இந்தியாவில் இப்போதெல்லாம் எல்லாவித குற்றங்களுக்கும் மீன்கடை சந்தை போல விலை விபரப் பட்டியல் போடும் காலம் வந்துவிட்டது போலிருக்கிறது!
சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமுதாயத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி இந்தியப் பொருளாதார சந்தைக்கு மேலும் பல வாடிக்கையாளர்களை உருவாக்கிவிடும் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.
சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமுதாயத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி இந்தியப் பொருளாதார சந்தைக்கு மேலும் பல வாடிக்கையாளர்களை உருவாக்கிவிடும் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.
கற்பழிப்பு விலை ரூ. 32 லட்சம்
தினமலர், 30 மே 2010
புதுடில்லி : கற்பழிப்பு புகாரில் சிக்கிய டாக்டர், பாதிக்கப்பட்ட நர்சுக்கு 32 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முன்வந்ததால், அவர் மீதான கற்பழிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய சுப்ரீம் கோர்ட் முடிவு செய்தது.
காசியாபாத்தைச் சேர்ந்த பிரபல டாக்டர் பிரதீப் குப்தா. இவர் தன் மருத்துவமனையில் பணிபுரிந்த நர்சை கற்பழித்தார். இதுதொடர்பாக, காசியாபாத் போலீசில் 2007ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை முதலில் அவர் மறுத்தார். கற்பழிப்பு புகார் கூறிய பெண், நர்ஸ் இல்லை என்றும், வாடகைத் தாயாக வந்தவர் என்றும் கூறினார். அதேநேரத்தில், கருவுற்றிருந்த நர்சுக்கு, தனது டாக்டர் மனைவியின் உதவியுடன் கருக்கலைப்பு செய்யவும் பிரதீப் குப்தா முயன்றார். அவரின் முயற்சி தோல்வியடைந்தது. நர்சுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், டாக்டர் மீதான கற்பழிப்பு வழக்கு காசியாபாத் கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது, டாக்டர் பிரதீப் குப்தாவுக்கு டி.என்.ஏ., சோதனை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.இதற்கு தடை விதிக்கக் கோரி, ஐகோர்ட்டில் பிரதீப் குப்தா மனு தாக்கல் செய்தார். அதை, ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. இதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டி.என்.ஏ., சோதனைக்கு தடை விதித்தது. இதற்கிடையில், டாக்டர் மற்றும் நர்சு தரப்பில் அவர்களின் வக்கீல்கள் மூலமாக சமாதான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதில், குழந்தை மற்றும் நர்சின் எதிர்காலத்திற்காக ரூ.32 லட்சம் தருவதாக டாக்டர் தரப்பில் கூறப்பட்டது. இந்த விவரம் சுப்ரீம் கோர்ட்டிலும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டாக்டர் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிபதிகள் அல்தாமஸ் கபீர் மற்றும் எச்.எல்.கோகலே தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முடிவு செய்தது. ஒப்புக்கொண்டபடி ரூ. 32 லட்சத்தில், முதல் தவணையாக ரூ.14 லட்சத்தை ஜூன் 30ம் தேதிக்குள் வழங்க வேண்டும். இரண்டாம் தவணையாக, ரூ.10 லட்சத்தை ஜூலை 31ம் தேதிக்குள்ளும், மூன்றாம் தவணையாக ரூ.8 லட்சத்தை ஆகஸ்ட் 27ம் தேதிக்குள்ளும் வழங்க வேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், "கற்பழிப்பு குற்றமானது, தண்டனையை குறைக்கக் கூடிய குற்றம் அல்ல. இருந்தாலும், பாதிக்கப் பட்ட நர்சு பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் நலனை கருத்தில் கொண்டும், அரசியல் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ், சுப்ரீம் கோர்ட்டிற்கு வழங்கப்பட்டுள்ள விசேஷ அதிகாரங்களின் அடிப்படையிலும், டாக்டர் மீதான வழக்கை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்,'' என்றனர். மேலும், ஒப்புக் கொண்டபடி டாக்டர் பணத்தை செலுத்திய பின்னரே, அவருக்கு எதிரான கற்பழிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்பதால், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெறும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
====================
இன்னும் கொஞ்ச நாளில் கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை போன்ற புகார்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று ஒரு பட்டியல் போட்டு ஒவ்வொரு நீதிமன்ற, காவல் நிலைய வாசல்களில் அறிவிப்புப் பலகை வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. தங்களது பணத் தேவைக்கேற்ப பெண்கள் பொய் வழக்குகள் போட்டும் நஷ்ட ஈடு பெற்றுக்கொள்ளலாம். கலியுக மகளிர் சுய உதவிக்குழுக்கள் இப்படித்தான் உருவாகும் போலிருக்கிறது!
மேலே சொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி கற்பழிப்பிற்கு 32 லட்சம் என்று விலையை நிர்ணயம் செய்திருக்கிறது. சபாஷ்!!!
இந்த சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கித் தவிக்கும் பல அப்பாவிகளைக் காப்பாற்ற ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? அதற்கு மட்டும் தங்களால் ஏதும் செய்யமுடியாது என்று கூறி அரசாங்கத்தை கைகாட்டிவிட்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது வினோதமாக இருக்கிறது. இதில் லட்சங்கள் கைமாறும் சந்தர்ப்பம் இல்லாததால் தயங்குகிறார்கள் போலிருக்கிறது. நீதி தேவதைக்கு மட்டும்தான் அந்த உண்மை தெரியும்!
மேலே சொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி கற்பழிப்பிற்கு 32 லட்சம் என்று விலையை நிர்ணயம் செய்திருக்கிறது. சபாஷ்!!!
இந்த சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கித் தவிக்கும் பல அப்பாவிகளைக் காப்பாற்ற ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? அதற்கு மட்டும் தங்களால் ஏதும் செய்யமுடியாது என்று கூறி அரசாங்கத்தை கைகாட்டிவிட்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது வினோதமாக இருக்கிறது. இதில் லட்சங்கள் கைமாறும் சந்தர்ப்பம் இல்லாததால் தயங்குகிறார்கள் போலிருக்கிறது. நீதி தேவதைக்கு மட்டும்தான் அந்த உண்மை தெரியும்!
1 comment:
டவுரிகேசு போடலயோ! டவுரி கேசு!
1. புகார் வாங்கி புருசனை தனிக்குடுத்தனம் வைக்க ரூ.xxxx
2. கும்பல ஜீப்ல போயி புருசன் வீட்டுககு முன்னாடி குத்தாட்டம போட ரூ. xxx (with quator and கோழி பிரியாணி)
3. எதுக்கும் ஒத்து வல்லையா கொய்யல போடு 498ஏ பொய்கேச. இதுக்கு கொஞ்சம் செலவு அதிகமாகும் ரூ. xxxxx
4. F.I.R ல புதுசா பெயர் சேர்த்து கைது செய்து சிறையில் அடைக்கனும்மா இதுக்கு ரூ. xxxx
சிக்கிரம் ஓடிவாங்க! முன்னாடி வருபவர்களுக்கு முன்னுரிமை மற்றும் சிறப்பு சலுகைகள் மற்றும் 10 சதவிதம் தள்ளுபடியும் உண்டு
Post a Comment