இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, August 01, 2009

சட்ட நடைமுறை!

வாரமலரில் படித்த செய்தி:

குடும்பக் கோர்ட்டில் ஒரு வழக்கு. ரயில்வேயில் பணிபுரியும் ஒருவர்; சற்று வயதானவர். அவர் மனைவிக்கும், அவருக்கும் தகராறு. மனைவியை விவாகரத்து செய்வ தற்காக அவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். விவாகரத்து செய்தால், அந்த வயதான அம்மணிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமே... கிழவியின் மீது இருந்த கோபத்தில் - அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்கக் கூடாது என்ற திட்டத்தோடு - அவர் தன் இலாக்காவில் பல்வேறு லோன் போட்டு, கடன் வாங்கி, எங்கோ செட்டில் பண்ணி விட்டார். இப்போது கடன் பிடித்தம் போக அவர், கையில் வாங்கும் சம்பளம் 500 ரூபாய் தானாம். எனவே, இந்தப் பணம் தன் வாழ்க்கைச் செலவுகளுக்கே போதாது என்றும், அதனால், தன் மனைவிக்கு ஜீவனாம்சம் தர இயலாது என்றும் கோர்ட்டில் சொன்னார்.

"ஜீவனாம்சம் தர மறுத்தால், உங்களை சிறை வைக்க நேரிடும்...' என்றார் நீதிபதி. பிறகு, வாதியின் மனைவியை நோக்கி, "உன் கணவர் ஜீவனாம்சம் தர மறுக்கிறார். அவரை ஜெயிலில் தள்ளட்டுமா?' என்று கேட்டார்.

கோபத்துடன், "எனக்கு காசு கொடுக்கலைன்னா, நான் எப் படி சாப்பிடறது? அந்த ஆளை ஜெயில்லே போடுங்க... ஜெயில்லே போடுங்க...' என் றாள் கிழவி.

"அவரை ஜெயிலில் போட்டால், அவர் சாப்பாட்டு செலவுக்கு நீ படிப்பணம் தர வேண்டும். தருவாயா?' என்று கிழவியிடம் கேட்டார் நீதிபதி.

"என்ன, நான் பணம் தரணுமா?' என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் கிழவி.

"ஆமாம்! இது கடன் கேசு. கடனாளியை ஜெயிலில் போட்டால், கடன் கொடுத்தவர் தான் கைதியின் சாப்பாட்டுக்கு பணம் தரணும்; அதுதான் சட்டம்...' என்றார் நீதிபதி.

கோபத்துடன் நீதிபதியைப் பார்த்து, "அட, மூள கெட்டவனே! நான் சாப்பிட வழி இல்லாம, அந்த ஆளு கிட்டே பணம் வாங்கிக் குடுடான்னா, அவனுக்கு சாப்பாடு போட என்கிட்டே பணம் கேட்கிறியே... புத்தி கீதா ஒனக்கு...' என்றாள் கிழவி ஆவேசமாக! நீதிபதி அதிர்ந்து போனார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்குப் பெயர் தான் சட்ட நடைமுறை. இப்படித் தான் வழக்குகள் நடத்தப்படுகிறது. இதில் சட்டத்தின் மூலமாக நீதியைப் பெற ஏதாவது ஒரு சிறு வழியாவது தெரிகிறதா? குடும்பப் பிரச்சினைகளில் வரும் பொய்வழக்குகள் நாட்டில் இப்படித்தான் நடைமுறையில் கையாளப்படுகிறது. குறிப்பாக பொய் 498A, வரதட்சணை புகார்களில் சட்டமும் நீதியும் இணையாத இரு கோடுகள். உண்மையான அப்பாவிகளுக்கு எப்படி நீதி கிடைக்கும்?

பொய் புகார் கொடுத்த பெண்ணின் கணவரின் தாயாக இருப்பதால் வயதான தாயும் குற்றவாளி, அந்தக் கணவரைப் பெற்ற தாயின் வயிற்றில் பிறந்ததால் கணவரின் சகோதர சகோதரிகளும் குற்றவாளிகள். இது தான் இன்று நடைமுறையில் இருக்கும் பெண்கள் பாதுகாப்பு சட்டம்.

எங்காவது இது போன்ற பொய் கேசுகளில் கணவர் மட்டுமோ , அல்லது தனி நபர் ஒருவர் மீது மட்டுமோ புகார் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது தான் உலகத்தில் மிக ஆச்சரியமான விஷயமாக இருக்கும்.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.