மும்பையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், இவள் தனது பெற்றோர் திருமணத்திற்கு முன்பே பிறந்தவள்; கணவன் - மனைவி பிரிந்து விட்டதால் மகள் பாதிக்கப்பட்டுள்ளாள். தனது உயர் தொழிற்கல்வி படிப்புக்கு தந்தையின் உதவியைப் பெற்றுத் தருமாறு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல்செய்தாள். மனுவை விசாரித்த, நீதிபதிகள் மஜூம்தார், மூர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்," எங்களுக்கு உங்கள் மீது பரிதாபம் கிடையாது; உங்கள் மகள் பாதிக்கப்படுவதைப் பார்த்துதான் பரிதாபப்படுகிறோம்'' என்று கூறியுள்ளது.
கோர்ட் வாதத்திற்கு பதிலளித்த தந்தை," இவள் என் மகள் தான். அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இவளது தாயை நான் திருமணம் செய்யவில்லை' என்றார். திருமணம் தொடர்பான பிரச்னையை விசாரிப்பதை நிராகரித்த கோர்ட், "மகள் - தந்தை என்ற உறவில் எந்தவிதப் பிரச்னையும் வரக்கூடாது. உங்கள் பிரச்னையால் மகள் பாதிக்கப்படக்கூடாது; அவள் எதிர்காலத்தைப் பற்றி கவனம் செலுத்துங்கள்' என்று தாய்,தந்தைக்கு உத்தரவிட்டது. மகளுக்கு உயர் படிப்புக்கு எவ்வளவு தொகை கொடுக்கவேண்டும் என்பதை உறுதிசெய்யும்படியும் உத்தரவிட்டது.
--------------------------------------------------------
திருமணம் செய்யாமலே ஆணும் பெண்ணும் கூடி வாழலாம், எந்த வரைமுறையும் கிடையாது, அந்தப் பெண்ணுக்கு எல்லா உரிமையும் உண்டு என்பது போன்ற "புதுமைகளைப்" புகுத்தினால் நாட்டில் இது போன்ற குழப்பங்கள் தான் மிஞ்சும். பெண்களுக்கு அதிக உரிமை கொடுப்பதாக நினைத்து திருமணம் என்ற உறவையே கொச்சைப்படுத்தி நாட்டில் இது போன்ற பிள்ளைகளின் எண்ணிக்கையைத்தான் உயர்த்த முடியும். உண்மையான பெண் சுதந்திரத்திற்கு அர்த்தம் புரியாமல் அரை வேக்காட்டுத்தனமாக சட்டங்களை இயற்றினால் கடைசியில் பாதிக்கப்படப் போவது பெண்கள் தான்.
மகள் - தந்தை உறவில் பிரச்சினை வரக்கூடாது என்று கருத்துக் கூறும் போது மற்ற விவாகரத்து வழக்குகளில் தந்தையர்களின் நிலைமை என்னவென்று யோசிக்க வேண்டும். ஒரு பேய் பொய்யான 498A கேசு பதிவு செய்து விட்டால் குழந்தைகளின் கதி என்னவென்று யாரும் யோசிப்பதில்லை. அது போன்ற சமயத்தில் தந்தையர்களுக்கு நீதிமன்றங்கள் ஏதோ பாவப்பட்டு "விருந்தினர் அந்தஸ்த்தில்" தான் (Visitation Rights Only) குழந்தையைப் பார்க்க அனுமதிக்கின்றன. தான் பெற்ற குழந்தையை விருந்தினருக்கு பிறந்த குழந்தை போலத் தான் தந்தை பார்க்க வேண்டும். என்ன கொடுமை!
No comments:
Post a Comment