இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, December 19, 2009

மனுநீதிச் சோழனும் பெண்கள் போடும் பொய் வழக்குகளும்

தினமலர் டிசம்பர் 20,2009

புதுடில்லி:
"காதலன் கற்பழித்ததாக பெற்றோர் தான், புகார் கொடுக்க சொல்லி என்னை வற்புறுத்தினர்" என, கோர்ட்டில் கல்லூரி மாணவி சாட்சியம் சொல்லியுள்ளார்.
டில்லி, படா ஹிந்துராவ் காலனியை சேர்ந்த கல்லூரி மாணவி, பக்கத்து வீட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் பவான் காஷ்யப்(22) என்பவர் தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் கூறினார். இதையடுத்து பவான் காஷ்யப் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்ததில்," பவானும், நானும்
காதலித்தோம். நானே விரும்பி தான் அவனுடன் உடல் ரீதியாக தொடர்பு கொண்டேன். திடீரென காஷ்யப் அவருடன் பணிபுரியும் பெண்ணுடன் பழகினார். நான் சந்தேகப்பட்டு பவானுடன் சண்டை போட்டேன்; இதனால் எங்கள் காதல் முறிந்தது. பெற்றோர், பவானை எங்கள் வீட்டுக்கு அழைத்து பேசினர். ஆனால், அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதையடுத்து பவான் என்னை கற்பழித்து விட்டதாக புகார் கொடுக்கும் படி பெற்றோர் என்னை வற்புறுத்தினர். இதனால், பவான் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தேன்' என்றார்.

இந்த பெண்ணின் வாக்குமூலத்தையடுத்து, பவான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது கல்லூரி மாணவியின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
==================================

100 க்கு 99 கற்பழிப்பு கேசுகள் நாட்டில் இ
ப்படித்தான் இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. கடையில் ஏதோஅல்வா வாங்கி சாப்பிடுவது போல சுலபமாக பெண்கள் அப்பாவிகள் மீது பல அபாண்டமான பழிகளைப் போட்டு விட்டு ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல இருக்கிறார்கள். இதை இங்கொன்றும் அங்கொன்றுமாக இந்திய நீதிமன்றமும் "கற்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது பெண்கள் பொறுப்பு தான் " என்றும், கொரியநாட்டு நீதிமன்றமும் "பெண்கள் குழந்தைகள் அல்ல, அவர்களுக்கும் பொறுப்பு உண்டு" என்றும் தோலுரித்துக்காட்டிவிட்டன .

ஆனால் அந்த உண்மையை ஏற்பதற்குத் தான் யாருக்கும் மனம் வரவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் இந்த நாட்டிற்கும் தான் வெகு தூரமாயிற்றே! எவ்வளவு தூரம் என்று தெரிந்து கொள்ள ஆவலகா இருந்தால் உண்மைக்காக கடைசி வரைப் போராடி அனைத்தையும் துறந்த அரிச்சந்திர மகாராஜா இன்று உங்கள் ஊரில் சிலையாக எங்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள் புரியும். அதனால் தான் என்னவோ சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட நீதிநெறி வழுவாமல் இருக்க தன் மகனையே தேர்க்காலில் இட்டு தண்டனை அளித்த மனுநீதி சோழனும் நீதிமன்றத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் வெளியே நிற்கவைக்கப்பட்டிருக்கிறார் போலும்!

படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள் நீதிக்காக ஆராய்ச்சி மணியடிக்கும் பசுவும் அதற்கு நீதி வழங்கிய மன்னர் தன் மகனை தேர்ச்சக்கரத்தில் இட்டுக் கொன்ற காட்சியும் தெளிவாகத் தெரியும்.
விலங்குகளுக்குக் கூட சமமான நீதி வழங்கப்படவேண்டும், தவறு செய்தது தனது மகனாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் என்று எண்ணிய அந்த மாமன்னர் இப்போது இந்திய சட்டங்களும், நீதிமன்றங்களும் பெண்களுக்கு மட்டும் குறிப்பாக இளம் பெண்களுக்கு மட்டும் சாதகமாக ஒருதலைபட்சமாக செயல்பட்டு பல அப்பாவி ஆண்களுக்கும், தாய்மார்களுக்கும் அநீதி இழைக்கப்படுவதை தினம் தினம் கண்டு வேதனையடையாமல் இருக்கவே அவர் நீதிமன்றத்திற்குள் இல்லாமல் வெளியே வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார் என்பது புரிந்திருக்கும்.

