மனைவி மீது வழக்கு
தினமலர் செய்தி
கண்டபடி திட்டினாள் மனைவி; பொறுத்துப் பார்த்த கணவன், கோர்ட்டுக்குப் போய் விட்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ருதி; பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் சிறிய அளவில் அவ்வப்போது மோதல் வரும். ஆனால், அப்போதே சரியாகிவிடும். சில சமயம், பெரிதாக வெடித்துவிடும். இப்படித்தான் கடந்தாண்டு ஒரு நாள் சாதாரண விஷயம், பெரிதாகி இவர்களிடையே மோதலை அதிகப்படுத்தியது.
"பள்ளிக்கு நேரமாகி விட்டது; காரில் இறக்கி விடுங்கள்' என்று மனைவி கூறியிருக்கிறாள். ஆனால், "எனக்கும் வேலை இருக்கிறது; என்னால் முடியாது' என்று கணவன் கூறி விட்டார். இது தான் நடந்தது. ஆனால், இது பெரிதாகி இருவரிடையே மோதல் வெடித்தது. "சரி, என் தந்தை உன்னைக் காரில் போய் இறக்கி விடுவார்' என்று கணவர் சொல்ல, "என்னை இறக்கி விட உங்களால் முடிந்தால் சரி; மாமனார் உதவியை நான் கேட்கவில்லை' என்று கணவனைக் கண்டபடி திட்டியிருக்கிறாள் மனைவி.
இது மட்டுமின்றி, தன் குடும்பத்தினரை அழைத்துச்சென்று, கணவரையும், அவர் தந்தையையும் தாக்க முயற்சி செய்துள்ளார் மனைவி. அறையில் அடைத்து சில ரவுடிகளை வைத்தும் தாக்க முயற்சி நடந்துள்ளது. மாமனாருக்கு சில அடிகளும் விழுந்துள்ளது. இதனால், வெறுத்துப்போன அவரது கணவர், கோர்ட்டில் மனைவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். "ஸ்ருதி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது. அதனால், அவர் மீது விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்' என்று மாஜிஸ்திரேட் ரவீந்தர் சிங் தெரிவித்தார்.
No comments:
Post a Comment