சுவாரஸ்யமான செய்தி! அப்பாவிகளை பொய் 498A வழக்குகளில் சிக்கவைத்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் நீதியும் காவலும் தாங்கள் விரித்திருக்கும் அதே வலையில் தாங்களே சிக்கிக்கொண்டால் என்னவாகும் என்பதை இந்த செய்தி சொல்கிறது. அப்பாவிகளின் சாபம் சும்மா விடுமா?
அரசு கூடுதல் வக்கீலுக்கு முன்ஜாமீன்
தினமலர் மே 07,2010
மதுரை: மதுரையில் வரதட்சணை கொடுமையால் பேராசிரியை தற்கொலை செய்த வழக்கில் அரசு கூடுதல் வக்கீல் சாமுவேல் ராஜ், அவரது மனைவி உஷா வாசுகிக்கு ஐகோர்ட் கிளை முன்ஜாமீன் வழங்கியது. மதுரை ஐகோர்ட் கிளை அரசு கூடுதல் வக்கீல் எஸ்.பி.சாமுவேல்ராஜ். இவரது மகன் வக்கீல் கால்வின் கிறிஸ்டோபருக்கும், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ஸ்டாலின் மைக்கேல் மகள் பேராசிரியை நிஷானா ஜெபமலருக்கும் 2009 ஜூலை 2 ல் திருமணம் நடந்தது. ஏப்ரல் 19 ல் நிஷானா ஜெபமலர் தந்தை வீட்டில் தற் கொலை செய்து கொண் டார். ஊமச்சிகுளம் போலீசார் விசாரித்தனர். வரதட்சணை கொடுமையால், நிஷானா தற்கொலை செய்தது தெரிந் தது. கால்வின் கிறிஸ்டோபர், சாமுவேல்ராஜ், தாயார் உஷா வாசுகி மீது வரதட்சணை கொடுமை பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சாமுவேல்ராஜ், உஷா வாசுகி முன்ஜாமீன் மனு நேற்றைக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. கால்வின் கிறிஸ்டோபரும் தனியாக முன்ஜாமீன் கோரி மனு செய்திருந்தார்.
மனுக்கள் நேற்று, நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன் விசாரணைக்கு வந்தன. சாமுவேல்ராஜ் சார்பில் வக்கீல் சுபாஷ் பாபு, கால்வின் சார்பில் வக்கீல் சுவாமிநாதன் ஆஜராயினர். அரசு தரப்பில் வக்கீல் முருகன் ஆஜரானார். நிஷானாவின் தாயார் சத்தியவாணி பொன்ராணி சார்பில் வக்கீல் குமார் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் ''சாமுவேல்ராஜ், அவரது மனைவிக்கு மட்டும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி,'' நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் இரு வாரங்களுக்கு ஊமச்சிகுளம் ஸ்டேஷனில் தினமும் காலையில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டது. கால்வின் மனு ஜூனுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment