பெரிதும் வருந்தினார். கடைசியில் ஒரு வழியாக போலீசில் சொல்லி விட்டார். "பண்டமாற்று' திருமணங்கள் இம்மாநிலத்தில் அரிதான விஷயமல்ல. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், பல தரப்பட்ட மக்கள் மத்தியில் சகஜமாகவே நிகழ்கிறது.

அரியானாவில் ஏற்பட்டுள்ள பாலின விகிதாச்சார வேறுபாடுதான் இதற்குக் காரணம். ஆயிரம் ஆண்களுக்கு 822 பெண்கள் என்ற நிலையிலேயே இங்கு மக்கள் தொகை உள்ளது. மிக மோசமாக சில கிராமங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 370 பெண்கள் என்ற வகையில் பாலின விகித வேறுபாடு உள்ளது.

தங்கள் வீட்டு ஆண் வாரிசுக்கு பெண் கிடைத்தால், உடனடியாக தங்கள் வீட்டு பெண்ணையோ, உறவினர் பெண்ணையோ பண்ட மாற்று முறையில் திருமணம் முடித்து வைக்கின்றனர். இதனால் மைனர் பெண்களுக்கு திருமணம் என்பது இங்கு மிக சகஜமாகவே நடக்கிறது. இந்தத் திருமணங்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைப் பது மிகவும் அரிது.

எனவே, அவர்களாலும் இதுபோன்ற திருமணங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஆராய்ச்சி மைய இயக்குனர் ரஞ்சனா குமாரி கூறுகையில், அரியானாவில்தான் பெண்களை விற்பனை பொருட்களாக பயன்படுத்துகின்றனர். சமூக வழக்கம் என்ற பெயரில், பெண்கள் இங்கு விற்கப்படுகின்றனர், வாங்கப்படுகின்றனர், கொலை செய்யப்படுகின்றனர். மேலும், பண்ட மாற்று முறையில் மாற்றிக்கொள்ளப்படுகின்றனர். சிறு வயது பெண்கள் பலர் நடுத்தர வயதுடைய ஆண்களுக்கு மணம் முடிக்கப்படுகின்றனர் எனக் குற்றம் சாட்டினார்.

-------------------------------------------------------------------------------------------------
இந்த முறையில் ஒரு வசதியிருக்கிறது. ஒரு குடும்பத்திற்கெதிராக மற்றெhரு குடும்பம் பொய் வரதட்சணை கேசுகளை பதிவு செய்து காசு பறிப்பது, பழிவாங்குவது போன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட முடியாது. வாய்ப்புகள் மிகக் குறைவு.

வரும் காலங்களில் இப்படி நடந்தால் தான் திருமணங்கள் நடைபெறுமோ?! இல்லையென்றhல் எதிர்கால இளைஞர்களும், இளைஞிகளும் திருமண வாழ்க்கை என்றhல் என்னவென்றே தெரியாமல் கல்லறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். அதற்குள் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுமா?


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.