இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, August 04, 2009

சட்ட தீவிரவாதத்திற்கு ஒரு செருப்படி!

மருமகளை மாமியார் மிதித்தால் குற்றமில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி - இது செய்தித்தாள் கொடுத்த பரபரப்பு தலைப்பு.

இந்த செய்திப் பதிவிற்கு கீழுள்ள மற்றெhரு செய்தியைப் பாருங்கள். அமெரிக்க நாட்டு பத்திரிக்கைகள் செய்திகளை கையாளும் விதம் எப்படி இருக்கிறதென்று. இப்படித்தான் பரபரப்பிற்காக பொய் வரதட்சணை கேசுகள் எல்லாம் செய்தித்தாள்களில் வேறு விதமான கோணத்தில் காட்டப்பட்டு மனைவியர் எல்லாம் அடிமைகளாக இருப்பது போலவும் கணவர்களும் அவர்களது உறவினர்களும் வரதட்சணை கொடுமை செய்வது போலவும் சித்தரிக்கப்படுகிறது. அதைப் படித்து விட்டு அப்பாவியான பொது ஜனம் ஐயோ பாவம் பொம்பளையை கொடுமை செய்கிறhர்கள் என்று ஒரு தலைப் பட்சமாக தலையாட்டி விட்டு சமூக சீரழிவிற்கு வழிசெய்து தருகிறhர்கள்.

------------------------------------------------------------------------------------------------

DM News: 4 Aug 2009

ஒரு பெண்ணை அவரின் கணவனோ, மாமியாரோ அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்களோ காலால் உதைத்தால், அதை கொடுமையான செயலாக கருதி வழக்குத் தொடர முடியாது.

அதேபோல், "உன்னை விவாகரத்து செய்து விடுவேன்' என, மிரட்டுவதையும் கொடுமையாக கருத முடியாது என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தென்ஆப்ரிக்காவில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையேயான திருமண சச்சரவுகள் தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதிகள் சின்கா, சிரியாக் ஜோசப் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:

திருமணமான பெண்ணை அவரின் கணவரோ அல்லது குடும்பத்தினரோ காலால் உதைத்ததையும், "உன்னை விவாகரத்து செய்து விடுவேன்' என, மிரட்டுவதையும் கொடூரமான செயலாக கருத முடியாது. இதற்காக அவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது. அதேபோல், மருமகளை மாமியார் கண்டிப்பதையும், அறிவுரை கூறுவதையும், தனது பழைய ஆடைகளை மருமகளுக்கு கொடுத்து, அதை அணியச் சொல்வதையும் குற்றமாகக் கருத முடியாது.

அதற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498ஏ-ன் கீழ் வழக்கு தொடர முடியாது. இருப்பினும், திருமணத்தின் போது தம்பதியருக்கு கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்களை மாமியார் எடுத்துக் கொண்டால், அதை நம்பிக்கைத் துரோகமாகக் கருதி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406ன் கீழ் வழக்குத் தொடரலாம். அதுமட்டுமின்றி, "என் மகனிடம் சொல்லி உன்னை விவாகரத்து செய்ய வைப்பேன்' என, மாமியார் கூறுவதையும் இந்திய தண்டனைச் சட்டம் 498ஏ-ன் கீழ் குற்றமாகக் கருத முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சட்டப் புத்தகத்திலுள்ள சட்டங்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் உச்ச நீதிமன்றம் விளக்கமளித்தால் தான் அப்பாவிகளின் மீது பதியப்படும் பொய் கேசுகளிலிருந்து விடுதலை கிடைக்குமோ? அப்படியென்றhல் எத்தனை அப்பாவிகளால் உச்ச நீதிமன்றம் வரை செல்ல வசதி இருக்கிறது? அதைவிட எத்தனை பொன்னான ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?

தீர்ப்பின் நகலை படித்தால் தான் சரியான உண்மை தெரியும். மேலும் பல சுவாரஸ்யமான உண்மைகள் வெளிவரும்.


நீதிமன்றத் தீர்ப்பின் உண்மை நகலை இங்கே படித்துப்பாருங்கள்:
http://www.498a.org/forum/viewtopic.php?f=16&t=4925&start=0&st=0&sk=t&sd=a


--------------------------------------------------------------------------------------------------
மேலுள்ள செய்திக்குசெய்தித்தாள் கொடுத்த பரபரப்பு தலைப்பிற்கும் இந்த செய்திக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

DM News: Aug 02, 2009

அமெரிக்க பத்திரிகைகளில் கசாப் யார் தெரியுமா?

மும்பை தாக்குதலில் சிக்கிய அஜ்மல் கசாப்பை பயங்கரவாதி என்று குறிப்பிட, அமெரிக்க பத்திரிகைகள் தயங்குகின்றன.

மும்பை தாக்குதலை நடத்தி, நூற்றுக்கணக்கான பேரை கொன்று குவித்த பயங்கரவாதிகளில் சிக்கிய ஒரே பாக்., பயங்கரவாதி அஜ்மல் கசாப் பற்றி அமெரிக்க பத்திரிகைகள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.சமீபத்தில், ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை முதல் பக்கத்தில் அவன் படத்துடன் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் உட்பட பல பத்திரிகைகள் பெரிய செய்தியை வெளியிட்டுள்ளன. ஆனால், கசாப்பை "கன் மென்' (துப்பாக்கி ஏந்தியவர்) என்று தான் குறிப்பிட்டுள்ளன; பயங்கரவாதி என்று எதிலும் சுட்டிக்காட்டவில்லை.

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் கிளார்க் ஹைட் கூறுகையில், "அப்பாவி மக்களை துன்புறுத்தி, அவர்களை கொல்வதன் மூலம் தங்களின் அரசியல், மத, இன மற்றும் காரணம் தெரியாத குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும்; அப்படி துடிப்பவர்களின் சார்பில் செயல்படுவோரை எப்படி அழைப்பது என்பதற்கு சில வரைமுறைகள் உள்ளன. அதை தாண்டி, பத்திரிகைகள் விமர்சிக்கவோ, அழைக்கவோ கூடாது. அதன்படி நாங்கள் சில அடிப்படை நடைமுறைகளின் படி, "துப்பாக்கி ஏந்தியவர்' என்று குறிப்பிடுகிறோம்' என்று தெரிவித்தார்.

"அமெரிக்க பத்திரிகைகள் நடைமுறைப்படி ஒரு குற்றவாளி ஒப்புக் கொண்டாலும், கோர்ட்டில் அவன் தண்டனைக்கு உட்பட்டு, பயங்கரவாதி என்று அழைக்கப்படாதவரை அவனை பயங்கரவாதி என்று குறிப்பிட முடியாது. மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளின் செயல் தான் என்றாலும், இன்னும் சில கட்டங்கள் தாண்டி தான் அந்த வார்த்தையை பிரயோகிக்க முடியும்' என்றும் சில பத்திரிகையாளர்கள் கூறினர்.


1 comment:

தமிழ். சரவணன் said...

இந்த இணையதளபக்கத்திற்க்கு சென்று தங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய வேண்டுகின்றேன்....

"ஆக.15ல் 'விடுதலைப் பிரகடனம்' செய்யும் மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்!"


http://thatstamil.oneindia.in/news/2009/08/05/india-harassed-husbands-club-to-seek-freedom.html#cmntForm

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.