இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, August 19, 2009

எப்போது கண்டுகொள்வார்களோ?

'விவாகரத்து வழங்கும் போது குடும்பங்கள் பிரிகின்றன'
தினமலர் செய்தி

கணவரிடமிருந்து பெற்ற விவாகரத்தை ரத்துசெய்த, மாவட்ட கோர்ட் உத்தரவை எதிர்த்து, ராஜபாளையம் பெண் டாக்டர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. கணவன், மனைவிக்கு விவாகரத்து வழங்கும் போது அவர்கள் மட்டும் பிரிவதில்லை. இரு குடும்பங்கள் பிரிகின்றன எனவும் குறிப்பிட்டது. ராஜபாளையத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜா. இவருக்கும் டாக்டர் சித்ராவுக்கும் 1996 மே 23ல் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தையுள்ளது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. விவாகரத்து கோரி சித்ரா ஸ்ரீவில்லிபுத்தூர் சப்- கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ""கணவருக்கு, என் தந்தை இரண்டு லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கி கொடுத்தார். அதை அவர் விற்று விட்டார். மேலும் 1.5 லட்சம் ரூபாய் கொடுத்தார். மேலும் ஐந்து லட்சம் ரூபாய் கேட்கிறார்,'' என்றார்.

முன்சீப் கோர்ட் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. அதை எதிர்த்து வெங்கட்ராஜா மாவட்ட கோர்ட்டில் மனு செய்தார். மனுவில், ""என் மனைவி பாசம் மிக்கவர். அவரது சகோதரி, தந்தை தூண்டுதலால் எங்கள் வாழ்க்கை சீர்குலைகிறது. அவரை என்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும்,'' என்றார். மாவட்ட கோர்ட், விவகாரத்து வழங்கிய கீழ்கோர்ட் உத்தரவை ரத்து செய்தது.

இதை எதிர்த்து, சித்ரா ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு மனு செய்தார். மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஏ.செல்வம், ""இத் தம்பதிகள் திருமணமான பிறகு பரஸ்பரம் எழுதிய கடிதங்களில், ஒரு வார்த்தை கூட கொடுமை, கருத்துவேறுபாடு பற்றி குறிப்பிடவில்லை. இருவரும் பாசத்துடன் இருந்தது கடிதத்தில் தெரிகிறது. தம்பதிகளிடம் நல்ல சூழ்நிலை நிலவியதால் பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவன், மனைவிக்கு விவகாரத்து வழங்கும் போது அவர்கள் மட்டும் பிரிவதில்லை. இரு குடும்பங்களும் பிரிந்து விடுகின்றன. குழந்தையின் எதிர்காலம் செயல் இழந்து விடும் என்பதை கீழ்கோர்ட் கவனத்தில் கொள்ளவில்லை. மாவட்ட கோர்ட் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது,'' என்றார்.

===========================

இது போல பொய் 498A கேசுகளில் பல அப்பாவி குழந்தைகளின் வாழ்க்கை அரசின் தவறhன சட்டங்களால் அரசாங்கத்திற்கு தெரிந்தே சீரழிகின்றதே. அதை எப்போது கண்டுகொள்வார்களோ?



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.