இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, August 08, 2009

மீண்டும் ஒரு ஆகஸ்ட்டுப் புரட்சி!

கணவர் உரிமை மாநாடு: சிம்லாவில் நடக்கிறது

பெங்களூரு: சுதந்திர தினத்தன்று கணவர் உரிமை மாநாடு சிம்லாவில் நடைபெற உள்ளது. இந்திய மக்கள் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடினாலும், ஆண்கள் பலர் பெண்களிடம் அடிமைப்பட்டு கிடக்கின்றனர்.

முழு சுதந்திரம் கிடைக்காத நிலையில் உள்ள இந்த ஆண்கள், இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் வரும் 15ம் தேதி மாநாடு நடத்த உள்ளனர். இந்திய குடும்ப பாதுகாப்பு அறக் கட்டளையின் தலைவர் அனில் குமார் இதுகுறித்து கூறியதாவது: இந்திய சட்டங்கள் பெண்களுக்கு சாதகமாகத்தான் உள்ளன.

வரதட்சணை கொடுமை, விவாகரத்து உள்ளிட்ட வழக்குகளில் ஆண்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. எனவே, ஆண்களுக்கு சம உரிமை கோரி வரும் 15ம் தேதி சிம்லாவில் நடக்கும் மாநாட்டில் தீர்மானம் இயற்றப்படும். மனைவியின் கொடுமைக்கு ஆளான 30 ஆயிரத்துக்கும் அதிகமான கணவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அனில் குமார் கூறினார்.

Courtesy: Dinamalar ஆகஸ்ட் 09,2009



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.