சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, August 07, 2009

மருமகள் ஜாக்கிரதை!!!

வெளிநாட்டில் வசிப்பவரை மணக்க விருப்பமா? பெண்களுக்கு தேசிய கமிஷன் அறிவுரை

வெளிநாட்டில் வேலை செய்யும் மணமகனை மணக்க போகும் பெண்களுக்கு, தேசிய பெண்கள் கமிஷன் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

கை நிறைய சம்பாதிக்கும் மணமகனுடன் சந்தோஷமாக வாழப் போவதாக நினைத்து கொண்டு வெளிநாடு செல்லும் பெண்கள் பலர், அங்கு ஏமாற்றப் பட்டு நிர்கதியாக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். எனவே, வெளிநாட்டு மணமகனை தேர்வு செய்யும் பெண்ணின் பெற்றோர், சில நடைமுறைகளை பின்பற்றும் படி தேசிய பெண்கள் கமிஷன் கூறியுள்ளது. அவற்றின் விவரம் வருமாறு:

வெளிநாட்டு மணமகனின் பாஸ்போர்ட்டில் உங்கள் மகளின் பெயர் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும். போன் மூலமோ, இ-மெயில் மூலமாகவோ திருமணத்தை உறுதி செய்யாதீர்கள். இடைத்தரகர்களையோ, மணமக்களை அறிமுகப்படுத்தும் நிறுவனத்தையோ கண்ணை மூடிக்கொண்டு நம்பாதீர்கள். வெளிநாட்டில் கிரீன் கார்டு கிடைக்கும் என்பதற்காக மகளை திருமணம் செய்து கொடுக்காதீர்கள்.

திருமணம் செய்து கொள்ளப் போவதை ஒரு போதும் ரகசியமாக வைக்காதீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மூலம் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர்களை பற்றி விசாரியுங்கள். உங்களுக்கு பரிச்சயம் இல்லாத எங்கோ ஒரு மூலையில் நடக்கும் திருமணத்துக்கு ஒத்து கொள்ளாதீர்கள்.

பதிவு திருமணம் மட்டுமே உறுதியானது என நம்பாதீர்கள். வெளிநாட்டுக்கு போய் திருமணம் செய்து கொள்ளலாம், என்ற மணமகனின் பேச்சை நம்பாதீர்கள். வெளிநாட்டு மாப்பிள்ளையை நம்பி மோசம் போகும் பெண் களை காப்பாற்ற போதுமான சட்டம் இல்லை. வெளிநாட்டுக்கு அழைத்து கொண்டு போய் அங்கே கொடுமைப் படுத்தும் கணவனின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் வகையில் விதிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும்.

வெளிநாட்டில் கணவனால் ஏமாற்றப்படும் பெண்ணுக்கு, இந்திய தண்டனை சட்டப்படி அவளது கணவனை விசாரிக்க வேண்டும். பெண்ணை கொடுமைப்படுத்தும் மகனை பற்றிய தகவலை வெளிப்படுத்தாத பெற்றோர் அல்லது உறவினர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தேசிய பெண்கள் கமிஷன் ஆலோசனை தெரிவித்துள்ளது.

****************************************************************************

வெளிநாட்டில் வேலை செய்யும் மகனுக்கு மணமகள் தேடும் தாய்மார்களே தந்தைமார்களே, சகோதரனுக்கு மணப் பெண் தேடும் சகோதரிகளே சகோதரர்களே, தோழனுக்கு தகுந்த வாழ்க்கைத் துணை தேடும் தோழிகளே தோழர்களே மிக மிக கவனமாக இருங்கள்!

வெளிநாட்டில் வாழும் ஆண்கள் இந்தியாவில் திருமணம் செய்வதற்கு முன்பு நாட்டிலுள்ள "சட்ட தீவிரவாத" சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். இல்லையென்றhல் திருமணம் என்ற சதி வலை விரித்து அதன் பிறகு பொய் வரதட்சணை கேசுகளை அரசாங்க உதவியுடன் அப்பாவி ஆண்கள், அவரது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர் மீதும் பதிவு செய்து பணம் கறக்கலாம் என்ற எண்ணத்தில் பல "அபலைப் பெண்களும்" அவர்களது குடும்பமும் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது. ஜாக்கிரதை.

இது போன்ற "அபலைப் பெண்கள்" கீழே குறிப்பிட்டுள்ள நோக்கங்களுக்காக பலி கடாக்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள்:

1. கஷ்டப்பட்டு தன் சொந்த முயற்சியால் வேலை தேடி வெளிநாட்டில் வேலை செய்யும் கணவனிடமிருந்து பணம் கறந்து தன்னுடைய பெற்றேhர்களுக்கு கொடுக்க வேண்டும்.

2. வெளிநாட்டு குடியுரிமை போன்ற வசதிகளை வலியில்லாமல் பெற்றுக் கொள்ளலாம். பிறகு அவனை "ஏதாவது ஒரு கேசு போட்டு " கழற்றி விட்டு விட்டு தேவையான வேறு ஒரு ஆளைப் பிடித்து விடலாம்.

3. வெளிநாட்டில் இருப்பவனை திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் அவனுடன் தங்கியிருந்து விட்டு பிறகு நாட்டிற்கு திரும்பி வந்து "டெம்ப்ளேட் ஐயாக்கள்" உதவியுடன் சதியாலோசனை செய்து பலவகையான பொய் கிரிமினல் கேசுகள் பதிவு செய்து கூண்டோடு அவனது குடும்பத்தையே மிரட்டலாம். பிறகு ஒரு நல்ல தொகை பேரம் பேசி கறந்து விடலாம். பிறகென்ன மனம் போல் அடுத்த ஆளை தேடிக்கொண்டு தொழிலை வழக்கம் போல் ஆரம்பித்து விடலாம்.

