ஒரு பெண்ணால் ஒரு அப்பாவி ஆணுக்கு 1991 முதல் 2010 வரை செய்யப்பட்ட கொடுமை. தற்காலத்தில் பெண்களுக்கு சட்ட அறிவு நன்றாகவே வளர்ந்துவிட்டது. இந்த சட்டங்கள் மூலம் கணவனை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தலாம் என்று நன்கு தெரிந்துவைத்திருக்கின்றனர். இதுவும் ஒருவகையில் பெண்கள் முன்னேற்றம்தான்!
மும்பை: பத்து ஆண்டுகளாக, சந்தேகப்பட்டே கொடுமைப்படுத்திய மனைவியிடமிருந்து, அப்பாவி கணவனுக்கு விவாகரத்து மூலம் விடுதலை கொடுத்துள்ளது மும்பை குடும்ப நல கோர்ட். அமித் (47), மீனா (49) இருவரும் 1991, ஜூலையில் மணம் புரிந்து கொண்டனர். இவர்களின் திருமண வாழ்வு 1992, ஜூன் மாதத்தோடு முடிந்து போனது. தன் கணவரின் டைரியில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கவிதையை பார்த்து, அவருக்கு கள்ளத் தொடர்பு உள்ளது என்று மனைவி சந்தேகப்பட்டார். இது தான் பிரச்னைக்கு காரணம்.
இதையடுத்து, மீனா தன் சகோதரருடன் போய் விட்டார். இருந்தும் கணவர் மீது கொண்ட சந்தேகப் பேய் மீனாவைத் தொடர்ந்து விரட்டியதால் 1994, ஜூனில் கணவரின் வீட்டுக் கதவை உடைத்து, குடிபுகுந்தார். கணவருக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்து, அவரை வீட்டுக்குள் நுழையவிடாமல் செய்து விட்டார். கடந்த 2000ல் கோர்ட் இடைக்காலத் தடை உத்தரவு பெற்று, அமித் தன் வீட்டுக்குள் நுழைந்தார். சந்தேகம் தீராத மீனா, தன் கணவருக்கு பல வழிகளில், 'டார்ச்சர்' கொடுக்க ஆரம்பித்தார். திருமணமானதிலிருந்து இருவருக்குள்ளும் தாம்பத்ய உறவு ஏற்பட அவர் சம்மதிக்கவில்லை. சின்ன, சின்ன விஷயங்களுக்கெல்லாம் அமித்திடம் சண்டை போட்டார். தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். அமித்தை அடிக்க ஆரம்பித்தார். ஒழுங்காக சமையல் செய்வதில்லை. அமித்துக்கு உடல்நலம் சரியில்லாத போது கூட, அவரை கவனித்துக் கொள்ளவில்லை.
மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல், அமித் மனம் உடைந்து போனார். மன உளைச்சலுக்கு ஆளானார். தேவையில்லாத செலவுகள் செய்ய வேண்டியவரானார். இதனால் குடும்ப நல கோர்ட்டில், விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அவருடன் வாழ விரும்புவதாக அவரது மனுவை எதிர்த்து வேறொரு மனு தாக்கல் செய்தார் மீனா. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,'கள்ளத் தொடர்பு என்ற சந்தேகத்தால் மீனா, அமித்தை பயங்கரமாகக் கொடுமைப்படுத்தியுள்ளார். 8 ஆண்டுகள் தனியாக வாழ்ந்து, பின் 10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பின்னும் கூட, மீனா தன் கொடுமையை குறைக்கவில்லை. மீனாவின் நடத்தைகள் யாவும் புகுந்த வீட்டில் வாழ விரும்பும் மனைவியின் நடத்தையாகத் தெரியவில்லை' என்று கூறி, அமித்துக்கு மீனாவிடமிருந்து விவாகரத்து கொடுத்து அவரை 'விடுதலை' செய்தனர்.
==============================
ஒரு பெண்ணால் ஒரு அப்பாவி ஆணுக்கு 1991 முதல் 2010 வரை செய்யப்பட்ட கொடுமை. தற்காலத்தில் பெண்களுக்கு சட்ட அறிவு நன்றாகவே வளர்ந்துவிட்டது. இந்த சட்டங்கள் மூலம் கணவனை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தலாம் என்று நன்கு தெரிந்துவைத்திருக்கின்றனர். இதுவும் ஒருவகையில் பெண்கள் முன்னேற்றம்தான்!
அதேசமயம் தேவையற்ற அதிகவளர்ச்சியும் ஆபத்தில்தான் போய் முடியும். தேவையில்லாமல் வளரும் திசுக்களுக்கு மருத்துவத்தில் “புற்றுநோய்” என்று பெயர். அதுபோலத்தான் பெண்சுதந்திரம் என்பது இன்றையகாலகட்டத்தில் தவறான திசையில் வளர்ந்து புற்றுநோய் போல சமுதாயத்தில் பரவி அப்பாவிகளை பலிவாங்கிக்கொண்டிருக்கிறது. “புற்றுநோய்க்கு” இதுவரை சரியான மருத்துவ சிகிச்சை கிடையாது. அதுபோல இந்தத் தவறான சமுதாயப் புற்றுநோய்க்கும் மருந்து இல்லை. மருத்துவம் செய்யவும் இதுவரைஅரசாங்கமும் முன்வரவில்லை. இந்தியக் கணவன்களுக்கு வேறு வழியே இல்லை. இந்த புற்றுநோய்களுக்கு பலியாகவேண்டியதுதான். இந்தியக் கணவன்கள் கொடுமைகளை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்!
தீமையாக இருந்தாலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்து சட்ட அறிவு பெற்றுவிட்டார்கள் என்று ஒரு கொடூர மகிழ்ச்சி கிடைக்கிறதல்லவா! பெண்பித்துப்பிடித்த பெண்ணடிமைகளுக்கு அது போதும்.
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி க...
10 years ago
No comments:
Post a Comment