இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, April 30, 2010

காவல் குடும்பத்தில் புகுந்து கலக்கும் குடும்ப வன்முறைச் சட்டம்!

எத்தனை நாள் அடுத்தவருக்குக் கொடுத்துக்கொண்டிருப்பது? தான் அப்பாவிகளுக்குக் கொடுத்துக்கொண்டிருப்பதை தானும் ஒருநாள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அது காவலானாலும் சரி, நீதியானாலும் சரி. அதுதான் இயற்கையின் நீதி.

=================================================

'மனைவி, குழந்தைக்கு தொந்தரவு தரக்கூடாது' பெண் எஸ்.ஐ., தொடர்ந்த வழக்கில் கணவருக்கு கோவை கோர்ட் உத்தரவு
தினமலர் மே 01,2010
கோவை : பெண் எஸ்.ஐ., தொடர்ந்த வழக்கில், 'மனைவி, குழந்தைக்கு எந்த வகையிலும் தொந்தரவு தரக்கூடாது' என, கணவருக்கு கோர்ட் தடை விதித்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள ஜி.கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் பிரியம்வதா(25). போலீஸ் எஸ்.ஐ., ஆக பணியாற்றும் இவர், கோவை ஜே.எம்.எண்: 6 கோர்ட்டில் தனது கணவர் மீது, குடும்ப வன்முறைச் சட்டத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றிய ஜெயக்குமாருக்கும், எனக்கும் 2003, நவ., 3ல் ராசிபுரம், அத்தனூர் அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின், சிறை அருகே வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தினோம். திருமணமாகி எட்டாவது மாதத்தில் போலீஸ் எஸ்.ஐ., ஆக தேர்வு செய்யப்பட்டேன்.

'எதிர்கால வாழ்க்கை மற்றும் பணியின் காரணமாக, இரண்டு ஆண்டுக்கு குழந்தை வேண்டாம்' என தெரிவித்தேன், ஆனாலும், எஸ்.ஐ., பணியில் சேர்ந்த இரண்டு மாதத்தில் கர்ப்பமானேன். இச்சூழலில் கணவர் ஜெயக்குமாரின் அம்மாவும், தங்கையும் எங்களுடன் வந்து தங்கினர். அவர்களுக்கு அதிகமாக செலவு செய்ததால், எங்களிடையே பணத்தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் 2006, ஆக., 29ல் எனக்கு குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்க எனது பெற்றோரை கணவர் அனுமதிக்கவில்லை. எனது ஒவ்வொரு செயலிலும் குறை கண்டுபிடித்து தகராறு செய்தார். தொடர்ந்து இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டது. ஒருமுறை, 10 மாத குழந்தையை பைக்கில் எடுத்துச் சென்றவர், குழந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டி என்னிடம் பணம் பறித்தார்.

கணவர் செய்யும் சித்ரவதைக்கு, அவரது அம்மாவும், சகோதரியும் உடந்தையாக இருந்தனர். குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் தகராறு செய்வதாக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் சொல்வதாக மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து எனக்கு கொடுத்த சித்ரவதையாலும், குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் கோவை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தேன். வழக்கு நிலுவையில் உள்ளது. இதேபோல், 'கணவரால் எந்த தொந்தரவும் வரக்கூடாது' என்று கோரியும், அவரது செயல்களுக்கு நிரந்தர தடை கோரியும், மாவட்ட முதன்மை முன்சீப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

தனியாக வசிக்கும் என்னை நேரிலும், போனிலும் மிரட்டக்கூடாது. எஸ்.எம்.எஸ்., அனுப்புவதை தடை செய்ய வேண்டும். வீட்டுக்கு எதிரே ரோட்டில் நின்று தகாத வார்தைகளால் திட்டுவதும், பள்ளிக்குச் சென்று குழந்தையை மிரட்டுவதையும் நிறுத்திக்கொள்ள, கணவருக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜோதி, 'எந்த வகையிலும் மனைவிக்கும், குழந்தைக்கும் தொந்தரவு தரக்கூடாது; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என பெண் எஸ்.ஐ.,யின் கணவருக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
======================================================

இன்று அப்பாவிகளுக்குப் பொய்வழக்குப் போட்டுக்கொண்டிருக்கும் சதிகாரக்கூட்டம் நாளை இயற்கை கொடுக்கப்போகும் தண்டனையை அனுபவிக்கவேண்டும். இது மாற்றமுடியாத மாறாத உலக நீதி. அதன் வெளிப்பாடுகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.