சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, August 02, 2009

லாபம் யாருக்கு?

லாபம் யாருக்கு?

தினமும் 37 பேர் மனு: விவாகரத்து அதிகரிப்பு

DM News: Aug 02, 09

கோழிக்கோடு: கேரளாவில் விவாகரத்து கேட்டு தினமும் 37 பேர், கோர்ட்டை அணுகி வருகின்றனர். திருமணம் செய்வது விவாகரத்து செய்வதற்கா என்ற கேள்வி அம்மாநில மக்களிடையே எழுந்துள்ளது.

கல்வியில் முதல் இடம் பிடித்த கேரள மாநிலத்தில், தற்போது விவாகரத்து செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இவ்வாண்டு ஜூன் மாதம் வரை எடுத்த கணக்கெடுப்பில் தினமும் 37 பேர் வீதம் பல்வேறு இடங்களில் உள்ள கோர்ட்டுகளில் விவாகரத்துக்காக விண்ணப்பித்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 24 ஆக இருந்தது.

இது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வந்து 30, 33, 36 என்று உயர்ந்து விட்டது. இவ்வாண்டு ஆறு மாதங்களிலேயே இந்த எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலும் 52 ஆயிரத்து 525 வழக்குகள் கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி தினமும் சராசரியாக 31க்கும் மேல் மனு தாக்கல் செய்யப்படுகிறது.

இது 2005ம் ஆண்டில் இருந்து 2008ம் ஆண்டிற்குள் 4,336 வழக்குகளாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகள் எல்லாமும் இந்து திருமண சட்டத்தை அடிப்படையாக கொண்டவை. இக்கணக்கெடுப்பில் கிறிஸ்தவ, முஸ்லிம் சமுதாய மக்களின் விவாகரத்துக்கள் சேர்க்கப்படவில்லை. இது தவிர, கணவன் மனைவி தகராறு, சொத்து, ஜீவனாம்சம் மற்றும் கிரிமினல் வழக்குகள் சேர்க்கப்படவில்லை.

அவை எல்லாவற்றிலும் சேர்த்து கணக்கெடுத்தால் தற்போதைய எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்பது உண்மை. கடந்த 2005ம் ஆண்டு முதல் கடந்த ஜூன் மாதம் வரை விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை வருமாறு: 2005 - 9,064, 2006 - 11,135, 2007 - 12,163, 2008 - 13,400, 2009 (ஜூன் மாதம் வரை) - 6,763. இதே நிலை நீடித்தால் இவ்வாண்டு இறுதிக்குள் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டிவிடும் என தெரிகிறது.

மாநிலத்தில் விவாகரத்து கோருவோர் எண்ணிக்கை திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம் மாவட்டங்களில் தான் அதிகம். இதில் நான்கரை ஆண்டுகளில் எர்ணாகுளம் மாவட்டத்தில் தான் 9,229 பேர் விவாகரத்து கேட்டு கோர்ட்டுகளை அணுகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

லாபம் யாருக்கு?

பெருகி வரும் இது போன்ற வழக்குகளால் சிலருக்கு தொழில் நன்றhக முன்னேற்றடையும். அவர்களுக்கு லாபம் தான். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு குடும்பம் என்ற சொல்லுக்கு அர்த்தம் அகராதியில் கூட இல்லாமல் போகப் போகிறது.

கணவன் மனைவி பிரச்சினைகளை சமாதானம் செய்ய பெரியவர்களுடன் கூடிய கூட்டுக் குடும்ப முறை இப்போது இல்லை. அப்படியே இருந்தாலும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுவதில்லை. குடும்பத்தில் உள்ள பெரியவர்களெல்லாம் இப்போது பொய் வரதட்சணை கேசுகளில் சிக்க வைக்கப் பகடைக் காய்களாகத் தான் பயன்படுத்தப் படுகிறhர்கள்.

மக்கள் தொகையில் முன்னேறிக் கொண்டிருந்த நாடு இப்போது குடும்ப அழிவுப் பாதையிலும் முன்னனியில் சென்று கொண்டிருக்கிறது. இதன் விளைவு - அப்பா அல்லது அம்மா இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையில் அடுத்த முன்னேற்றம் வரும்.


1 comment:

தமிழ். சரவணன் said...

தினமலரில் வெளியான செய்தி

மருமகளை மாமியார் மிதித்தால் குற்றமில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி

http://www.dinamalar.com/kutramnewsdetail.asp?News_id=3647

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.