சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, August 17, 2009

மிக உன்னதமான உதவி

ஆகஸ்ட் 15, 2009 அன்று சென்னையில் இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் அப்பாவி குடும்பங்களை அழிக்கும் கொடிய சட்டங்களைப்பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விநியோகித்த விளக்கப் பிரசுரத்தின் நகல். டவுன் லோடு செய்து உங்களுக்குத் தெரிந்த இந்தியர்களுக்கு அனுப்புங்கள். இது நீங்கள் உங்களுடைய இந்திய சகோதர சகோதரிகளுக்கு செய்யக்கூடிய மிக உன்னதமான உதவி. இது பணமோ, உடலுழைப்போ இல்லாமல் உங்களால் செய்யக்கூடிய மிக மிக உன்னதமான உதவி. பல அப்பாவி குடும்பங்களின் உயிரையும், அதைவிட மேலான மானத்தையும் காக்கக்கூடிய உதவி.செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. ( குறள் எண் : 101 )

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.


காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. ( குறள் எண் : 102 )

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.


வாழ்க "இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்" தலைவர்கள் !


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.