பாதிக்கப்பட்டது ஒரு விலங்காக இருந்தாலும் குற்றம் செய்தவர் அதற்குச் சமமான தண்டனையை அனுபவித்து அந்த அப்பாவிகள் அனுபவித்த அந்த வலியையும் வேதனையையும் உணர வேண்டும் என்று அனைத்து உயிர்களுக்கும் சமநீதி வழங்கிய உன்னதமான நீதியரசர் வாழ்ந்த நாட்டில் இப்போது பெண்கள் அப்பாவிகள் மீது அபாண்டமான பழிகளைப் போட்டு சிறையில் அடைத்துத் துன்புறுத்தி, 6-7 ஆண்டுகள் நீதிமன்றங்களில் அலைந்து அதற்குப்
பிறகு கடைசியில் அந்த அப்பாவிகள் குற்றமற்றவர் என்று சொன்னால் அதுவரை அந்த அப்பாவிகள் அனுபவித்த அந்த வேதனைகள் மறைந்து விடுமா?

சட்டத்தைத்
தவறாகப் பயன்படுத்தி அப்பாவிகளைத் துன்புறுத்தும் பெண்களுக்கு அந்த அப்பாவிகள் அடைந்த வேதனையையும், துன்பத்தையும், இழப்புகளையும், அவமானங்களையும் இன்றைய சட்டங்களும், நீதிமன்றங்களும் என்றாவது உணர்த்தியிருக்கின்றனவா? அல்லது இனியாவது உணர்த்துமா?

ஒருவரை நிரபராதி என்று சொல்வதை விட அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குச் சரியான நீதி தரப்படவேண்டும். சட்டங்கள் குற்றவாளிகளை தண்டிப்பதை விட அப்பாவிகளைக் காப்பாற்றுவதிலும் அவர்களுக்கு நீதி வழங்குவதிலும் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று உணர்த்தியவர் தான் மனுநீதிச்சோழன்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனுநீதிச் சோழனுக்கு இருந்த நடுநிலைதவறாத நீதி வழங்கும் அறிவும், அனைவரையும் சமமாக சீர்தூக்கிப் பார்த்து நேர்மையாக நீதி வழங்கிய திறமையும் இன்று நாகரீகத்திலும் (?), அறிவியல்
முன்னேற்றத்திலும், தொழில்நுட்பங்களிலும் பல மடங்கு முன்னேறியிருக்கும் அரசாங்கத்திற்கும், நீதித்துறைக்கும் இருக்கிறதா? வெளிநாட்டிலுள்ள சட்ட நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளப் பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் நீதித்துறை வல்லுனர்கள் தங்கள் நாட்டிலேயே ஒரு அற்புதமான நீதியரசர் நடுநிலை தவறாமல் நீதி வழங்கிய முறைகள் இருப்பது பற்றி யோசித்திருப்பார்களா? நீங்களாவது யோசித்துப்பாருங்கள்.

தினம் தினம் நீதிமன்றத்திற்கு செல்லும்போது இந்த மனுநீதி சோழனைப் பார்த்துவிட்டு யாராவது ஒரே ஒரு நீதிபதியோ அல்லது வழக்கறிஞரோ இந்தக் கேள்வியை ஒரு முறையாவது தங்கள் மனதுக்குள்ளாவது கேட்டுப் பார்த்திருப்பார்களா?

மாமன்னர் நீதியரசர் மனுநீதிச் சோழனின் மாண்புமிக்க வரலாறு தெரியாதவர்கள் தங்களது வீட்டிலிருக்கும் மூத்தோரைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் பாவம், பெரும்பாலான வீடுகளில் இப்போதெல்லாம் பெரியவர்கள் இருப்பதில்லை. ஒன்று மருமகளால் முதியோர் இல்லத்திற்கு விரட்டப்பட்டிருப்பார்கள், அல்லது அவளின் பொய் வரதட்சணை கேசில் சிக்கி நீதிமன்றங்களால் சிதைக்கப்பட்டிருப்பார்கள். அப்படிப் பெரியவர்களை இழந்துகொண்டிருக்கும் குடும்பங்களுக்காக அந்த வரலாறு கீழே தரப்பட்டுள்ளது.

வரலாற்றைத் தெரிந்து கொண்ட பிறகு செய்தித்தாளில் வந்துள்ள மேலுள்ள கற்பழிப்பு வழக்கு செய்தியை ஒப்பிட்டுப் பாருங்கள். இது போலத்தான் நாட்டில் பல பொய் வரதட்சணை வழக்குகளும் நீதிமன்றங்களில் கையாளப்படுகின்றன.

மனுநீதி சோழன் காலத்தில் ஒரு பசுவிற்குக் கிடைத்த நீதிகூட இன்று பலகோடி அப்பாவி ஆண்களுக்கும், வயதான தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை. ஆனால் மனிதர்களே இல்லாத நிலவிற்கு ராக்கெட் விட்டு மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம். இது எந்த வகை வளர்ச்சி? சிந்தியுங்கள்.

