'உங்களால் முடியலே... கடவுளிடம் முறையிட சொல்றேன்' : டி.ஜி.பி.,க்கு கோர்ட் கண்டிப்பு
மும்பை : "உங்களால் முடியவில் லை என்றால் சொல்லி விடுங்கள்; மகனைக் கண்டுபிடித்துக் கொடுக்க கோவிலுக் குப் போய் கடவுளிடம் வேண் டிக் கொள்ளச் சொல்கிறேன்!' - தந்தை கடத்திய மகனைக் கண்டுபிடித்துத் தரக்கோரிய தாயின் மனுவை விசாரித்த மகாராஷ்டிர ஐகோர்ட் நீதிபதி இப்படிக் கண்டிப்புடன் கூறினார். மும்பையில் உள்ள உல்லாஸ் நகரை சேர்ந்தவர் ப்ரீத்தி; இவர் கணவர் பன்டி; இவர்களுக்கு சுஜால் என்ற மகன் இருக்கிறான். கணவன் மனைவி தகராறு காரணமாக இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில், சுஜாலைக் கட்டாயப்படுத்தி கணவர் அழைத்துச்சென்று விட்டார்.
போலீசில் புகார் தந்தும் பயனில்லாததால், ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு செய்தார் ப்ரீத்தி." என் ஐந்து வயது மகன் சுஜாலை அவனது தந்தை கடத்திக் கொண்டு போய்விட் டார், கண்டுபிடித்துத் தாருங் கள்' என்று கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிலால் நஸ்கி, ஜோஷி ஆகியோர் போலீசின் செயல்பாடற்றத் தன்மையை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
"இந்த வழக்கில் விசாரணை செய்ததில், போலீஸ் சரிவர எந்த நடைமுறையையும் கையாளவில்லை. குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாததற்குக் காரணங்களைச் சொல்லாமல், நடவடிக்கை எடுத்திருக்கலாம். போலீசால் ஒரு குழந்தையைக் கூட கண்டுபிடிக்க முடியாதா? இதற்குத் தெளிவாக விளக்கம் தாருங்கள். இல்லையென்றால் இயலாமையைக் கூறுங்கள். நான் குழந்தையின் தாயிடம் வருத்தம் தெரிவித்து கோவிலுக்குப் போய் கடவுளிடம் முறையிடுமாறு கூறிவிடுகிறேன்' என்று நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர்.
====================================
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எங்கு செல்வது ??? நீதி மன்றங்களை மட்டும் நம்பும் அப்பாவிகளின் கதி??????
No comments:
Post a Comment