இது போல மேலும் பல சுவாரஸ்யமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த தளத்திற்குச் செல்லுங்கள் http://tamil498a.blogspot.com/

ஒரு ஆளை திருமணம் செய்து விட்டு எப்படி மற்றெhரு திருமணம் செய்முடியுமென்று
ஒரு சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

அது ரொம்ப சுலபம்......

முதல் திருமணம் செய்த ஆள் ஆண்மையற்றவன் அதனால் என்னை தன் குடும்பத்தோடு சேர்ந்து வரதட்சணை கொடுமை செய்தார்களென்று IPC498A, வரதட்சணை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி போன்ற கேசுகளை பதிவு செய்யலாம் (எல்லாமே இலவசம். அதனால் எத்தனை செக்ஷ்ன் வேண்டுமானா
லும் சேர்க்கலாம்). வெளிநாட்டில் இருந்த பெண்ணை இங்கிருந்த கணவர் குடும்பத்தார் எப்படி கொடுமை செய்தார்கள்? லாஜிக்கே இல்லையே என்று புத்திசாலித்தனமாக நீங்கள் கேள்வி கேட்பதாக நினைத்து ஏதாவது கேட்டுவிடப் போகிறீர்கள். அவ்வளவு தான். இந்த வரதட்சணை கொடுமைகளுக்கெல்லாம் நீங்கள் தான் திட்டம் வகுத்துத் தந்தாக உங்கள் பெயர் FIR-ல் சேர்க்கப்பட்டு விடும்.

எந்த வித உறவும் இல்லை. அதனால் இந்த திருமணம் செல்லாது என்று கோர்ட்டில் தேய்மானமில்லாத உத்திரவாத சர்டிபிகேட் கூட வாங்கிக் கொடுக்கவும் அதற்கான ஆலோசனை வழங்கவும் கமிஷன் அடிப்படையில் வேலை பார்க்
"டெம்ப்ளேட் ஐயாக்கள்" தயாராக இருக்கிறhர்கள்.

மேற்படி பொய் கேசுகளுக்கு எந்த வித செலவும் செய்ய வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக வருமானம் கிடைக்கும். ரொம்ப முக்கியமா
விஷயம் என்னன்னா பொய் கேசு போட்டவர்கள் சார்பாக அரசாங்கமே செலவு செய்து கேசுகளை நடத்தி "வெற்றிக் கனிகளை" இந்த "அபலைகளுக்கு" பறித்துக் கொடுக்கும்.

பின் குறிப்பு:
எந்த நாட்டில் எது நடந்தாலும் இந்த "அபலைப் பெண்கள்" அங்குள்ள போலிசுக்கு தகவலோ அல்லது புகாரோ செய்யமாட்டார்கள். தங்களது நாட்டுக்கு வந்து தான் புகார் செய்வார்கள்.
ஏனென்றhல் அவ்வளவு தேசப்பற்று.
இ.த.ச. (IPC) என்ற இந்திய தண்டனைச் சட்டங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுதேசிக் கொள்கையுடைய தேசப்பற்றhளர்கள்.

முக்கியமான பின் குறிப்பு:
பொய்கேசு பதிவு செய்பவருக்கு எந்த
வித தண்டனையும் கிடையாது. இது உலகறிந்த உண்மை.

வெளிநாட்டு "பணம் சம்பாதிப்பதில்" பல வழிக
ளும், கைதேர்ந்த பலவித ஆட்களும் இருக்கின்றனர்! நீங்க தான் கவனமாக இருக்கணும்... புரியுதா?
2 comments:

தமிழ். சரவணன் said...

சரியான கட்டுரை...

ஒரு நாளிதலில் சுதேசிப்பெண் ஒருவர் இரண்டு லட்சம் சம்பளம் வாங்கும் கணவர் பத்துலட்சம் லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக புகார் கொடுத்தார்... அதுவும் அமெரிக்காவில் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி அடித்துக்கொடுமைப்படுத்துவாரம்... நமது பாரம்பரியத்தைகாப்பதற்குத்தான் அந்த பெண்குல மணிவிளக்கு அமெரிக்கா காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் பிளைட்பிடித்துவந்து சென்னையில் புகார்கொடுத்தாராம்...

வருங்காலத்தில் இதுபோல் விளம்பரப்பலகை வைத்தாலூம் ஆச்சரியப்படுவதிற்கில்லை..

1. வரதட்சணை வழக்கு போட ---- ரூபாய்
2. சிறையில் அடைக்க ---ரூபாய்
3. சிறையில் அடைக்காமல் வீட்டிற்குமுன் வந்து கூத்தாட்ம் போட்டு அவமானப்படுத்த ----ரூபாய்

மற்றும் ஆடித்தள்ளுபடியாக 20சதவித தள்ளுபடியும் உண்டு

தமிழ். சரவணன் said...

மிக அருமையாண தீர்ப்பு... இது போல் தீர்ப்புகள் காக்கி உடுப்பில் (இத்தீர்ப்புக்கு பிறகு கடுப்பில்) ஒளிந்து கொண்டிருக்கும் மிருகங்களுக்கு சரியான தீர்ப்பு... வாழ்க மனிதநேயம்

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.