இந்த வார வாரமலரில் வந்த செய்தி:
அந்துமணி பதில்கள்!
வாழ்க்கைத் துணையை, "கால்குலேட்டிவ்' ஆக தேர்ந்தெடுப்பதில் வல்லவர்கள் இக்கால ஆண்களா, பெண்களா?
அவன்ட்ட டூ-வீலர் இருக்குதா, கார் இருக்குதா, சொந்த வீடா, வாடகை வீடா... சொத்து, பத்து எவ்வளவு, சம்பளம், வருமானம் எவ்வளவு?'- இப்படி எல்லாம் கணக்கு போட்டு, வாழ்க்கைத் துணையை முடிவு செய்வது பெண்கள் தான். மனதுக்குப் பிடித்து விட்டால், ஓ.கே., சொல்லி விடுபவர் ஆண் என்கிறார் பெண் உதவி ஆசிரியர் ஒருவர்!
===================================================
மேலே கூறப்பட்டுள்ள உண்மையையும் நடைமுறையில் அப்பாவி ஆண்கள் எப்படி துன்புறுத்தப்படுகிறhர்கள் என்பதையும் ஒப்பிட்டுப்பாருங்கள். காசுக்காக கொடுமை செய்வது கணவனா அல்லது மனைவியா என்று புரியும். ஆனால் காசுக்காக மனைவியை வரதட்சணை கொடுமை செய்வதாக அப்பாவி ஆண்கள் மீதும் அவர்தம் குடும்பத்தார் மீதும் அபாண்டமான பொய் வழக்குகள் பதிவுசெய்யப்படுகிறது.
திருமணத்திற்கு முன்பே பணத்தைக் குறி வைத்துத் தான் திருமணத்திற்கு இக்காலப் பெண் சம்மத்கிறhள்?! திருமணமான பிறகு கணவன் அந்தப் பெண்ணின் பேராசைக்கு அடிபணியவில்லை என்றhல் பொய் வரதட்சணை வழக்கு என்னும் ஆயுதத்தை எடுத்து அனைவரையும் சீரழிக்கத் துணிந்து விடுகிறhள்.
திருமணத்திற்கு முன்பே கணவனின் சொத்துக்களை அபகரிக்க அவள் போடும் திட்டம் திருமணத்திற்கு பிறகு தோல்வியடையும் போது, எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும் போது அவள் பெண்ணுரிமை என்ற பெயரில் பொய் கேசுகளை போட்டு அந்தப் பணத்தை பெற்றுவிடவேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறhள்.
இது போன்ற பெண்களுக்குத் துணையாக சட்டமும் அதனை செயல்படுத்தித் தர அனைத்துத் தரப்பிலும் பெண்ணடிமைவாத தீவிரவாதிகளும் நிறைய இருக்கின்றனர்.
மேலுள்ள செய்திப்படி தற்கால இளம் பெண்களின் மனநிலை பணம், ஆடம்பரம், பகட்டு என்ற வலையில் பின்னப்பட்டுள்ளது நன்றகாத் தெரிகிறது. நவ நாகரீக மங்கைகளின் மனம் பலவிதமான பேராசைகளால் பின்னப்பட்டு அடுத்தவரின் வாழ்க்கையைக்கூட அழிக்கலாம் என்ற மனநிலை தான் இப்போது மேலோங்கி இருக்கிறது. அதற்கு பெண்ணுரிமை என்ற சாயம் பூசப்பட்டுள்ளது.
வரதட்ணை கொடுமை என்ற காலமெல்லாம் என்றேh போய் விட்டது. ஆனால் பேராசை பிடித்த சில நவ நாகரீக பெண்கள் தங்களின் தவறhன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இன்னமும் அந்த துறுபிடித்த வரதட்சணை தடுப்புச் சட்டங்களை தவறhகப் பயன்படுத்தி பொய்யான வழக்குகளை போட்டு தானும் சீரழிந்து பல அப்பாவி குடும்பங்களையும் சீரழித்துக் கொண்டிருக்கிறhர்கள்,
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி கு...
10 years ago
1 comment:
கோவையில் குடும்ப பாதுகாப்பு இயக்கும் (SAVE INDIAN FAMILY FOUNDATION) வரும் சனிக்கிழமை அன்று 498ஏ (வரதட்சணை கொடுமை சட்டம்) என்னும் சனியில் பிடிபட்டவர்களை காக்க ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது... 498ஏ (வரதட்சணை கொடுமை சட்டம்) பொய்வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் கலந்துகொள்ளவும்...
தொடர்புக்கு -- 9790019658
Post a Comment