சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, August 09, 2009

கொலைக் களமாகி வரும் குடும்ப வாழ்கை முறை

ஆத்திரத்தில் அதிகரிக்கும் படுகொலைகள்: உறவினர்-நண்பர்கள் பகை, கள்ளக்காதல் காரணம்
DM News: August 10, 09

உறவினர், நண்பர்களுக்கு இடையே ஏற்படும் திடீர் பகையால் கொலை சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. 2006ல் 811 கொலைகள் நிகழ்ந்துள்ளன. 2008ல் 1,142 கொலைகள் நடந்துள்ளன; இவற்றில் 155, "கள்ளக்காதல்' கொலைகள்.

மேற்கத்திய நாடுகள் நம்மைப் பார்த்து வியக்கும் பல விஷயங்களில் ஒன்று, நம் குடும்ப அமைப்பு முறை; பண்பாடு, கலாசாரம். இதைக் கேள்விக்குறியாக்கும் விதமாக உறவு, நண்பர்களுக்கு இடையேயான கொலைகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. கடந்தாண்டு தமிழகத்தில் நடந்த கொலைகளில் 70 சதவீதம், குடும்பத் தகராறு, வாய் தகராறு, குடிபோதை தகராறு மற்றும் கள்ளக்காதல் விவகாரங்களால் நிகழ்ந்துள்ளன. கள்ளத் தொடர்பால், மதுரையில், பெற்ற மகனையே தாய் கொன்றார்.
மாதவரத்தில் மனைவி, கணவனைக் கொன்றார். மகன், தாயை வெட்டிக் கொன்றார் என தினந்தோறும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
உணர்ச்சிவயப்பட்டு நடக்கும் இந்தக் கொலைகளுக்கு மன அழுத்தம் தான் முக்கிய காரணம். இதுகுறித்து, மனநல மருத்துவர் பிரபாகரன் கூறியதாவது: இன்றைய நுகர்வு கலாசாரத்தில், ஆசைப்படுவதை உடனடியாக அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலையில் மனிதர்கள் உள்ளனர். இந்த நிலைக்கு ஆளானவர்களுக்கு, முதலில், குறிப்பிட்ட நபர் மீது ஆர்வம் ஏற்படும்.

அவர் மீது அதிக ஈடுபாடு உண்டாகி, அவரைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பர். அவருக்கே அடிமையாகி ஒரு தீய நினைவு வட்டத்திற்குள் சிக்கிக்கொள்வர். அடுத்தகட்டமாக, அவரை எப்படியாவது அடையத் துடிப்பர். இத்தகையவர்கள் விருப்பத்திற்கு தடையாக யார் இருந்தாலும், கொலை செய்யக்கூடத் தயங்க மாட்டர். இப்படிதான் கள்ள உறவுகளில் கொலைகள் நிகழ்கின்றன. கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் மீது கோபப்படவோ, அவர்களை தாக்கவோ கூடாது. நிதானமாகப் பேசி, தவறை புரிய வைக்க வேண்டும்.

கள்ள உறவில் காட்டும் ஆர்வத்தை தம் பிள்ளைகள், புத்தகங்கள், தொழில் எனப் பல நல்ல விஷயங்களில் செலுத்தினால், அதிலிருந்து மீளலாம். தான் என்ற அகந்தையும், உறவுகளில் நிலவும் பனிப்போரும் தான் குடும்ப தகராறுகள், வாய்த் தகராறுக்கு அடிப்படை. இந்தப் பிரச்னைகளை அமைதியான முறையில் உடனே பேசி தீர்க்க வேண்டும். நாளை பார்க்கலாம், என விடக்கூடாது. இரவுத் தூக்கத்தின்போது, பிரச்னைக்கு காரணமானவர்கள் மீதான வெறுப்பை ஆழ்மனம் பத்து மடங்கு அதிகரித்துக் காட்டும். அந்த நினைப்பே மேலோங்கி இருக்கும்போது, கொலையில் முடிந்துவிடுகிறது. இவ்வாறு டாக்டர் பிரபாகரன் தெரிவித்தார்.

இதுகுறித்து, சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: இன்றைய பொருளாதார உலகில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்துவிட்டன. முந்தைய தலைமுறையில் வீட்டைவிட்டு அவ்வளவாக வெளியே வராத பெண்கள், தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். இப்படிக் கஷ்டப்பட்டு உழைக்கும் பெண்களின் சம்பாத்தியத்தை குடும்பத்தின் கூடுதல் வருவாய் என எண்ணாமல், சில ஆண்கள் அவர்களை சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.

மொபைல், "டிவி', இன்டர்நெட் போன்ற நவீன சாதனங்கள் நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் எதிர்மறை தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற மாற்றங்கள் நம் உறவுமுறைகளை அசைத்துப் பார்க்கின்றன. எல்லை மீறும்போது, இது உறவுகளுக்கு இடையேயான கொலைகளுக்கு மறைமுக காரணமாகிறது. இதைத் தடுக்க, எல்லாவற்றையும் வணிக நோக்கில் அணுகக் கூடாது. சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். கீழ்தட்டு மக்களின் கல்வியறிவு, இன்னும் வளர வேண்டும். இதுபோன்ற கொலைகள் பெரும்பாலும் உணர்ச்சி வசப்படுதல், அறியாமையால் ஆத்திரப்பட்டு நடந்துவிடுகின்றன. இவற்றைத் தவிர்க்க, முறையான "கவுன்சிலிங்' அவசியம். இவ்வாறு கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

கொலைகளும் காரணங்களும்: கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் நடந்த உறவுகளுக்கு இடையேயான கொலைகள் பற்றிய விவரம்:

காரணங்கள் 2006 2007 2008

குடும்பத் தகராறு 324 421 469
வாய்த் தகராறு 301 355 427
குடிபோதைதகராறு 68 98 91
கள்ளக்காதல் 118 123 155
மொத்தம் 811 997 1,142

------------------------------------------------------------------
------------------------------------------------------------------
குடும்பப் பிரச்சினைகளை வணிக நோக்கத்தில் பார்க்கக்கூடாது என்கிறhர் கமிஷனர். ஆனால் ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்றhலே அதை வியாபார நோக்கத்தில் அணுகி பிரச்சினைகளை பெரிதாக்கும் கூட்டம் எதுவென்று அனைவருக்கும் தெரியுமல்லவா?

இன்றைய காலகட்டத்தில் உள்ள "குடும்ப அழிப்பு சட்ட" நடைமுறைப்படி கூட்டுக் குடும்ப முறை என்பது வயதான பெற்றேhர்களுக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் தனக்குத் தானே சமாதி கட்டிக்கொள்வதற்கு சமமாகும். ஏனென்றhல் பொய் வரதட்சணை கேசுகளில் அதிகமாக சிக்க வைக்கப்பட்டு பணயக்கைதிகளாக்கி அவமானப்படுத்தப்படுவது அவர்கள்தானே.

எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்ற நோக்கத்தில் பல சட்டங்களும் "சட்ட தீவிரவாத கூட்டமும்" இருக்கிற வரை குடும்ப கலாச்சார அழிவை யாரால் தடுக்க முடியும்?

1 comment:

தமிழ். சரவணன் said...

கள்ளக்காதலினால் 155 கொலைகள்... தினமலரில் வெளியான செய்தி..
தொடரட்டும் கள்ளக்காதல் தொண்டு. குறையட்டும் மக்கள் தொகை

ஆத்திரத்தில் அதிகரிக்கும் படுகொலைகள்: உறவினர்-நண்பர்கள் பகை, கள்ளக்காதல் காரணம்


http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=15954

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.