சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, August 01, 2009

எல்லாப் பெண்களும் பெண்கள் அல்ல

ஆஸ்கர்' விருது பட பிங்கி: பாத்திரம் துலக்கும் பரிதாபம்

DM News: August 01,2009
----------------------------------------------------------------------------------------------
பொய் கேசு குப்பைகளை நீதிமன்றங்களில் கொட்டி நாட்டை கேவலப்படுத்திக் கொண்டிருக்கும் "படித்த நவநாகரீக அப்பாவி பெண்களுக்கு" ஆதரவு தரும் கூட்டத்தின் கண்களுக்கு ஆஸ்கர் விருது வாங்கி நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்தச் சிறுமியும் ஒரு பெண் தான் என்று தெரிவதற்கு வாய்ப்பில்லை தான்.
------------------------------------------------------------------------------------------------

"லக்னோ: ஆஸ்கர் விருது பெற்ற குறும்படமான "ஸ்மைல் பிங்கி'யில் நடித்த சிறுமி பிங்கி, வறுமையின் காரணமாக கிராமத்தில், ஆடுகளை பராமரித்தல் மற்றும் பாத்திரம் துலக்குதல் என கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.

இந்தியாவில் தயாரிக்கப் பட்ட குறும்படம் "ஸ்மைல் பிங்கி'. இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த படத்தில் உ.பி., மிர்சாபூர் மாவட்டம், ராம்பூர் தபாய் கிராமத்தை சேர்ந்த பிங்கி என்ற சிறுமி நடித்திருந்தார். இச்சிறுமியின் தந்தை ராஜேந்திரா; கிராமத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். வறுமையின் காரணமாக பிங்கியால் கல்வி கற்க முடியவில்லை.

இதுகுறித்து, பிங்கியின் தந்தை ராஜேந்திரா கூறியதாவது: பிங்கியை கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் சேர்த்தோம். ஆனால், பிங்கிக்கு வகுப்புக்கு செல்ல போதிய நேரம் கிடைப்பதில்லை. அவளது தாய்க்கு உதவியாக, ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது மற்றும் பாத்திரங்கள் துலக்குவது போன்ற வேலைகளை செய்து வருகிறாள்.

பிங்கி நடித்த குறும்படம் ஆஸ்கர் விருது பெற்ற போது, எங்கள் கிராமத்தை அனைத்து வசதிகள் நிறைந்த மாதிரி கிராமமாக மாற்றுவதாக பலரும் வாக்குறுதி அளித்தனர். ஆனால், யாரும் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. லோக்சபா தேர்தலின் போது எங்கள் கிராமத்திற்கு வந்த இந்திய நீதிக்கட்சி தலைவர் உதித் ராஜ், பிங்கியை போர்டிங் பள்ளியில் சேர்ப் பதாக உறுதியளித்தார்.

ஆனால், அதுவும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு ராஜேந்திரா கூறினார். இதுகுறித்து, மகேந்திர ராய் என்ற அதிகாரி கூறுகையில்,"பிங்கியின் கிராமத்திற்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கான திட்டங்கள் போடப்பட்டுள்ளன. நிதி கிடைத்ததும், அத்திட்டங்கள் துவக்கப்படும்' என்றார்.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.