இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, August 12, 2009

கோடி ருபாய் கொடுத்தாலும் திரும்பக் கிடைக்குமா?

முந்தைய "மருமகள் ஜாக்கிரதை!!" என்ற தலைப்பில் எழுதப்பட்ட பதிவில் சொல்லப்பட்ட கருத்துக்கும் இன்று தினமலரில் வெளியாகிவுள்ள செய்திக்கும் என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்!!
---------------------------------------------------

ஆண்மையற்ற கணவரிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு வழக்கு

சென்னை:ஆண்மையற்ற கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியும், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கக் கோரியும் சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.சென்னையைச் சேர்ந்த சவும்யா என்பவர் தாக்கல் செய்த மனு:

மடிப்பாக்கத்தில் வசிக்கும் சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் கடந்த ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 30 சவரன்நகை, வெள்ளிப் பாத்திரங்கள், வரதட்சணை வழங்கப்பட்டது. திருமண மண்டபத்தில் சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. களைப்பாக உள்ளதாகக் கூறி, எனது கணவர் தூங்கிவிட்டார்.மறுநாள் கணவரின் வீட்டுக்குச் சென்றேன். அன்று இரவு, படுக்கை அறைக்குதனது பெற்றோரையும் எனது கணவர் அழைத்தார்.

எனது மாமனார், மாமியார் இருவரும் படுக்கை அறைக்கு வந்து எங்களுடன் சேர்ந்து உறங்கினர். தொடர்ந்து இந்த நிலை நீடித்தது.வேலைக்குச் சென்ற எனது கணவர், தொடர்ந்து இரண்டாவது ஷிப்ட், இரவு நேர ஷிப்ட்டுக்கு சென்றார். இதனால், எங்களுக்குள் உடல் ரீதியான உறவு ஏற்படவில்லை. மாமனார், மாமியார் என்னை மோசமாக, வேலைக்காரி போல் நடத்தினர். மாதம் தோறும், சம்பளப் பணம் முழுவதையும் அவர்களிடம் கொடுத்துவிட வேண்டும்.

உடல் நலம் சரியில்லாமல் இருந்த எனது தந்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை. அவர்களிடம் உண்மையை சொல்லிவிடுவேன் என்பதால் தடுத்தனர். திருமணம் நடந்த நாள் முதல், எங்களுக்குள் உறவு இல்லை என எனது மாமியாரிடம் தெரிவித்தேன். எனது மாமனாரும் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்.வேலையில் இருந்து ராஜினாமா செய் யும்படி என்னை நிர்பந்தித்தனர். ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொண்டு வரும்படி வற்புறுத்தினர்.

டாக்டர் ஒருவரிடம் சென்றோம். எனது கணவருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை யளிக்க வேண்டும் என்று டாக்டர் கூறினார்.அதற்கு, அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனது பெற்றோரிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கில், எனது மாமனார் மற்றும் மாமியார், தங்கள் மகனுக்கு என்னை திருமணம் செய்து வைத்துள்ளனர். தங்கள் மகன், ஆண்மையற்றவர் என தெரிந்தும் இவ்வாறு செய்துள்ளனர்.

நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மனஉளைச்சல் அடைந்தேன். இது குறித்து மடிப்பாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.எங்களுக்கு நடந்த திருமணம் செல்லாது என உத்தரவிட வேண்டும். ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு சென்னை குடும்ப நல கோர்ட் தள்ளிவைத்துள்ளது.இதற்கிடையில், மடிப்பாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் சவும்யா மனு தாக்கல் செய்துள்ளார்.

------------------------------------------------------------------


மேற்படி செய்தி உண்மையா அல்லது பொய்யா என்பது கேள்வியல்ல. இது போல பொய் 498A, Dowry கேசுகளில் நீதிமன்றத்தில் அது பொய்யான கேசு என்று நிருபித்த பிறகு பொய் 498A, Dowry கேசு போட்ட பெண்ணிடமிருந்து வாழ்க்கையை இழந்த பாதிக்கப்பட்ட அப்பாவி கணவருக்கும் அவரது ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் கோடி ருபாயை நீதிமன்றம் வாங்கிக் கொடுக்குமா? அப்படி நேர்மையாக நடந்திருந்தால் இப்போது நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?


பொய் கேசுகளால் அப்பாவி கணவருக்கும், அவரது வயதான தாய், தந்தைக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படாதா? மன உளைச்சல் ஏற்படாதா? அவர்கள் மனிதர்கள் கிடையாதா? அவர்களுக்கு ஏன் நஷ்டஈடு வழங்கப்படுவதில்லை?


கோடி ருபாய் கொடுத்தாலும் இழந்த வாழ்க்கையும், நீதிமன்றங்களில் அலைந்து பாழாய்ப் போன காலமும், குடும்ப மானமும் திரும்பக் கிடைக்குமா?



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.