இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, May 05, 2010

இந்திய சிறப்புச்சட்டங்கள் பாதுகாக்கும் பெண்கள் உண்மையாகவே இரக்ககுணம் உள்ளவர்களா?

பலகாலமாக பல முட்டாள்கள் ஒன்றுகூடி பெண்கள் என்றால் பலவீனமானவர்கள் என்று முடிவு செய்து முட்டாள்தனமாக பல சட்டங்களை இயற்றியிருக்கிறார்கள். இந்த சமுதாயத்தில் பல முட்டாள்களும் அப்படித்தான் நம்பிக்கொண்டு பெண்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையாட்டிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஒரு இளம் பெண் பொய் வரதட்சணைப் புகார் கொடுத்தால் போதும். இந்த முட்டாள் கூட்டம் ஆகா பெண்ணுக்கு கொடுமை நடந்துவிட்டதே என்று ஓநாய் போல பரிதாபப்படுவார்கள்.

உண்மையில் தாய்மை குணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் சட்டத்தில் சிறப்புச்சலுகைகள் கொடுக்கப்படவேண்டும். தாய்மை குணம் என்பது குறிப்பிட்ட பாலினத்திற்கு மட்டும் உரியதல்ல. தாய்மை குணம் ஆண், பெண் என்ற இருபாலினத்திலும் இருக்கிறது. அதே சமயம் வன்முறைக் குணம் என்பதும் இருபாலினத்திலும் இருக்கிறது. அப்படியிருக்கும்போது பெண்களுக்கு மட்டும் எதற்கு சிறப்புச்சலுகை? பாலினத்தை மட்டும் அடிப்படையாக வைத்து சட்டங்களை இயற்றுவது எவ்வளவு பெரிய துரோகம்?

இந்தக் கேள்விக்கு பதிலை யோசிப்பதற்கு முன் கீழுள்ள செய்தியையும் வீடியோவையும் பாருங்கள்.

கள்ளக்காதலை கண்டித்தவர் கொலை
தினமலர் மே 06,2010

திருப்புவனம் : திருப்புவனம் அருகே கீழடியில் உள்ள செங்கல் சேம்பரில் திருநெல்வேலி, பரைப்பாடியை சேர்ந்த லிங்கம் (42), இவரது அண்ணன் மாடசாமி, இவரது மனைவி ராணி ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். இதில் மாடசாமி மனைவி ராணிக்கும், கீழடி மூக்கன் மகன் செல்லமணிக்கும் தொடர்பு ஏற்பட்டது. நேற்று மாலை 6.30 மணியளவில் லிங்கம் ராணியை கண்டித்து உள்ளார். ஆத்திரமடைந்த ராணி, செல்லமணி இருவரும் அரிவாளால் லிங்கத்தை வெட்டியதில் அவர் இறந்தார். மானாமதுரை டி.எஸ்.பி., சுப்பிரமணி யன், இன்ஸ் பெக்டர் சங்கர் விசாரித்து வருகின் றனர். ராணி, செல்லமணி யை தேடி வருகின்றனர்.

இளகிய மனம் படைத்தோர் இந்த செய்தியோடு நிறுத்திக்கொள்ளுங்கள். பின்வரும் வீடியோக் காட்சிகளை கண்டிப்பாக பார்க்க வேண்டாம்.


பெண்கள் ஒன்றுகூடி பெண்ணுக்கு செய்யும் வன்முறைக் காட்சிகள்






தவறு செய்தவர்களை தண்டிக்க தனிமனிதர்களுக்கு உரிமையில்லை. சட்டம் மட்டும்தான் அந்த வேலையை செய்யவேண்டும். ஆனால் பெண்கள் என்று வரும்போது அவர்கள் எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஏனென்றால் பெண்கள் என்றால் அப்பாவிகள், வன்முறையே செய்யத்தெரியாதவர்கள் என்ற கண்ணோட்டத்துடன் பல குருடர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மேலுள்ள செய்தியையும் வீடியோவையும் பார்த்துவிட்டீர்களா? இப்போது இந்திய அரசாங்கத்தின் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்று பாருங்கள். பெண்கள் என்றால் எப்போதும் ஆண்களின் வன்முறைக்குள்ளாபவர்கள் என்றும் ஆண் என்றால் எப்போதும் பெண்ணை அடித்துக் கொடுமை செய்பவன் என்றும் வரையறை செய்துவைத்திருக்கிறார்கள் இந்த நாட்டு சட்டமேதைகள்! இது எந்தவகையில் நேர்மையான சட்டம் என்று யோசித்துக்கொண்டே இருங்கள்.


Definitions.-In this Act, unless the context otherwise requires,-

(a) "aggrieved person" means any woman (Note: Woman is always a victim and Male is Never considered as a victim of domestic violence) who is, or has been, in a domestic relationship with the respondent and who alleges to have been subjected to any act of domestic violence by the respondent;

(e) "domestic incident report" means a report made in the prescribed form on receipt of a complaint of domestic violence from an aggrieved person;

(q) "respondent"
means any adult male person (Note: Male is always accused respondent) who is, or has been, in a domestic relationship with the aggrieved person and against whom the aggrieved person has sought any relief under this Act:Provided that an aggrieved wife or female living in a relationship in the nature of a marriage may also file a complaint against a relative of the husband or the male partner;




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.