சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, May 16, 2010

பெற்றால் மட்டும் தாயல்ல!

தான் வாழவில்லையென்றால் யாருமே வாழக்கூடாது என்று நினைப்பவள்தான் இந்தக் காலத்து இந்தியத் தாயோ? காலம் மாறிவிட்டது. தாய்மையும் மாறிவிட்டது. இதற்குப் பெயர்தான் ஒருவேளை புதுமைப் புரட்சியோ!

ஆற்றில் குழந்தையை வீசி தற்கொலைக்கு முயன்ற பெண் கைது
தினமலர் 17 மே 2010


நியூயார்க்:குடும்பப் பிரச்னையில் மனம் வெறுத்துப் போன தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் 19 மாத கைக்குழந்தையை ஆற்றில் வீசி, தானும் விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அமெரிக்காவில் நடந்துள்ளது. இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்; பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்தவர் தேவி சில்வியா. இவர் கணவர் டொமினிக் ஜேம்ஸ் பிருத்விராஜ். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வர தேவி விரும்பினார். ஆனால், கணவர் தன் வேலை காரணமாக சிகாகோ, கலிபோர்னியா, நியூயார்க் என எப்போதும் பறந்து கொண்டே இருந்ததால், வீட்டைப் பற்றி அதிகம் அக்கறை காட்டவில்லை.


இம்மாதிரி தனிமை வாழ்க்கையில் நொந்த அவருக்கு, வழி ஏதும் கிடைக்கவில்லை. தனியே குழந்தைகளுடன் வாழும் போது மனமொடிந்து போன தேவி சில்வியா, அங்குள்ள ஹட்சன் ஆற்றில் தனது 19 மாத கைக்குழந்தையை வீசி, தானும் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்தார். குளிர் நிரம்பி சில்லிட்ட ஆற்றில் விழுந்ததும், குழந்தை நடுங்கி நீல நிறமானது.ஆனால், உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குழந்தை அதிக குளிரான நீரில் விழுந்ததால் அதன் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. 'இப்படி நடந்தாலாவது என் குழந்தையை என் கணவரிடம் சேர்க்கமாட்டார்களா என்று தான் செய்தேன்' என்று தேவி கூறியுள்ளார். மன பாதிப்பு சிகிச்சைக்காக தனி மருத்துவமனையில் தேவி இருப்பதால், அங்கிருந்தே வழக்கு விசாரணை நடந்தது.

தற்கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனை பாதியாகக் குறைக்கப்படும். ஆனால், தேவி தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. விசாரணையில், தேவி மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். குழந்தையை தாய் பார்க்கக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார். தேவியின் கணவர் இன்னமும் வந்ததாக தெரியவில்லை.

===============

நல்ல வேளை. மனதுக்குள் வெறுப்பு ஏற்பட்டுவிட்டது என்பதற்காக கணவனையும் அவனது குடும்பத்தையும் பொய் 498A வழக்குகளில் சிக்கவைத்து சின்னாபின்னப்படுத்தி வேடிக்கை பார்க்கவேண்டும் என்று நினைக்கும் சாதாரண மருமகளைப் போல இல்லாமல் இவர் தன்னையும் தன் குழந்தையையும் மட்டுமே அழித்துக்கொள்ள நினைத்திருக்கிறார். அதைப் பொறுத்தமட்டில் இவர் ஒரு கலியுக தேவதை!

இந்த சம்பவம் இந்தியாவில் நடந்திருந்தால் கணவனின் ஒட்டுமொத்தக்குடும்பத்தின் மீதும் பழிபோட்டு இந்நேரம் சிறையில் தள்ளியிருப்பார்கள் நம் நாட்டு (அ)நீதிக் காவலர்கள்.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.