சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, August 15, 2009

நல்லது நடக்க விடுவோமா நாங்கள்?

வக்கீல்களுக்கு புத்தாக்க கல்வி; பார் கவுன்சில் கடும் எதிர்ப்பு
DM News: Aug 16,09

புதுடில்லி : வக்கீல்கள், காலத்திற்கேற்ப சட்ட அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு "புத்தாக்க' பயிற்சியை அளிக்க வேண்டும் என்று தேசிய சட்டக் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பயிற்சித் திட்டத்தில், பங்கேற்று தேர்ச்சி பெற்றால் தான் அவர்கள் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு, வக்கீல்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

கமிஷனின் 230வது அறிக்கையைத் தாக்கல் செய்த கமிஷனின் தலைவரும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான லட்சுமணன் கூறுகையில், "சட்டத்துறையில் நெறிமுறைகள், கோட்பாடுகளைப் பின்பற்றுவதில் தரம் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், காலத்துக்கேற்ற சட்ட திட்டங்களை அறிந்து கொள்ள வேண்டியது வக்கீல்களுக்கு முக்கியமாகிறது. அதனால், இந்தப் பயிற்சி அவசியம்'' என்று தெரிவித்தார்.

சட்டப் படிப்பு முடித்து கோர்ட்களில் தொழில் செய்யும் வக்கீல்கள், சட்டத் தகவல்களில் தங்களை மேம்படுத்திக் கொள்ளவே இந்தக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என்று கமிஷன் விளக்கம் தெரிவித்துள்ளது. "இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது' என்று வக்கீல்கள் தரப்பில் கருத்து எதிரொலித்துள்ளது."வக்கீல்கள் தங்களது லைசென்சைப் புதுப்பிக்க இது மாதிரி நிபந்தனை விதிப்பது நல்லது அல்ல. வக்கீல்கள் சட்டம் சம்பந்தமாகப் "பல துறைகளிலும்" பயிற்சி பெற்றவர்கள். அவர்களுக்கு இந்த மாதிரி படிப்புகள் உதவிகரமாக அமையாது'' என்று சுப்ரீம் கோர்ட் பார் கவுன்சில் தலைவர் கிருஷ்ணமணி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

==============================================

இது போன்ற திட்டம் அமலுக்கு வந்தால் "498A டெம்ப்ளேட் போலிகள்" வடிகட்டப்படுவார்கள். ஆனால் என்ன செய்வது பாம்பே கோர்ட் சொல்வது போல ஆண்டவனிடம் தான் முறையிட வேண்டும்!
No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.