அன்று சூர்ப்பநகை என்னும் ஒரு பெண்ணின் தவறால் ராவணன் என்னும் ஒரு மகா பேரரசனே தன் பெருமையிழந்து, பெருஞ் சுற்றத்தையிழந்து, கடைசியில் தனது நாட்டையே இழந்தான். இன்று பல சூர்ப்பநகைகள் பொய் சொல்லி பொய் வழக்குகள் போட்டு எந்த ராஜ்ஜியத்தை வேரறுக்கப்போகிறார்களோ?

கூடுதல் செய்திகள் உங்கள் சிந்தனைக்காக


மனுநீதிச் சோழன்

சோழ நாட்டு மன்னர்களுள் மனுநீதிச் சோழன் சிறப்புக்குரிய ஓர் அரசன், அவனது மகன் வீதியில் தேர் ஓட்டிக் கொண்டு செல்லும் போது, தேரின் சக்கரத்திற்குள் அகப்பட்டு ஒரு கன்று இறந்து விட்டது. தாய்ப்பசு அரண்மனைக்குச் சென்று ஆராய்ச்சிமணியை அடித்தது. உடனே மன்னன் தன் மகனை அழைத்து வரச் சொன்னான். அவன் மீது தேரை ஏற்றி அவனையும் கொலை செய்ய ஆணையிட்டான். தன் மகனைத் தானே கொன்ற பழிக்கு அவன் அஞ்சவில்லை.


மகனை, இழந்த அந்தத் தாய்ப்பசுவின் மனநிலையை எண்ணினான்.அந்தத் தாய்ப்பசுவின் துயரத்திற்குக் காரணமாக இருந்தவன் யாராகஇருந்தாலும் தண்டனைக்கு உரியவன். எனவே அங்கு மன்னனுக்கு எப்பக்கமும் சாராமல் நீதி வழங்க வேண்டும் என்ற மனநிலையே இருந்தது. பின் விளைவுகளுக்கு அவன் அஞ்சவில்லை. எனவே,மனுநீதிச் சோழனின் பெருமை இன்றும் பேசப்படுகிறது.

17 ஆம் நூற்றாண்டில் ஒரு மனுநீதிச் சோழன்

தனது மகனின் தேர், ஒரு பசுங்கன்றின் மீது தற்செயலாக ஏறி, அதைக் கொன்றதற்காக மகன் என்று கூடப் பாராமல், மரண தண்டனை விதித்தான் மனுநீதிச் சோழன். இது புராண காலத்து நீதி. ஆனால் தவறுதலாக செய்த ஒரு கொலைக்காக மனைவி என்று கூடப் பாராது மரண தண்டனை விதித்தான் ஒரு முகலாய சக்ரவர்த்தி! யாரிவன்? ஜஹாங்கீர்தான்! அக்பரின் மகன்! ‘ஜஹாங்கீர்! என்றால் ‘உலகை வென்றவன்’ என்று பொருள்.

மக்களுக்கு உடனடி நீதி வழங்க ஆக்ரா கோட்டையில், மனுநீதி ஆராய்ச்சி மணியொன்றை கட்டி வைத்திருந்தான் இவன். ஒரு சமயம், இவனுடைய மனைவியான நூர்ஜஹான் தவறுதலாக, ஒரு பீரங்கியை இயக்கியபோது ஒரு சலவைத் தொழிலாளி, குண்டு பட்டு இறந்தார்.

தன் மனைவி என்றும் பாராது நூர்ஜஹானுக்கு மரண தண்டனை விதித்தார் ஜஹாங்கீர். பின்பு அந்தத் தொழிலாளியின் மனைவி, கெஞ்சிக் கேட்டுக் கொண்டதின் பேரில் நூர்ஜஹானை விடுதலை செய்தார். அந்த சலவைத் தொழிலாளியின் மனைவிக்கு நிறைய மானியம் தந்தார்.

19 ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை........

நீதி வேண்டுமா? தற்கொலை தான் ஒரே வழி! நீதி வேண்டுமா? தற்கொலை தான் ஒரே வழி என்று கட்டாயப்படுத்துகின்றன இன்றைய சமுதாயமும், தவறான சட்டங்களும்.



1 comment:

திருவாரூர் சரவணா said...

ஒரு பொண்ணு காதலன்கிட்ட இருந்து விலக நினைச்சு என் உறவினர் மேல பழியைப் போட்டுடுச்சு. அந்த பையனும் அதை உண்மைன்னு நம்பி எங்க உறவினரை அடிக்க ஆள் ஏற்பாடு பண்ணிட்டான். அப்புறம் அவர் அடிவாங்காம தப்பித்தது ஒரு கதை. இப்படியும் சிலர் இருக்காங்க. அதை என்னுடைய வலைப்பக்கத்தில் எழுதி இருக்கிறேன்.

http://writer-saran.blogspot.com/2009/12/blog-post_527.html

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.