சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, July 31, 2011

போலிஸ் திருடன் விளையாட்டு!

போலிஸ், திருடன் விளையாட்டா அல்லது போலிஸ் திருடன் விளையாட்டா என்று செய்தியைப் படித்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்
ஆகஸ்ட் 01,2011 தினமலர்

ஆலங்குடி : ஆலங்குடியில் லஞ்சப்பணத்துடன் ஓடியவர் போலீஸ் ஏட்டு என தெரியாமல், இன்ஸ்பெக்டர், துப்பாக்கியுடன் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் உள்ளார். இவர், பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி அதனால், கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார்.

கடந்த மாதம், ஆலங்குடி பாப்பம்பட்டி முக்கத்தில், அதிகாலையில் டாஸ்மாக் சரக்கு விற்ற பார் உரிமையாளர் முத்துக்குமாரை, தெருவில் அடித்து, உதைத்து ஊர்வலமாக ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றார். இதை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். உயர் அதிகாரிகள் "டோஸ்' விட்டதால், சில நாட்கள் அமைதியாக இருந்தார்.

நேற்று காலை மீண்டும் இன்ஸ்பெக்டர் தனது பார்வையை, "டாஸ்மாக்' கடைபக்கம் திருப்பினார். காலை 8 மணிக்கு சரக்கு விற்ற முத்துக்குமாரை பிடித்தார். ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றால் பிரச்னையாகி விடும் என்று, மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கச் சென்றார். அவர் சென்ற நேரத்தில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கணேசன் உட்பட யாரும் இல்லை. ரெய்டுக்கு சென்றிருப்பதாக அங்கிருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் கூறினார்.

அங்கேயே காத்திருந்த செந்தில்குமாரை தூரத்திலேயே பார்த்து விட்ட மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கணேசன், மாமூல் பணப்பையை ஏட்டு அம்பிகாபதியிடம் கொடுத்து, நான் சொன்ன பின், தந்தால் போதும் என்று கூறிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று செந்தில்குமாரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

ஸ்டேஷனுக்கு வந்திருப்பது யார்? என்று தெரியாமல், தூரத்தில் நின்று கொண்டிருந்த ஏட்டு அம்பிகாபதியை, ஆபீசுக்குள் போ' என்று கணேசன் சைகை காட்டினார். சைகையை தவறாக புரிந்து கொண்ட அம்பிகாபதி, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வந்து விட்டதாகக் கருதி, பணப்பையுடன் ஓட்டம் பிடித்தார். அதை பார்த்து, கணேசன் சத்தம் போட்டதால், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவரை துரத்தினர்.

காம்பவுண்ட் சுவரெல்லாம் ஏறிக் குதித்து ஓடிய ஏட்டுவை பிடிக்க முடியாததால், ஆத்திரமடைந்த செந்தில்குமார், "துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவேன்' என்று மிரட்டினார். அதனால், பணப்பையை மட்டும் வீசியெறிந்து விட்டு, அம்பிகாபதி தப்பிச்சென்றார். அவர் வீசியெறிந்த, 40 ஆயிரம் ரூபாயை செந்தில்குமார் கைப்பற்றினர்.

ஆலங்குடி டி.எஸ்.பி., செல்லப்பாண்டியன் விடுமுறையில் சென்றிருப்பதால், அறந்தாங்கி டி.எஸ்.பி., முருகேசன் கூடுதல் பொறுப்பாக பார்க்கிறார். தகவலறிந்த அவர், செந்தில்குமாரை மொபைல் போனில் அழைத்து கண்டித்தார். அவரை, செந்தில்குமார் எதிர்த்து பேசியதால், எஸ்.பி., முத்துச்சாமியிடம் புகார் செய்தார். உடனடியாக இன்ஸ்பெக்டரை மைக்கில் அழைத்து எஸ்.பி., "டோஸ்' விட்டார். இறுதியாக, சரக்கு விற்ற முத்துக்குமாரும், பணப்பையுடன் ஓட்டம் காட்டிய ஏட்டு அம்பிகாபதியும் விடுவிக்கப்பட்டனர்.

===

ஐயோ பாவம் இந்திய மக்கள். இதுபோன்றவர்களின் பாதுகாப்பில்தான் தாங்கள் மிகுந்த பாதுகாப்புடன் வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்?No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.